சிறுகதை: வாடகைத் தாய்!

நவீன காலத்தில் வாடகைக் தாய் முறையும் அதன் சவால்களும் பற்றிய சிறுகதை
சிறுகதை | Surrogate mother
சிறுகதை | Surrogate motherImage credit: Chatgpt
Updated on
MM strip
MM strip

ஏதோ Third party License என நினைத்து எங்களை பற்றி இந்தச் சமூகம் ஒரு Lease Agreement செய்துகொண்டு எந்த ஒரு புரிதலும் இல்லாமல் நடத்திக்கொண்டு இருக்கிறது. உண்மைதான் Third party License என்பது அவசர காலத்தில் யாரும் எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலையில் நிகழும் விபத்தின் அடிப்படையில் வந்து அடையும் ஒரு காப்பீட்டுப் பணம்.

இந்தச் சமுதாயம் வண்டிகளுக்கு இதை முறைப்படுத்தி ஆவணப்படுத்தி அதற்கான விதியை, நெறிகளை வகைப்படுத்தி இருக்கிறது. இந்த மாதிரி எங்களை ஆவணப்படுத்தல் மற்றும் சட்ட முறைமைகளை வகுத்தல், இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? இந்தியா பெண்மையைக் கொண்டாடுகிறது! பெண்களை அல்ல!! இந்த Third party License என்பது எங்கள் விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு எங்களுக்கு உரிய கூலியை கொடுத்துவிட்டு பிறகு மறந்து விடுகிறது.

இது ஒரு பித்தலாட்ட வேலை. நாங்கள் எந்திரங்களைவிட ஒரு தரம் கீழானவர்கள் என்பதால் என்னவோ? நாங்கள் ‘பண்டம்’ மாற்றும் ‘பொருள். வண்டிக்குக்கூட வருடா வருடம் காப்பீட்டைப் புதுப்பிக்க வேண்டும்.

எங்களுக்கு மட்டும் one time settlement. "நாங்கள் - ஆம்! இரண்டாம் தர குடி மக்கள்". இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவது இல்லை.

எங்களுக்கான ஒரு சமூக நீதியை வழங்கி அங்கீகரிக்க வேண்டும் இது எங்கள் உரிமை. உடல் சார்ந்தது மட்டும் அல்ல... உடல் சார்ந்து எங்களுக்கும் வாழும் வரையிலும் ஒரு public private partnership போல ஒரு புரிந்து உணர்வு ஒப்பந்தம் தேவை. இதைக் கூறுவதற்கு காரணம் இதில் ‘உணர்வுகள்’, ‘உணர்ச்சிகளை’விட அதிகம் பங்கு ஆற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எது எப்படியோ? அது அப்படியே!!
சிறுகதை | Surrogate mother

எங்களுக்கு ஏற்படத் கூடிய hormonal imbalance மற்றும் பால் சுரப்பிகள் மூலம் வரும் emotional imbalance ஐ யார் சரி செய்வார்கள்? இதைத் கூடி விவாதிக்க ஒரு குழுவை அமைக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் மும்முரமாக முயல வேண்டும். அதில் பெண்கள் அதிகம் இடம் பெற வேண்டும். அவற்றில் படித்த, மற்றும் ஓய்வு பெற்ற நீதி அரசர்கள், சமூக சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தத்துவ ஆசிரியர்கள், அரசியல் சார்ந்து இயங்கும் சமூக அமைப்புகள், பொருளாதார பேராசிரியர்கள் என 20 அங்கத்தினர்கள் அடங்கிய குழு தேவை.

எங்களுடைய தேவை இப்போது அதிகம் தேவைப்படுவதால் இந்தச் சமுதாய நல்லிணக்கத்திற்காக நாங்கள் வைக்கும் கோரிக்கைகள்...

நாங்கள் உருவாவதற்கான காரணிகள், 1. படித்த பெண்கள் குழந்தைப் பேறு என்பது ஒரு social risk மற்றும் life risk என கருதுகிறார்கள். 2. பெண்கள் தங்களை உடல் சார்ந்து வருத்திக்கொள்ள விரும்புவதில்லை. 3. இதன் மூலம் சிறு வயதிலே முதுமை பற்றிக் கொள்வதாக அச்சம். 4. மகப்பேறு என்பது தேவையற்ற உடலை வருத்திக்கொள்ளும் செயல்...

இந்தக் காரணிகளால் நாங்கள் ஒரு பாலமாக சமுதாயத்தைக் கட்டு அமைத்துக்கொண்டு இருக்கிறோம்.

"கல்யாணம்" ஆன தம்பதிகள் கூட தங்கள் இளமை மீது அதிகம் கவனம் செலுத்துகின்றனர். யாருக்காவது impotence இருந்தால் அதைக் காட்டிக்கொள்ள விரும்பாமல் எங்களை நாடுகின்றனர். இதில் ஆண்களும் அடங்கும்; காரணம் அவர்கள் விந்துக்கள் சரியான வீரியம் இருக்காது. மற்றபடி normal ஆக இருக்கும். ஆகவே, test tube babyக்கு நாங்கள் ஒரு உயிர் நாடி. ஆக பெண்களின் இயலாமை என்பது ஒரு புறம். ஆண்களின் செயலின்மை என்பது ஒரு எதிர் புறம்.

