சிறுகதை: தத்து - தீர்ப்பு!

Tamil short story - Thaththu - theerpu!
Husband and Wife with Baby
Published on

அந்தப் பிரபல கோயிலின் திருக்குளத்தில் இறங்கி, கை கால்களை அலம்பிய பின் தங்கள் தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு, படிகள் ஏறும் போது, இரண்டு அல்லது இரண்டரை வயது இருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை வேக வேகமாகப் படிகட்டுக்களில் இறங்கியது. அது இறங்கிய வேகமும், துள்ளலும்... கண் சிமிட்டும் நேரத்தில் குளத்தில் விழுந்துருக்கும்.

நல்ல வேளை, மோகன் - ராதா இருவரும் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொள்ள, அந்தக் குழந்தையின் அம்மா ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்து, உச்சி முகர்ந்து முத்தமிட்டு, அழுதுகொண்டே ”ரொம்ப நன்றி அக்கா“ என்றாள் .

“ஆமாம் நீ நம்ம பூஞ்சோலை கிராமத்திலே, மேலத்தெரு மோகனா தானே?” இப்படி ராதா சட்டெனக் கேட்கவும்,

“ஆமாம் அக்கா ஆனா நீங்க யாருன்னு தெரியல!”

“நான் உன் அக்கா காஞ்சனா வோட கிளாட்ஸ்மெட். இந்த ஊர்ல தான் இருக்கோம்.”

“ஆமா நீ இங்கே எப்படி? இது யாரு குழந்தை?"

“இது என் குழந்தைதான் அக்கா.”

“என்னது உன் குழந்தையா? கழுத்திலே தாலி இல்லை காலில் மெட்டி இல்லை?”

சட்டென இந்தக் கேள்வியை ராதா கேட்டதும் அதிர்ச்சியானாள் மோகனா.

பின் சுதாகரித்து, “அஞ்சு வருஷம் முன்பு நீங்க கல்யாணம் ஆகி போன பிறகு மூணு வருஷம் முன்பு கம்யூட்டர் கிளாஸில் ஒருத்தனிடம் பழகி இப்படி ஆச்சு!”

“கர்ப்பம்ன்னு தெரிஞ்சதும் ஊர விட்டு போயிட்டான். இப்போ எங்கே இருக்கான்னு தெரியல. அவங்க அப்பா அம்மாவும் எங்கேன்னு தெரியல. தேடி தேடி அலைந்தது தான் பலன். எங்க குடும்பத்திலும் என்னை ஏத்துக்கல. இந்த ஊருக்கு வந்து தையல் கடை வைச்சுகிட்டு ஒற்றைப் பெற்றோரா பிழைப்பு நடத்தறேன். மிகவும் சிரமமான நிலைமை. ஆண்களின் கழுகு பார்வை தொல்லை வேறு. நான் தங்கி இருக்கிற வீட்டுகாரம்மா... இளகிய மனசு. நிறையவே உதவியா இருக்காங்க; நான் தையல் வேலையில் இருக்கிறப்ப அவங்க குழந்தையைப் பாத்துப்பாங்கா. மனசு சரியில்லாத போது இப்படிக் கோயில் வருவேன்க்கா.”

“அர்ச்சனை சாமான் வாங்கித் திரும்ப வரதுகுள்ளாரே ஓடி வந்துட்டான். ரொம்ப வாலு அக்கா.

ராதாவை பார்த்ததும், ”அம்மா அம்மா“ என்று மழலையில் ராதாவிடம் தாவியது குழந்தை; தாய்மை உணர்ச்சி பெருக்கில் ராதாவும் தவித்தாள்.

“சரி சரி நீ கவலைப்படாதே. இந்தா என் ஃபோன் நம்பர் உன் ஃபோனில் சேவ் பண்ணிக்கோ. நாளைக்கு என்ன வந்து பாரு... என்னாலான உதவி செய்யறேன்.” முகவரியை சொன்னாள் ராதா.

பூஞ்சோலை கிராமத்திலிருந்து வாக்கப்பட்டவள் தான் இந்த ராதா. இந்த ஊரில் உயர்நிலைப் பள்ளியில் ஒரு பட்டதாரி ஆசிரியை. அவ கணவனும், ஒரு பட்டதாரி ஆசிரியர். செல்வம் இருந்தும், சொத்து இருந்தும் கல்யாணமாகி மழலைச் செல்வம் இந்த அஞ்சு வருடத்தில் ஏற்படவில்லை.

