

மதுரையில் இருந்து சென்னை நோக்கி பாண்டியன் எக்ஸ்பிரஸ் போய்கொண்டு இருந்தது. Non AC கோச்.
எனக்கு பக்கத்தில் இருவர், சாதாரணமாகத்தான் இருந்தார்கள்.
எனக்கு அவர்கள் மேல் சந்தேகம் வந்தது. ஏதோ குற்றவாளிகள்போல் இருந்தார்கள். அவர்கள் லக்கேஜ் எதுவும் இல்லை. ஒரே ஒரு பெரிய பெட்டி. அதை எடுத்து சீட் கீழே வைத்தார்கள். அவர்கள் தமிழ்தான் பேசினார்கள்.
ஒருவன், "சரக்கை சென்னையில் சேர்த்த உடன் நாம் புறப்பட்டு விடவேண்டும்,"என்றான்.
அவர்கள் பேச்சில் சரக்கு என்று வந்ததைக் கவனித்தேன்.
சரக்கு என்ன? என்று தெரியவில்லை.
எனக்கு சந்தேகம் அதிகரித்து வருகிறது.
நான் கேட்டேன், “சரக்கு என்று எதைச் சொல்லுகீறிர்கள்…!”
“உங்களுக்கு தேவையான விஷயம் இல்லை…! ” ஒருவன் கோபமாகச் சொன்னான்.
"இது ஆம்பளைங்க சமாச்சாரம். உனக்கு எதற்கு?" என்றான் இன்னொருவன்.
எனக்குப் புரிந்துவிட்டது. அவர்கள் எதையோ கடத்தல் செய்கிறார்கள் என்று.
நான் யோசித்தேன். “டிக்கெட் செக் செய்பவரிடம் சொல்லலாமா?
இல்லை, அது சரிப்பட்டு வராது. சென்னை வர இன்னும் 4 மணி நேரம் இருந்தது. முடிவு செய்தேன். போதை பொருள் கடத்தல் பற்றி தகவலை அனுப்பி வைக்க வேண்டும்.
நான் டாய்லெட் போனேன். அங்கு போன் செய்தேன்.
நான் அழைத்த நம்பர் 1932.
போதைப் பொருள் கடத்தல் குறித்து இந்த எண்ணுக்குத்தான் பேச வேண்டும்.
நான் போன் எடுத்த ஆபிசரிடம் என் சந்தேகம் பற்றி எடுத்துச்சொன்னேன்.
அவர் ரயில், கோச் எண் மற்றும் சீட் நம்பர் எல்லாம் கேட்டார். நான் முழுவதும் சொன்னேன்.
அந்த ஆபீசர், "மேடம்! நீங்கள் தூங்குங்கள். நாங்கள் சீக்கிரமே வந்துவிடுவோம்."
அடுத்த 45 நிமிடங்களில் ஒரு 4 போலீஸ் ஆபீசர்கள் சாதாரண உடையில் வந்தார்கள்.
அந்த ஆபிசர்கள் அவர்களிடம் டிக்கெட் கேட்டார்கள். அதற்கு..
“நீங்கள் யார்…? ஏன் டிக்கெட் கேட்கறீர்கள்…?” என்று ஒருவன் சொன்னான்.
"நாங்கள் போலீஸ்… உங்கள் லக்கேஜ் எங்கே…?”
“லக்கேஜ் எதுவும் இல்லை...!” என்றான்.
ஒரு ஆபீசர் சீட் அடியில் இருந்த பெரிய பெட்டியை வெளியே இழுத்தார்.
“அது எங்களது இல்லை...!”
ஆபீசர் பெட்டியைத் திறந்தார்.
பெட்டி முழுக்க கஞ்சா… தூள்..!”
“இது என்ன?”
“தெரியாது!”
பளார்… பளார் என இருவரையும் கன்னத்தில் அடித்தார்.
“இப்போது சொல்லி விடுங்கள்…!”
“சார் எங்களுக்குத் தெரியாது…!”
பளார்…! பளார்…!! பளார்…!!!
“சார்… அடிக்காதீங்க… இது கஞ்சாதான். ஒரு அரசியல் பெரும்புள்ளிக்குக் கொடுக்க வேண்டும்."
“யாருடா அந்தப் புள்ளி…?”
“மயில் சாமி…!”
“சரி… நான் கொடுத்துவிடுகிறேன்… உங்கள் இருவரையும் கைது செய்கிறேன். ரயிலை விட்டு இறங்குங்கள்…!”
“சார்… நாங்கள் சென்னை போக வேண்டும்…!”
“அந்த பேச்சு இப்போது வேண்டாம்… பெட்டியைத் தூக்கிக்கொண்டு வாருங்கள். நாம் தாம்பரத்தில் இறங்குகிறோம்..!”
இருவரும் தயங்கினார்கள்.
ஆபீசர்கள் 4 பேரும் விடவில்லை. வலுக்கட்டாயமாகத் தாம்பரத்தில் இறங்கி விட்டார்கள்.
ஆபீசர், ரயில்வே போலீஸாரிடம் கஞ்சா கடத்தல் பற்றி சொன்னார்.
“வழக்கு பதிவு செய்யுங்கள்…!”
"சரிங்க சார்…!”
“அந்த இருவரையும் சிறையில் வையுங்கள்…!”
“ஒகே சார்…!”
பிறகு ரயிலில் ஒரு ஆபீசர் எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றார்.
எனக்குக் குஷி. கள்ள கடத்தல் செய்பவர்களைக் கைது செய்ய வைத்து விட்டேன்.
தைரியம் எப்போ எப்படி வந்தது? எனக்கே தெரியவில்லை இன்றுவரை. ஆனால் நெஞ்சில் நிறைந்தது பெருமிதம்!
பெண்கள் தைரியசாலிகள்... நானும் தான்!