சிறுகதை: என் அக்கா…!

வரதட்சணை வெறியால் பறிபோன இரண்டு உயிர்கள் - நெஞ்சை உருக்கும் சிறுகதை!
சிறுகதை | Bride's family and groom's family
சிறுகதை | Bride's family and groom's familyImage credit: Gemini AI

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
MM strip
MM strip

நாங்கள் ஒன்றும் பணக்காரர்கள் அல்ல. நடுத்தர ஏழை குடும்பம். என் அப்பா ஒரு விபத்தில் இறந்துபோனார். எங்களுக்கு பேரதிர்ச்சி. யாருமே எதிர்பார்க்காத விஷயம். அக்கா பெயர் ஜெயந்தி. அவர் அப்போதுதான் தபால் தந்தி துறையில் குமாஸ்தவாக சேர்ந்து இருந்தார். குடும்பச் சுமையை அவர் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் 9வது படித்துக்கொண்டு இருந்தேன். அரசு பள்ளிதான்.

ஆனால், நான் தனியார் பள்ளிக்குப் போக விரும்பினேன். அக்கா எல்லா உதவிகளையும் செய்தார். எனக்கு விருப்பப்பாடமாக கணக்கு கிடைத்தது.

அம்மா எப்போதும் ஜெயந்தியின் திருமணம் பற்றி பேசி வந்தார். அதில் சிக்கல் இருந்தது. அவர் கல்யாணம் முடித்து வேறு வீட்டிற்கு போய்விட்டால் என்னையும், அம்மாவையும் யார் கவனிப்பார்கள்…? வீட்டு வாடகை யார் கொடுப்பார்கள்...? இதைதான் ஜெயந்தி யோசித்தார்.

அவர் தினமும் காலை மற்றும் மாலை ஆபிசு போய் வருகையில் இளைஞர் சேகர் என்பவர் ஒரு டீ கடையில் உட்கார்ந்து பார்ப்பார். இது ஜெயந்திக்கு தெரியும். ஆனால் ஜெயந்தி ஒன்றும் செய்யவில்லை.

ஒரு நாள் சேகர் ஜெயந்தி ஆபிசுக்கு வந்து 'அவருடன் பேச வேண்டும்' என்று சொன்னார்.

ஜெயந்தி ''உங்கள் முகவரி கொடுங்கள். ஞாயிற்றுக்கிழமை காலை உங்கள் வீட்டிற்கு வருகிறேன். நாம் பேசலாம்'' என்றார்.

சேகர் ஒரு பேப்பரில் தனது முகவரியைக் கொடுத்தார்.

ஜெயந்தி ''ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்'' என்றார்.

ஞாயிற்றுக்கிழமை. காலை 10 மணி. ஜெயந்தி, சேகர் வீட்டிற்கு வந்தார்.

சேகர் அக்காவை வரவேற்று உட்கார சொன்னார். அக்கா துணைக்கு என்னையும் அழைத்து சென்றார்.

அக்கா நேரே விஷயத்திற்கு வந்தார்.

''எனக்கு உங்களைத் திருமணம் செய்துகொள்ள ஆசைதான்.. ஆனால்…!'' என்று இழுத்தார்.

அதற்குள் சேகர் அம்மா, அப்பா வரவேற்பு அறைக்கு வந்தனர்.

சேகர் இருவரையும் அறிமுகம் செய்துவைத்தார்.

சேகர் தனது அம்மாவிடம், ''நான் சொன்ன பெண் இவர்தான். ஒரே தம்பி இவர்தான். அப்பா ஒரு விபத்தில் காலமானார்…!'' என்று தொடர்ச்சியாகச் சொல்லிமுடித்தார்.

சேகரின் அம்மா ஜெயந்தியிடம் ''உனக்கு சேகரைப் பிடித்து இருக்கிறதா…?'' என்று கேட்டார்.

''ஆமாம்..!''

