அடுத்தடுத்து இரண்டு கதைகள்

1. கல்யாணம் 2. வலி
 தமிழ் கதை | Father and daughter and writer
தமிழ் கதை | Father and daughter and writerAI Image
Updated on
MM strip
MM strip

1. கல்யாணம்:

 தமிழ் கதை | Father and daughter
தமிழ் கதை | Father and daughterAI Image

"ரதி…..,"

"என்னப்பா?'

“இங்க வா. நீ கல்லுரி படிப்பு, முடிச்சாச்சு. இனிமே, உனக்கு கல்யாணம்தான். செய்து வைக்க வேண்டியது, பெத்தவங்க கடமை. உனக்கு பையன், பார்த்தாச்சு. வேறு யாரும் இல்லை, உன் அத்தை மகன் மதன்தான். உனக்கு நிகரான, ஆண் அழகன். நீ பேரழகி.. சரியான பொறுத்தம். மதனும் மிகுந்த ஆர்வத்துடன், ஒத்துக்கிட்டான். அத்துடன், என் அக்கா சொத்தெல்லாம், உனக்குத்தான் வந்து சேரும். மதன், ஒரே பிள்ளை இல்லியா. ரொம்ப மகிழ்வா, வாழலாம். ரெடியா இரு. நாளைக்கு ஒப்புக்கு, பெண் பார்க்கும் படலம். பின், நிச்சய தாம்புலம் மாற்றிக்கொள்ளுதல். அடுத்த இரண்டு மாதத்தில், உங்கள் திருமணம், ஓஹோன்னு ஊரே மெச்சும் விதத்தில் நடக்கும். புரிஞ்சதா?”

அப்பா பேசி விட்டு, அவள் முகத்தை பார்த்தார்.

"வேண்டாம்பா, இந்த கல்யாணம். எனக்கு அத்தானை கட்டிக்க விருப்பமில்லை.”

"எடு செறுப்பை. நான் சொன்னா, சொன்னதுதான்."

அவர் கோபத்துடன் எழுந்தார்.

ரதி உள்ளே ஓடினாள்.

"அப்பா" என்றாள். அவர், திரும்பினார். அவள் கையில் வைத்திருந்த, ஒரு வாழைப் பழத்தை, சிறிது சிறிதாக ருசித்து கடித்தவள், தன் தந்தையை பார்த்தாள்.

"என்ன?"

"இந்தாங்க பழம். மீதியை நீங்க சாப்பிடுங்க."

“இடியட். ஒரு மரியாதை வேணாம். இப்படியா கடிச்ச பழத்தை ஒரு தகப்பனுக்கு கொடுப்பது?” கோபத்துடன், சத்தமிட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஓ ப்ரியா…!
 தமிழ் கதை | Father and daughter and writer

“அப்படியாப்பட்ட பழத்தைதான் எனக்கு கொடுத்து சாப்பிட சொல்றீங்க. ஆமாம்பா. மதன் ஆண் அழகன்தான். என் காலேஜ்லதான் படித்தான். அவனுக்கு, எத்தனை பெண்கள் சினேகம் தெரியுமா. அவங்க இவனை நம்பி, அழுது புலம்பியது எனக்குத்தான் தெரியும்," என்று கூறி ரதி அழவும், அப்பா கோபத்துடன் அவளிடம் இருந்து, அந்த கடித்த வாழைப்பழத்தை வாங்கி, வேகமாக வாசலுக்கு சென்று, அதை தூற எறிந்தார்.

ரதி அடைந்த, மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘அப்பா’ என்று அவரை கட்டிக்கொள்ள, அவர் அன்புடன் மகள் முதுகை தடவி விட்டார்.

*************

2. வலி:

 தமிழ் கதை | The writer is writing a story while weeping
தமிழ் கதை | The writer is writing a story while weepingAI Image

"யோவ் எழுத்தாளரே! வெளியே வாய்யா."

தயாரிப்பாளர், ஒரு பெரும் குரலிட்டார்.

ஓலைக் குடிசையில் இருந்து, சோடாபுட்டி சோமநாதன், வெளியே வந்தார்.

"வாங்க, வாங்க" என்றார் எழுத்தாளர்.

காரில் இறந்து இறங்கியவர், குடிசை வீட்டின் உள்ளே சென்றார்.

"எங்கய்யா நாற்காலி?"

"மன்னிக்கனும். என் பேரன், சரியான வாலு. போன வாரம் லீவுக்கு வந்தவன், அதை போட்டு உடைச்சுட்டான்."

"சரி சரி. ஏதாச்சும் பாய் இருந்தா போடு. அதை வெளியில மரத்துக்கு கீழே போடு. "எழுத்தாளர், ஓடிப்போய் ஒரு கிழிந்த பாயை எடுத்து போட்டார்.

