

நிஷாவுக்கு இந்த முறையும் ஜான்தான் பார்ட்னர்.
“பார்ட்னர்னு சொல்லாதீங்க கலீக்னு சொல்லுங்க...” என்பான் தொணதொணனு பேசுவான். வேலையிலே கெட்டிக்காரன். சில சமயங்களில் சீனியர் ஆபீஸர்களைவிட சூப்பரா கேஸை முடிப்பான் கொஞ்சம் ப்ளேபாய்தான். லொடலொடனு சீரியஸ் நேரங்களில்கூட ஜோக்கடிப்பான் எப்போதும் லேசாக தண்ணி வாடை அடிக்கும். “ஏய் பீர்தான். பிராமண தண்ணி” என்பான்.
ஒவ்வொரு கேஸூம் முடிப்பானா என்று சந்தேகப்பட விரைவில் முடிப்பான். நேரத்துக்கு வரமாட்டான். நேரத்துக்கு வேலை செய்யமாட்டான். திடீரென்று சேரிப்பகுதியில் குற்றவாளி பதுங்கியிருக்கான் என இரவு 3 மணிக்கு வரச்சொல்லி குற்றவாளியை வலை போட்டு பிடிப்பான்.
சீனியர்கள் ஜானா? ஐயோ வேண்டாமென அலறுவார்கள். ஆனால் முக்கியமான கேஸ்களில் ஜானைத்தான் அசிஸ்டென்ட்டாக அனுப்புவர்.
“என்ன ஆபீஸூக்கு வரியா இல்லை 5 ஸ்டாருக்கு வந்துடறியா?” நிஷா கேட்க...
“மேடம் 5 ஸ்டார்னா சாக்லெட் இல்லே?”
“ஜோக்காயில்லைனா உன் வேலை காலி. ஜோக்னா அதை சாணியில் முக்கு.”
“அதான் உங்களிடம் முக்கினேன்.”
“உன்னை ஐ...”
“ஸாரி மேடம் நீங்க யாரு? சினிமா ஹீரோயின் மாதிரி.”
“போதும் ஓட்டல் அபி ரூம் நம்பர் 310...”
“ரூமுக்கு வரச்சொல்றீங்களா? மேடம் இதை உங்களிடம் எதிர்பார்க்கலை. நான் உங்களைவிடச் சின்னவன்.”
“ஷிட். நேரே வந்தேன்னு வைச்சக்க...”
“வைச்சுக்கவா..?”
சிரித்துவிட்டாள் நிஷா.
“டேய் சினி ஸ்டார் வீணா செத்துகிடக்கா.”
“வீணா செத்துக்கிடக்காளா? போங்க மேடம் யாராவது வீணா சாவாங்களா?”
“டேய் திஸ் இஸ் த லிமிட். வந்தா வா... இல்லைனா நாசமா போ...”
“மேடம் நான் அல்ரெடி அங்கேதான் இருக்கேன். நீங்கதான் லேட்.”
“தட்ஸ் குட். அங்கேயே இரு. நான் வந்துடறேன். பரவாயில்லையே. பையன்” என்று நினைத்தாள்.
“அங்கேயே இருந்தால் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடிக்கறது?”
“நான் வந்தாச்சு? என்று வந்தாள் அழகிய லைலாவாய். மேலும் வர்ணித்தால் கட் பண்ணிடுவாங்க. போடமாட்டாங்க.”
“மேடம் என்ன சினிமாலே பாடலில் வர ஹீரோயின் கணக்கா வரீங்க. கொலை கேஸ் இது. பிணம் நாறும்”
“ஷட் அப்” என்ற நிஷா ஓனர் ராமனை கூப்பிட்டு வீணா எந்த ரூமில இருந்தா? என்று கேட்டாள்.
“312. . முதல் தளம்”
“310னு சொன்னீங்க?”
“அப்படியா சொன்னேன்?”
“கரெக்டா சொல்லணும். இல்லைனா சந்தேகம் வரும். ஓகே 310ல் யாரிருந்தாங்க?”
“ஒருவருமில்லை,. ரூம் காலி”
“இஸ்ட்? இனிமே எங்கிட்ட விடுங்க மேடம். டிராயரை உருவிடறேன்” ஜான் என்கொயரியை சொந்தமாடினான்.
“வீணா எத்தனை நாளா இங்கே தங்கறாங்க?” “எங்கே தங்கறாங்க? ஊர் சுத்திட்டு காலை 4 மணிக்கு வரா”
“இன்ட்ரஸ்டிங். எங்கே போறாங்க?”
“அதெல்லாம் கேட்கக்கூடாது. பெர்சனல்.”
