சிறுகதை: ராதே உனக்குக் கோபம் ஆகாதடி...!

தமிழ் சினிமா பாடல்களின் வரலாறு மற்றும் காப்பி பின்னணிகள் பற்றி கூறும் சிறுகதை
சிறுகதை | 3 friends are speaking about tamil cinema songs
சிறுகதை | 3 friends are speaking about tamil cinema songsImage credit: Chatgpt
என்.எஸ்.வி.குருமூர்த்தி

என்.எஸ்.வி.குருமூர்த்தி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான எழுத்து அனுபவம் கொண்டவர். 1970 முதல் கல்கி, குமுதம், விகடன், தினமணி கதிர், இந்து தமிழ் திசை உள்ளிட்ட இதழ்களில் எழுதி வருகிறார். சிறுவர்மணியில் சுமார் 90 நாடகங்கள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் சுஜாதா கையால் பரிசு பெற்றவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

கர்னல் கந்தசாமி ரிடையர்டு பிரெஞ்சு ஆர்மிக்காரர் பார்க்கில் தன் நண்பர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் குப்புசாமி, ரிடையர்டு ஆர்க்கியாலஜிஸ்ட் நாகமுத்துசாமி உடன் சேர்ந்து மாலையில் நடை பயிற்சி செய்தார்.

அப்போது மெல்ல முணுமுணுத்தார்.. "ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி... மாதரசே பிழை ஏது செய்தேன்... சுகுண ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி"

குப்புசாமி "சார் அருமையா பாடறீங்க... எம் கே டி பாடியது. சிந்தாமணி படம். ஆனால் நான் இந்தப் பாட்டை வீட்டில் பாடமுடியாது."

"ஏன்...?"

"வேலைக்காரி பெயர் ராதா.."

நாகமுத்துசாமி "இந்தப் பாடல் கமாஸ் ராகம். பாபனாசம் சிவன் எழுதியது. இதோட இன்னும் இரண்டு வர்ஷன்கள் இருக்கு... இரண்டுமே டி எம் எஸ் பாடியது."

"அப்படியா?"

"ஆமாம்... ஒண்ணு 'கிருஷ்ண விஜயம்' 1950 வருஷத்துப் படம். இசை எஸ் எம் சுப்பையா நாயுடுவும் சி எஸ் ஜெயராமனும். ராதே நீ... என்னை விட்டுப் போகாதேடி... இதுதான் டி எம் எஸ் பாடிய முதல் சினிமாப் பாட்டு..

நரசிம்ம பாரதி கிருஷ்ணர் வேஷம்... ராதை எங்கு போனாலும் ஐந்து கிருஷ்ணர்களாகத் தோன்றுவார். புல்லாங்குழல் ஒருத்தர் மிருதங்கம் ஜதி கொன்னக்கோல் ஒரு கிருஷ்ணர்... வாய்ப்பாட்டு ஒருத்தர், கடம் ஒருத்தர்... வயலின் போன்ற நரம்பு வீணை ஒருத்தர். ஒரு சின்ன இசைக்கச்சேரியே நடக்கும்.

ரம்மியமான காட்சி. ராதையாகத் தோன்றியவர் திருச்சூர் பிரேமாவதி. ஸ்வரம் பாடி கண்ணனுடன் ஆடுவார்.

அடுத்த வெர்ஷன் 'குலமகள் ராதை'யில் மருதகாசி இயற்றிய பாடல்... ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி... டி எம் எஸ் சிவாஜிக்காகப் பாடியது."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: −196°C!
சிறுகதை | 3 friends are speaking about tamil cinema songs

"சார் தீன கருணாகரனே நடராஜா... பாகவதர் பாட்டு என்ன ராகம்?" எனக்கேட்டார் குப்புசாமி.

நாகமுத்துசாமி சொன்னார் "குந்தளவராளி. இதேமெட்டில் ஏய்ச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க.... பாட்டு இருக்கும்... மதுரை வீரன் படம்."

கர்னல் கந்தசாமி, "திருவிளையாடல் படத்தில் சிவன் இதுபோல் வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் கொன்னக்கோல் என ஒரே பிரேமில் 5 சிவாஜிகள் வருவார்..."