"ஏன்யா, நீ நம்ப ஊர்காரன்னு சொன்னியேன்னு, என் படங்களுக்கு கதை எழுத எத்தினி வாய்ப்பு, கொடுத்தேன். உன் ஒரு கதையை கூட, என் இயக்குநர் குழு, ஏத்துக்கலே. அதே என் போன படம் பார்த்தியா. நூறு நாள் ஓடி சாதனை செய்துச்சுய்யா. அந்த எழுத்தாளர், எப்படி எழுதினார். அப்படி ஏன், உன்னால எழுத முடியலே? இதுதான், உனக்கு நான் கொடுக்கும் கடைசி வாய்ப்பு.

இதையும் படியுங்கள்:
மரணத்தை வென்ற வாக்குறுதி - (அல்பேனியா நாட்டுப்புறக் கதை)
 தமிழ் கதை | Father and daughter and writer

இனிமே எல்லாம் உனக்கு லாட்ஜ் கிடையாது. ஒரு அறை வாடகைக்கு, எடுத்திருக்கேன். ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் சம்பளம். காலை அரை பட்டை, மதியம், இரவு, முழுபட்டை சாதம், கொடுக்க, ஏற்பாடு செய்திருக்கேன். சம்பளத்துல, நீ அக்கம் பக்கம் இருக்கும், ஓட்டல்லேருந்து சாம்பாரோ ரசமோ வாங்கிக்கோ. சௌகரியம் கொடுத்தா, நீ சரியா எழுத மாட்டே. அதனால இப்படி செய்திருக்கேன்.

ஒரு மாசம்தான் அவகாசம். கதையை கொடுத்துட்டு, அறையை காலி செய்துட்டு, போயிடனும். புரியுதா?" தயாரிப்பாளர் கடுமையாகவே, பேசினார். எழுத்தாளர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

"கேக்கிறதுக்கு மன்னிக்கனும். போன வெற்றிப்படத்துக்கு கதை எழுதிய, அதே கதாசிரியரையே பயன்படுத்தியிருக்கலாமே?"

அதான்யா, நானும் நெனச்சேன். பாழாப்போனவன், லட்சக்கணக்குல பணம் வந்ததும், புது கார் வாங்கி ஓட்டறேன்னு ஓட்டி, எங்கயோ மோதி, இறந்துட்டான்யா. ‘சரி சரி’ நீ எப்படியாச்சும் இந்த வாய்ப்பை நழுவ விடாதே. நம்ம ஊர்க்காரன்னு சொல்றே. சொல்லிட்டேன்."

தயாரிப்பாளர் காரில் ஏறி விரைந்து சென்றார்.

"அடியே மங்களா சின்ன துணியை மஞ்சள்ள நனச்சு அதுல ஒரு ரூபாயை முடிஞ்சு எடுத்து வா," என்றார்.

உடன் அதை, பெருமாள் பாதத்தில் வைத்தவர், அடுத்து தன் பெற்றோர்கள் படம் முன், விழுந்து வணங்கினார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எங்கே என் ஜீவனே...?
 தமிழ் கதை | Father and daughter and writer

படம் வெளியானது. ‘வெற்றி வெற்றி’ ; ‘மாபெரும் வெற்றி’; ‘விஸ்வரூப வெற்றி’. ‘இமாலய வெற்றி’.

வெற்றி விழாவில், காரணத்தை கதாசிரியர் சோடாப்புட்டி சோமநாதன், கூறினார்.

“இது சினிமா கதை இல்லை. இது என் சொந்த கதை. என் தந்தை, ஒரு பெருமாள் கோயில் அர்ச்சகர். நான், ஒரே மகன். தினம், ஒரு பட்டை சாப்பாடு, காலை, மதியம், இரவு என்று கொடுப்பார்கள். அதில் நானும் என் பெற்றோரும் சாப்பிடுவோம்.

அம்மா, ஒரு குழும்போ, ரசமோ ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை செய்வார்கள். தனக்கு பட்டையில் சாப்பாடு குறைத்துக்கொண்டு, அம்மா அதை எனக்கு போடுவார்கள். அந்த பட்டை சோற்றை, நினைவு படுத்திய தயாரிப்பாளர், என் ஆன்மாவையே எழச்செய்தார். அர்ச்சகரான, என் தந்தை கிருஷ்ணமாச்சாரியாரை, முன் கொண்டு வந்து நிறுத்தினார். பட்டை சோற்றை நாங்கள் மூவரும் சேர்ந்து உண்ணும் அந்த இளமை கால நிலையை, நினைவுக்கு கொண்டு வந்தார். கதை முடித்தேன். இப்போது, வெற்றி விழாவிலும் பங்கேற்றேன். என்னை பெற்றவர்களுக்கும், அப்பா அர்ச்சித்த கோவிந்த ராஐ பெருமாளுக்கும், முக்கியமாக பட்டை சோறு அன்னத்துக்கும், வெற்றியை சமர்ப்பிக்கிறேன்."

கரவொலி இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com