சிறுகதை: வாழ்க்கை எட்டிப் பார்க்கும் தூரம்தான்!

Happy Man - சிறுகதை
Happy Man - சிறுகதைAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

நிம்மதியான உறக்கமும் வாழ்க்கை ரகசியம் தரும் மன அமைதியும்!

"கொஞ்சம் யோசிச்சோம்னா நம்ம வாழ்க்கையை நாம் சரியாக புரிந்துகொள்ளலாம்!"

"அப்படியா சந்துரு... கொஞ்சம் விளக்கமா சொல்லு?"

"அது ஒன்னும் புரியாத புதிர் கிடையாது... கேட்டுக்க? அதாவது நாம இறந்துபோனா நம்முடைய அஸ்திங்கிறது ஒரு அரை கரண்டி உப்புதான் (one tea spoon salt). அவ்வளவுதான் நம்முடைய இருப்புங்கிறது?"

"கோபி கோவிச்சுக்காம மேலே சொல்லு?"

"இதுதான் நம்முடைய இருப்பினுடைய அடையாளம். ஆனால், அந்த உப்பு மண்ணோடு மண்ணா போறதுனால அது எல்லா சுவைக்கும் காரணமா இருக்கு.

"O, I See!"

"என்ன ஆச்சரியமா பாக்குற... எட்டிப் பார்த்தா வாழ்க்கை எங்கே ஒளிந்து இருக்கு என்கிறதை கத்துக்கலாம்: அதிலிருந்து வெளி வருவதும் ஈசி."

"அப்படியா மச்சான்... கொஞ்சம் கொஞ்சமா புரியுதுடா... மேலே சொல்லு மாப்பிளே?

"இந்த பாரு, நமக்கு ஈசி ஆக ‘வாழ்க்கை’ என்கிற அந்தச் சுவையை நாம சுவைக்கப் பிரபஞ்சம் ஒரு ஏற்பாட்டை எல்லோருக்கும் கொடுத்து வைத்துத்தான் இருக்கிறது. அதைப் புரிஞ்சுக்கிட்டு வாழவேண்டிய ஒரு பிரபஞ்ச புரிதல் நமக்கு இருந்தா போதும்.

அதாவது, விஞ்ஞான ரீதியா நம்முடைய காலமானது ஒரு நாளைக்கு 24 மணி நேரமா பிரிக்கப்பட்டு இருக்கிறது. சரியா?"

"டேய் என்னை என்ன மக்குன்னு நினைச்சியா? சொல்லு மாப்ள!"

"நம்ம தலைவர் பாணியில சொன்னா... வாழ்க்கையை எட்டு எட்டாக பிரிச்சுக்க என்று சொல்றாரு இல்லையா?"

"ஆமா... ஆமா..."

"நான் அதையும் சுருக்கி ஒரு மூணு எட்டு. அதாவது எட்டு, எட்டு, எட்டு மணி நேரமா பிரித்து செயல்பட்டா போதும்.

நாம எந்த எட்டு மணி நேரத்தில் என்ன செய்யணும்; sorry நம்ம என்ன செய்ய வேண்டாம்; அதுவே (பிரபஞ்சம்) சொல்லும்; அதுபடி நடந்தாலே போதும்."

Life Philosophy - வாழ்க்கை ரகசியம்
Life Philosophy - வாழ்க்கை ரகசியம்AI Image

"டேய் நீ ஒரு தத்துவத்தை என் முன்னால நிலைநிறுத்தப் பார்க்கிறே; நல்லாவே புரியுது. எல்லாமே நல்லா நடந்தா, எல்லோருக்கும் நன்மைதானே. அருமையா இருக்குடா. சொல்லு! சொல்லு!"

"இதன் மூலம் நம் பிரபஞ்சத்தோட ஒட்டி, உறவாடி, வளமாக, மனமகிழ்ந்து, அகமகிழ்ந்து, ஆரவாரமிட்டு, அர்ப்பணிப்போடு, ஆனந்தமாக கொண்டாடி மகிழலாம்.