நாகமுத்துசாமி "அந்தப் பாடல் பாட்டும் நானே... பாவமும் நானே... கௌரிமனோகரி ராகம். எழுதியது யார் தெரியுமா..?"

"கண்ணதாசன்..." என்றார் கர்னல்.

நாக முத்துசாமி "இல்லே... அதை எழுதியவர் கவி கா மு ஷெரிஃப் ஆவார்... ஆனால் படத்தில் கண்ணதாசன் என்றே போட்டார்கள். கா.மு. ஷெரிஃப் டைரக்டர் ஏ பி நாகராஜனின் நண்பர். ஆட்சேபிக்கவில்லை"

குப்புசாமி "மலைக்கள்ளனி'ல் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் வரிகள் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் என்கிறார்கள். இல்லை அதை தஞ்சை இராமையாதாஸ் எழுதினார் என்பாரும் உண்டு."

"மதுரை வீரன்' படப் பாட்டு ஒண்ணு பிரச்சினையாகி கோர்ட் வரை போச்சு" என்றார் குப்புசாமி

"அப்படியா"

"ஆமாம்... சும்மா கிடந்தா சோத்துக்கு கஷ்டம்... உண்மையோடு உழைப்போமே தானே தண்ணன்னா" என்ற பட்டுக்கோட்டையார் வரிகள்... இசை ஜி இராமநாதன். தயாரிப்பு லேனா செட்டியார்.

அவர் மீது கேஸ் போட்டார் காலம் மாறிப் போச்சு படத் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் ஏ வி எம்.

இது எங்க படத்தில் வரும் "கள்ளம் கபடம் அறியாதவரு.... ஏறு பூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே" பாடலின் ட்யூனே என்று வழக்கு.

(இசை வேணு எழுதியவர் முகவை ராஜமாணிக்கம்.. பாடியவர் ஜிக்கி.. நடனம் ஆடியவர் யார் தெரியுமா தமிழில் இருந்து ஹிந்திக்குப் போன நடிகை வஹிதா ரெஹ்மான்.)

லேனா செட்டியார் சார்பில் பிரபல லாயர் எத்திராஜ் ஆஜரானார். (எம் கே தியாகராஜ பாகவதர் சார்பாக லட்சுமி காந்தன் கொலை வழக்கில் வாதாடி வெற்றி பெற்று பாகவதரை விடுவித்தவர் இந்த லாயர் எத்திராஜ் அவர்கள். எத்திராஜ் கல்லூரி நிறுவனர்.)

சிறுகதை | 3 friends are speaking about
சிறுகதை | 3 friends are speaking Image credit: Gemini AI

விசாரித்த நீதிபதி இது உண்மையில் ஒரு பழங்காலத்து கிராமிய் folk song மெட்டு... அதற்கு யாரும் உரிமை கோர முடியாது எனத் தள்ளுபடி செய்துவிட்டார்" என கதையை குப்பு முடித்தார்.

"கம்செப்டம்பர் பட கிடார் மெட்டிலும் தமிழ்ப் பாட்டு இருக்கு... 'அன்பே வா' படப்பாடல் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம். அதை வெஸ்டர்ன் ம்யூசிக்கில் அமெரிக்காவில் ஒரு பெரிய இசைக்குழு இன்ஸ்ட்ரூமெண்ட்டலாக வாசிக்கிறார்கள். யூ ட்யூபில் பிரமாண்ட இசை வீடியோ இருக்கு" என்றார் நாகமுத்துசாமி. தொடர்ந்து

"ஓர் இரவு' படம். அதில் அய்யா சாமி ஆவோஜி சாமி பாட்டு எம் எல் வசந்தகுமாரி பாடியது. இசை சுதர்சனம். பாடல் எழுதியவர் கு.மா.பாலசுப்ரமணியம்.இதன் ஒரிஜினல் மெட்டு 1945ல் வந்த ஹாலிவுட்டின் டால்ஃபேஸ் படம். சிக்கோ சிக்கோ. பாட்டு அது. நடிகை கார்மெண் மிராண்டா பாடி நடித்தார்" என்றார் நாகமுத்துசாமி. தொடர்ந்து சொன்னார்...