“பெர்சனல்? பெரிய பெரிய ஆட்களின் பெர்சனலைக் கையைவிட்டு குடைவதுதான் எங்க வேலை. சொல்லுங்க நடிகர் மோனு எப்ப வந்தான்?”
“நடிகர் மோனுவா...?”
“நடிக்காதீங்க... ஏன்டா கொலை செஞ்சீங்க வீணாவை?”
”நடிக்கறேனா? சும்மா மிரட்டாதீங்க...”
“உங்களுக்கு 10 விரல்களின் நகங்கள் வேணாம்னு நினைக்கறீங்க போல”
“பாருங்க இதெல்லாம் வேணாம். என் லாயர் வரட்டும்.”
“உன் லாயர் வரதுக்குள்ளே உனக்கு பூஜை முடிஞ்சுடும். கேட்கற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க...”
“டெய்லி மாலை 7 மணிக்கு வந்து அரை மணி நேரத்தில் ரெண்டு பேரும் கிளம்பிடுவாங்க ஜோடியா...”
“பொறாமையா?” .
”ரூம் பாய்களிடம் சிரித்து சிரித்து பேசுவாள்.. டி ஷர்ட் சென்ட் பாட்டில்கள் நிறைய கொடுப்பா. ”
”வெரிகுட். இப்ப சொல்லுங்க போன மாசம் எப்போ வந்தான்? ”
”இதே பத்து தேதிகளிருக்கும்.”
”உங்களுக்கு தெரியுமா? அவன் போலீஸ் சந்தேக லிஸ்டிலிருக்கான்.”
“வைரக்கடத்தல் லிஸ்டில்தானே?”
“உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் சொல்லவேயில்லையே. உங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. இதிலே யார் யார் இன்வால்வ்டுனு. சொல்லுங்க...”
நடுவிலே ஃபோன்.
“தம்பி மணி அப்புறம் பேசி்க்கறேன்.”
“நாங்க என்ன முட்டாளா? பேசு ஸ்பீக்கரை போட்டு பேசு.
”பெர்சனல் ஸார்.”
”பேசுய்யா. ஹலோ.”
”அண்ணே நாம சொன்னபடி சேட்டு பணம் தரலை. ஆளை வைச்சு மிஸ்டர் மோனுவை தூக்கிட்டேன்” என்றான்.
”ஐயோ"
”பின்னே? 22 கோடி வைரத்தை அமுக்க பாத்தா? நம்ம வேலுவை மோனு வழியிலேயே தூக்கிட்டான்.”
“ஐயோ...”
"வைரத்தை கேட்டு முதலில் வேலுதான் சுட்டான். வைரத்தை தராமல் மோனு வேலுவை கண்டபடி சுட்டு சாகடிச்சிட்டான்.
“இப்ப அது வீணாவின் தலைமுடி கொண்டையில் இருக்கு.”
“கரெக்ட். போதும்...” தம்பி ஜான் ராமிடமிருந்து ஃபோனை பிடுங்கினான்.
”கதை புரிஞ்சுபோச்சு. மோனு நடிகை வீணாவை எல்லாரையும் ஏமாத்தி்ட்டு வைரத்தோடு ஓடிடலாம் என்று ஆசை காட்ட அவள் சம்மதிக்கவில்லை. வீணாவை கழுத்தை நெருக்கி....வைரத்தை தேட கிடைக்கலை. அதற்குள் ரூம் சத்தம் கேட்டு உள்ளே வர மோனு ஓடிட்டான்.
உயிர் போகும் நிலையில நிஷா வைரத்தை ரூம் பாயிடம் தர, அவன் உங்களிடம் வைரத்தை காட்ட, வைரத்தை நீங்க ஈஸியா ஆட்டைய போ்ட்டுட்டீங்க. ஒரே ஒரு வைரக்கல்லை ரூம்பாயிடம் தந்து வைரத்தை வைரத்தை வைரத்தை...”
“நேரில் பாத்தா மாதிரி சொல்றீங்க..”
“ஆமாம். ரூம் பாய் உளவாளி.. இந்த ஓட்டலில் வைர டிராஃபிக் நடக்குதுனு கேள்விபட்டு நாங்க அனுப்பிய ஆளு” ஜான் முடிக்க, “சபாஷ் ஜான்” என்று வாய் நிறைய பாராட்டினாள்.
வெளியே வந்து “எப்ப இந்த ரூம்பாயை அனுப்பினோம்?”
“சும்மா பீலா.. நல்ல பையன். இனிமேதான் போலீஸில் சேர்க்கணும்” அசால்டாய் சொன்ன ஜானை ஆச்சர்யமாய் பார்த்தாள் நிஷா.