இதோ அந்தச் சூத்திரம் உங்களுக்காக...

முதல் எட்டு மணி நேரம்: ஓய்வு.

அடுத்த எட்டு மணி நேரம்; வேலை.

பிறகு வரக்கூடிய 8 மணி நேரம்: அமைதி.

இதையும் படியுங்கள்:
கதை சொல்லும் கடிதங்கள்... மனதை உருக்கும் உணர்வுகள்!
Happy Man - சிறுகதை

ஓய்வு நேரங்களில் தூங்கவேண்டும்: அதாவது மனதிற்கு ஓய்வு கொடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்: அந்த நேரத்தில் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; தயவு செய்து reelல் மாட்டிக்கொண்டு உங்கள் real lifeஐ கெடுத்துக்கொள்ளாதீர்கள்!

அடுத்து வரக்கூடிய எட்டு மணி நேரம் என்பது நம்முடைய உடம்பிற்கான உழைக்கும் நேரம்; அந்த நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; முடிந்த அளவு பயனுள்ள வார்த்தைகளை பேசி, பழகக் கற்றுக்கொள்ளுங்கள்; மேலும், உங்களுடைய உறவுகளையும், நண்பர்களையும், தேடி அழையுங்கள்; அவர்கள் அழைப்புகளை ஏற்று மகிழுங்கள்; அவமானப்படுங்கள்; தப்பில்லை மனம் பதப்படும்; அவமானப்படுத்துபவர்களும் நம் சக மனிதர்கள்தானே?

எப்பொழுதுமே மற்ற உயிரினங்கள் நம்மை அவமானப்படுத்தாது? காரணம்! அதற்கு வேண்டியது உணவும் அதன் பிறகு அதன் சந்ததியினுடைய வாழ்க்கையும்தான்.

நாம்தான் பிறரைப் பற்றி அதிகமாக நினைத்து, பிறருக்காக வாழ்ந்து, சுயத்தை இழந்து, சுயநலமாக வாழ்ந்துபிறகு அதுவும் கெட்டு கீழ்த்தரமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

அவற்றைப் புறக்கணிப்பது நம்முடைய பிரபஞ்சத்தினுடைய விதி- ஏற்றுக்கொள்வோமா?

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சுமந்த கடன்
Happy Man - சிறுகதை

கடைசி எட்டு: கடைசியாக வாழ்க்கை என்பது அமைதிக்கான பாதை.

முடிந்தவரை உங்கள் பெற்றோரை, முதியோர்களை மதித்து மரியாதை செய்யுங்கள்.

‘நாம் என்ன கொடுக்கிறோமோ? அவைதான் திரும்ப நமக்கு வரும்! குடும்பத்தை பேணி காத்துக்கொள்ளுங்கள்; சமூகம் இல்லை என்றால் நாம் சின்னாபின்னமாக ஆகிவிடுவோம்; நாம் ஒரு சமூகப் பிரதி’ என்பதை மறந்து விடக்கூடாது.

We are social animals; we can't live without society.

நம் சமுதாயத்தில் ஒரு கேடு என்றால், அது நமக்கும் கேடுதானே!

குறிப்பாக குடி, போதை. இவை இரண்டும் சமுதாயத்தில் இருக்கும்போது நாம் செய்யாவிட்டாலும் நம்மையும் தாக்கும்."

இந்த எளிய பிரபஞ்ச சூத்திரத்தைப் பின்பற்றுவதன் மூலம், ரீல்களுக்குள் (Reels) தொலைந்துபோன உங்கள் உண்மையான வாழ்க்கையை நீங்கள் மீட்டெடுப்பீர்கள். மன அழுத்தம் நீங்கி, குடும்ப உறவுகளையும் சமூகத்தையும் மதித்து, தினமும் 24 மணி நேரத்தையும் குற்ற உணர்ச்சியில்லாமல் ஆனந்தமாகக் கொண்டாடும் புதியதொரு மனப்பக்குவத்தை நீங்கள் அடைவது உறுதி.

logo
Kalki Online
kalkionline.com