"வேற்று மொழி மெட்டுகள் சாயலில் தமிழ்ப்படங்களில் இசை அமைத்தவர்களில் வேதா சிறந்தவர். 'யார் நீ', 'வல்லவன் ஒருவன்' படப் பாடல்கள் ஒரிஜினல் இந்திப் பட பாடல்களைவிட ரசிக்கும்படி இருக்கும். பாடல் வரிகளும் அருமையாக இருக்கும்."

குப்புசாமி, "எம் ஜி ஆர் தாய் மொழி தமிழ் அல்ல. இருப்பினும் தமிழ் இலக்கியங்கள் படித்தவர். தன் சொந்தப் படம் 'நாடோடி மன்னன்' படத்தில் ஒரு பாட்டு. கண்ணில் வந்து மின்னல் போல்..அதில் ஒரு பாரா கவிஞர் சுரதா எழுதி இருந்தார்...சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே.

எம் ஜி ஆர் கவிஞரிடம் சந்தேகம் கேட்டார். மின்னல் பார்த்து தாழம் பூ மலருமா என்று. உவமைக் கவிஞர் சுரதா சொன்னார். இது குறுந்தொகை இலக்கியத்தில் ஒரு பாடலில் வருகிறது. வேண்டாம் என்றால் மாற்றி விடலாம்.

"வேண்டாம் அப்படியே இருக்கட்டும்... நன்றாக உள்ளது", என்றார் எம் ஜி ஆர். இசை நயம் பாடல் வரிகளைக் கூர்ந்து கவனிப்பார் எம் ஜி ஆர்.

நிறைய பழைய, புதிய சினிமா பாடல் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் அவர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சரியான திருப்பம்!
சிறுகதை | 3 friends are speaking about tamil cinema songs

கண்ணதாசன் வாலிக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தாலும், புலமைப் பித்தன், பூவை செங்குட்டுவன் போன்றோரையும் அவ்வப்போது கூப்பிட்டு ஒரு பாட்டு எழுதுங்கள் என்றவர். பழம்பெரும் பாடலாசிரியர்கள் மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியம் இவர்களுக்கும் வாய்ப்புகள் தருவார்.''

கர்னல் சொன்னார்.. "ஸ்கைஃபால் ஜேம்ஸ் பாண்டு படத்துக்கான இசை அமைத்ததுதான் இது வரை அதிகச் செலவு பிடித்த இசை அமைப்பாம்"

நாகமுத்துசாமி சொன்னார் "பாண்ட் படங்களில் ஒரு விசேஷமான கிடார் ம்யூசிக் ஆக்ஷன் காட்சிகளில் ஒலிக்கும். அதை உருவாக்கிய மோண்ட்டி நார்மன் என்பவர் பெற்ற ராயல்டி 23 வருடங்களில் ஆறு லட்சம் பவுண்டுகள்... அந்தக் குறிப்பிட்ட இசை ஒரு நிமிட காலமே வரும். ரசிகர்கள் குதூகலிப்பார்கள்."

"நம் வேதா சார் விடவில்லை... அப்படியே 'அதே கண்கள்' படத்தின் காட்சிகளில் செருகிவிட்டார்..." என்றார் கந்தசாமி

"காப்பி ரைட் பிரச்னை வராதா?" குப்பு கேட்டார்

"காப்பி ரைட்ன்னா பொதுவா முதலில் காப்பி அடிக்கிறவங்களோட ரைட்ஸ்தான். இசை ஏழு ஸ்வரங்கள். எட்டாவது ஸ்வரம்ன்னு ஒண்ணு இருக்கா... எல்லாமே பழசுதான்... லிரிக்ஸ், தாளம், பி ஜி எம் தான் வேறு..

"முக்கியமான ஒருத்தரே ஆரம்பக் கால டி வி பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கார்... நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்... 'அன்பே வா' பாட்டு மாடல்தான் 'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா.... ' அபூர்வசகோதரர்கள் பாடல் என்று" என்றார் நாகமுத்துசாமி.

"அது பரவயில்லே சார்... கந்த சஷ்டி கவசம் போன்ற ஆன்மீக இசையை டூயட்டுக்குப் போட்டு விடறாங்க... அதுதான் மனசுக்கு சங்கடமா இருக்கு" என்றார் குப்புசாமி வீட்டுக்கு எல்லோரும் கிளம்பு முன்.