நாங்கள் இருவருக்கும் ஒரு சரியான மாற்றுப் புறம். எங்களுக்கு சரியான 'வழி நடத்தல்' வேண்டும். ‘பணம்’ என்பதைத் தாண்டு அந்த குழந்தைக்கு நாங்கள் யார்...

A. ஒரு alien, B. ஒரு foreign body, C. ஒரு intermediary machine இந்தப் போராட்டம் சமூக, பிராந்திய, இந்திய ஊடகங்களுக்கு தெரியப் படுத்தப்பட்டு அவர்கள் எல்லோரும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு முன்னால்கூட ஆரம்பித்து விட்டார்கள். காலை 10 மணி என்று கூறப்பட்டிருந்தது.

அதற்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருந்தது. கூட்டம் கூடியபோது சுமார் 1000 பேர் கலந்துகொண்டார்கள். போகப் போக அது 50 ஆயிரம் பேர்கள் இருக்கும் அளவிற்கு பெருகி ஒரு தன் எழுச்சி இயக்கமாக உருவானது.

சிறுகதை | Surrogate mother
சிறுகதை | Surrogate motherImage credit: Gemini AI

இது எல்லோருக்கும் ஒரு வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது என்றால் அதில் மிகை இல்லை. இப்படியான ஒரு இயக்கம் தங்களை அடையாளம் படுத்திக்கொள்ள முனைந்து இருப்பது இதுதான் முதல் முறை. இதில் கலந்துகொண்ட நபர்கள் வித்தியாசமாக இருந்தார்கள்.

அவற்றில் நிறைய பெண்கள் அவர்களுடன் கூடிய அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கல்யாணம் ஆகாதவர்கள் என்று வயது 20 முதல் 50 வரை இருக்கும். இவர்கள் எல்லோரும் தங்களுக்கான வழியையும், வேதனையையும் பகிர்ந்துகொண்டு அதற்கான ஒரு சமூக நீதியை நோக்கிய பயணத்தில் தங்களை முழு முதலாக அர்ப்பணித்து கொண்டு இருந்தது போராட்டத்திற்கு வலு சேர்த்தது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு இருப்பர்களுக்கு ஒரு social status வேண்டி இருக்கிறது. Economic status பற்றி விவாதிக்க வேண்டி இருக்கிறது. இது ஒரு profession ஆக மாறி வரும் நிலையில் அதற்கான காரணிகளும், விழுமியங்களும் கண்டு அறியப்பட வேண்டும். சமுதாயத்தில் இத்தகைய தாக்கங்கள் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் யாவை? ஒரு பாலம் அமைக்க நாங்கள் முற்படுகிறோம். எங்களுக்கு ஏற்படக்கூடிய அவமானங்கள், அநீதிகள் குறித்து யார் பேசுபவது? இது ஒரு நாட்டினுடைய Health & wealth ஐ பாதிக்கக்கூடிய விஷயம்.

இப்படியாக எண்ணங்கள் ஆழ் மனதில் தோன்றி, சென்னை தலைமை நீதிபதிக்கு வந்துகொண்டே இருந்தது. அதற்கான காரணம் அவர் இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவிற்கு பிறகு பார்த்த திரைப் படம்- விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்.

அந்தக் காட்சிகள் அவரைக் கனவு காணச் செய்தது. பல திறப்புகளை அவருக்கு உண்டு பண்ணியது. திக்கு முக்காடினார். கிரங்கி எழுந்தார். அப்போதுதான் தெரிந்தது அது கனவு என்று. அது கனவு என்றாலும் அது ஒரு நாள் நிச்சயம் நம் எல்லோருடைய நினைவுகளில் வந்து விளையாடக்கூடிய ஒரு பெரிய சுனாமி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நினைவுகள் அழிவதில்லை…!
சிறுகதை | Surrogate mother

அந்தக் காலகட்டத்தில்தான் நாம் எல்லோரும் இருக்கிறோம். இப்போது surrogate mothers என்பது ஒரு புதிய ஜாதியாக, மதமாக, இனமாக மாறி அதற்கு என்று ஒரு மொழியாக உருவாக்கம் நடந்துகொண்டு இருக்கிறது. அது தன்னுடைய ‘இருப்பை’ காட்டிக் கொள்ள வேண்டிய இருப்பதாக உணர்ந்தார் நீதி அரசர்.

இப்படியான அவருடைய கனவில் ஒரு போராட்டம் வந்து திரைக்கதை எழுதி தன்னை சிந்திக்க வைத்ததை நினைத்து நாளை முதல்வருக்கு கடிதம் எழுதுவதாக இருக்கிறார்.

A stitch in time saves nine. நல்லதே நடக்கட்டும்.

logo
Kalki Online
kalkionline.com