''அப்போ உங்கள் அம்மாவிடம் பெண் கேட்க வரலாமா…?''

''அம்மா… அதில் ஒரு சிக்கல் உள்ளது...''

''அம்மா மற்றும் தம்பி இருவரையும் பார்த்துக்கொள்ள வேண்டியது நான்தான். கல்யாணம் முடிந்தாலும் என் வருமானத்தை எதிர்பார்த்தே இருவரும் உள்ளனர். ஆதலால்...''

''புரிகிறது… என் பையன் கல்யாணமே வேண்டாம் என்று இருந்தான்.. உன்னைப் பார்த்துவிட்டுத்தான் கல்யாணம் பற்றி பேசத் துவங்கினான். நீ உன் சம்பளப் பணத்தை அம்மா தம்பிக்குச் செலவழிக்க நாங்கள் தடை சொல்லமாட்டோம். பையனுக்கு வங்கி ஆபிசில் ஆபிசர் வேலை. நல்ல வருமானம் வருகிறது. எனவே, நீ கவலைப் படவேண்டாம்.. தாரளமாக உன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளலாம்..!''

''ரொம்ப நன்றி அம்மா…!''

''அப்போ நாங்கள் உன் வீட்டிற்கு வந்து பெண் கேட்கலாமா…?''

''தாராளமாக… வாருங்கள்..!''

எனக்கு ஒரே குஷி. மனம் துள்ளியது. அக்கா கல்யாணம் நினைத்து மகிழ்ந்து போனேன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ‘குடுகுடுப்பைக் காரன்‘
சிறுகதை | Bride's family and groom's family

அடுத்த ஞாயிற்றுக்கிழமை. காலை 10 மணி.

சேகர் அவர் அம்மா, அப்பா வந்து கதவைத் தட்டினார்கள்.

நான்தான் கதவைத் திறந்தேன்.

சேகர் ட்ரிம்மாக உடை அணிந்து இருந்தார்.

என் அம்மா வந்து.. ''வாங்க..வாங்க..உக்காருங்க..!'' என்று வரவேற்றார்.

சுமார் இரண்டு மணி நேரம் பேசி அடுத்த மாதம் கல்யாணம் என நிச்சயம் செய்தார்கள்.

என் அக்காவிற்கு கல்யாணம்..! ஜாலி…! என்று இருந்தேன். நிச்சயமாக அக்கா என்னையும், அம்மாவையும் காப்பாற்றுவார் என தைரியமாக இருந்தேன்.

அடுத்த வாரம் நிச்சயதாம்பூலம் செய்ய சேகர் வீட்டிற்கு நாங்கள் மூவரும் சந்தோஷமாக போனோம். பஜ்ஜி சொஜ்ஜி கிடைத்தது. சேகர் அம்மா ஒரு நடுத்தர வயது வாட்டசாட்டமான ஒருவரைக் காட்டி, இவர்தான் சேகரின் சித்தப்பா. ஐஜி கோதண்ட ராம். இவர்தான் எங்கள் குடும்பத்திற்கு முக்கியமான நபர். அவர்தான் எல்லா வகையான முடிவுகளையும் எடுப்பார் என்று சொல்லி இழுத்தார்..

ஐஜி குறுக்கிட்டு, தானே அதிகார தோரணையில் பேசினார்.

''கல்யாணம் முடிந்து உங்கள் மகள் உங்களையும் தம்பியையும பார்த்து கொள்வது எல்லாம் சரி.. ஆனால் இந்தக் கல்யாணம் நடக்கவேண்டும் என்றால் நீங்கள் வரதட்சனையாக ஒரே ஒரு கார் வாங்கித் தரவேண்டும். அம்பாசிடர் கார் போதும்...'' என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

அக்கா, அம்மா.. . கலங்கிப் போனார்கள்.

இருவரும் அதிர்ச்சி அடைந்துபோனார்கள்.

