சிறுகதை: புரிதல் ஒரு புதிர்!

முப்பது வயதைக் கடந்தும் தள்ளிப்போகும் திருமணம் குறித்து மனம்திறந்து பேசிய தாய்-மகள் உரையாடலும், குடும்பப் பொறுப்புகளின் நிதர்சனமும் பற்றி பேசும் சிறுகதை
சிறுகதை | friends
சிறுகதை | friendsImage credit: Chatgpt
மதுரை முரளி

மதுரை முரளி. பன்முக எழுத்தாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் எழுதி வருகிறேன். மதுரை வானொலியில் 30 நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. 400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். பல பிரபல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தினமலர் "என் பார்வையில்" கட்டுரைகள், மூன்று புதுக்கவிதைப் புத்தகங்கள் உட்பட 12 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். www.pustaka.co.in ல் 11 வலைதள மற்றும் 5 ஒலிப்புத்தகங்கள் உள்ளன. சமூகநல சிந்தனைகளே என் நோக்கம்."

Updated on: 

அரசு உடைமையாக்கப்பட்ட வங்கியின் பெயர், ஆங்கில எழுத்துக்களால் அடையாளம் காட்டப்பட்டு, வாடிக்கையாளர்கள் குறைவாய் கூடிய நேரம்... நண்பகல் 12 மணி.

மாதம் இறுதியைத் தொட்டதால், நகைக்கடன் பிரிவைத் தவிர, மற்ற சேவைகள் மதிய நேர மயக்கத்தில் இருந்தன.

நகை அடகு பிரிவில், கணவன் - மனைவிகளுக்கிடையே சிறிய முறைப்பு, கருத்து மோதல் எனச் சற்றே துடிப்புடன் வங்கிப் பணிகள் நகர, வங்கிக்குள்ளே நுழைந்த லீலாவின் பார்வை நேராய் தன் தோழி சோனாவைத் தேடியது.

தன் கண்முன் இருந்த கணினித்திரையில் வரவு, செலவுகளைச் சரிபார்த்தவளாய் சோனா.

“ஹேய்..”  தன் முன்னாலிருந்த மேசையிலிருந்து சத்தம் கேட்க, தலையை உயர்த்தியவள், தோழி லீலாவைக் கண்டதும் இன்பமாய் அதிர்ந்தாள்.

"லீ... லீலா..., என் கண்களை என்னாலயே நம்பமுடியலை...!" தன் இருக்கையிலிருந்து எழுந்து, லீலாவை நோக்கி நட்பாய் நீட்டினாள் கரத்தை.

"நல்லா இருக்கேன். ஆமா, நீ எப்படி இருக்கே?..." பார்வையால் சோனாவின் நெற்றியையும், கழுத்தையும் நோக்கியவள்,

"இன்னமுமா ஆகலை ?..." தாலியை அடையாளமாய்க் காட்டிக் கேட்க, "அ... அது..." பதிலைத் தவிர்த்த சோனா, 

Loading content, please wait...