அவர்களால் பேச முடியவில்லை. சில நிமிடங்கள் கழித்து அம்மா… “எங்களிடம் அவ்வளவு பணம் இல்லையே.. நாங்கள் எங்கே போவோம்..? “ என்று கண்ணீர் ததும்பச் சொன்னார்.

எனக்கு ஐஜி பேசியது பிடிக்கவில்லை.

என் அக்கா, சேகரிடம் நேரடியாக கேட்டார்.

''என்னங்க அவ்வளவு பணத்திற்கு நாங்கள் ஏங்கே போவோம்..?"

''சேகர்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்…?'' என்று அம்மா கேட்க,

சேகர் உறுதியாக.. ''நான் எங்கள் சித்தப்பா பேச்சை மீறமாட்டோம். இது எங்கள் குடும்பப் பழக்கம். நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை… !'' என்று சொல்லி விட்டார்.

அக்கா ''அப்போ நிச்சயதாம்பூலம்…?'' எனக் கேட்க,

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தேவகி..!
சிறுகதை | Bride's family and groom's family

ஐஜி, ''நீங்கள் கார் வாங்கி கொடுத்த பின்னர்தான் நடக்கும்'' என்று சிங்கம் போல் கர்ஜித்தார்.

அம்மாவுக்கு இடி மின்னல் தலையில் விழுந்தது.

ஒரே நிமிடம்தான்… அம்மா நெஞ்சில் கை வைத்து “முருகா.. முருகா..." என்று கூறி தரையில் விழுந்தார்.

சேகர் “டாக்டரிடம் கூட்டிப் போகலாம் சித்தப்பா” என்று சொன்னார்.

தெருவில் ஒரு கிளினிக் இருந்தது. அம்மாவை தூக்கிசெல்ல சேகர் உதவி செய்ய போனபோது… ஐஜி.. ''சேகர் அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்...!'' என்று ஈவு இரக்கம் இன்றி பேசினார்.

கிளினிக் வந்த அக்காவிடம், டாக்டர் “மாரடைப்பு காரணமாக அம்மா இறந்துவிட்டார்” என்று சொன்னார். அக்கா அழ ஆரம்பித்தார். எனக்கு வயிற்றில் வலி வந்தது.

மூச்சுவிட திறனின்றி பாடுபட்டேன்.

சேகர் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.

ஐஜிதான் காரணம். போலிஸ் ஐஜி தனது அதிகாரத் திமிறைக் காட்டி என் அம்மாவை கொலை செய்துவிட்டார். சேகர் மற்றும் அவரது குடும்பம் ஐஜிக்கு அடிமைபோல நடந்துகொண்டார்கள்.

அக்காவின் அழுகுரலோடு அம்மாவின் கடைசி இறுதி ஊர்வலத்தில் என் கையில் தீச்சட்டி... கண்ணீர் கரை புரண்டது.

ஈமச்சடங்குகளை முடித்து “அம்மாவும் இல்லை... ஐயோ! அக்கா… அக்கா…" என கத்திக்கொண்டே விழுந்தேன்.

கூட வந்தவர்கள் என்னை டாக்டரிடம் கூட்டிச் சென்றார்கள்.

சிறுகதை | Sister and brother
சிறுகதை | Sister and brotherImage credit: Gemini AI

நான் இறந்த விட்டேன் என்பதை டாக்டர் உறுதி செய்தார்.

கல்யாணம் என்று துவங்கியது கருமாதியில் முடிந்தது.

அதுவும் 2 உயிர் போய்விட்டது.

'அக்கா.. என்ன செய்வார்?' என்று நினைத்து மடிந்த நான் அம்மாவிடம் போய்விட்டேன். இனி என் அக்கா கதி… ??

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இதுதான் வரதட்சிணை கொடுமை…! வேண்டுமா…? வேண்டாமா…??

நீங்கள் முடிவு செய்யுங்கள்..!