மருத்துவர் அவனுக்கு ஆண்மையில்லாதவன் என்று சோதனையில் சொன்னபோது நொறுங்கி போனான்; அதே சமயம் ராதாவுக்கும் கர்ப்பப்பை மிகவும் வீக்காக இருக்கு. ஒங்க இருவருக்கும் குழந்தைப் பேறு வாய்ப்பில்லை; என்றதும் ஒடுங்கிப் போனார்கள்.

தத்து எடுத்து குழந்தை வளர்ப்பது தான் ஒரே தீர்வு என்று மருத்துவர் சொன்னதும், அதற்குண்டான வழிகள் எதுவும் சரியில்லாமல் போனது.

வீடு திரும்பிய ராதாவுக்குக் குழந்தை நினைவாகவே இருந்தது.

“ஏங்க! இப்படிச் செஞ்சா எப்படி இருக்கும்?

“இத பாரு ராதா நீ என்ன நினைக்கிற என்று எனக்குத் தெரியும். ஆனா அந்தப் பொண்ணுக்கு அந்தக் குழந்தை தான் உசிரு... உலகம்; நீ நினைப்பது நடக்குமான்னு தெரியல; இருந்தாலும் முயற்சி பண்ணுவோம்.”

அந்த வார ஞாயிறு அன்று தன் பெற்றோர்களையும், மோகனாவின் பெற்றோர்களையும் தன் வீட்டுக்கு வர வைத்திருந்தாள் ராதா.

மோகனா வந்ததும், மெல்ல பேச்சை தொடங்கவும், மோகனா அவ்வளவு சீக்கிரம் ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அவள் அம்மாவும் அப்பாவும், "இது ஒன்று தான் சிறந்த வழி; ஒற்றைப் பெற்றோரராக நீ படும் சிரமம் நிறைய. ஒனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு. ஏதோ அறியா பருவத்தில் நீ செஞ்ச இந்தக் காரியத்தை ஒரு கெட்ட நினைவா மறந்துட்டு பாபு எதிர்காலத்தை மட்டும்யோசி. மோகன்- ராதா வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணுமின்னா பாபுவை நீ தத்துக் கொடுத்தால் தான் அவங்களும் சந்தோசபடுவாங்க. அப்ப தான் எங்க பேச்சை கேட்கல. இப்ப ஒன் நன்மைக்கும் குழந்தையின் எதிர்காலத்துக்கும் இது தான் நல்ல முடிவு,” என்றனர்.

“ஆமாம் மோகனா! என் பொண்ணுக்காக நாங்க இரண்டு பேரும் என்றும் கடமைப்பட்டவங்களா இருப்போம்,” என்று ராதாவின் பெற்றோர்களும் சொல்ல நெகிழ்ச்சியான நிலையில் அவள் சம்மதம் சொல்லும் படியானது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஊர்மிளையும் நோக்கினாள்!
Tamil short story - Thaththu - theerpu!

மோகன் - ராதா வழிகாட்டுதல் முறையில், தான் திருமணமாகாத நிலையில், மற்றும் தந்தையின் இருப்பிடம் தெரியாத நிலையில், குழந்தைக்குத் தாயான, தன் சம்மதம் கடிதம் மற்ற தேவையான ஆவணங்கள் கொடுத்த பிறகு தத்தெடுப்பு சட்டபடி மற்ற வேலைகள் துவங்கின.

இந்தச் சட்டத்தில் சொல்லியுள்ளபடி வளர்ப்பு பெற்றோர் ஆக மாறப் போகும் ராதா மோகன் தகுதியானவர்கள் என்று தெரிந்த போது தத்தெடுப்பு நடைமுறை பின் பற்றபட்டு சட்டப்படி தத்தெடுப்பு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைகள் முடிந்த பிறகு அடுத்த வாரம் நமக்குத் தத்து எடுப்பதற்கான சட்ட பூர்வ உரிமை கிடைத்திடும் என்று ராதா மோகன் இருவரும் சந்தோச கணாவில் சஞ்சரித்து இருந்து கொண்டு இருந்தார்கள்.

குழந்தையை அழைத்துப் போய் விதவிதமான பொம்மைகள், துணி மணிகள் வாங்கிக் கொடுத்தனர்.

நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏது? ஆமாம் அவர்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை...

தாய் திருமணமாகாத நிலையில், மற்றும் தந்தையின் இருப்பிடம் தெரியாத நிலையில், குழந்தையின் தந்தையின் சம்மதம் பெறப்படவில்லை. எனவே இந்தத் தத்து கொடுக்கும் நிகழ்வு சட்டப்படி நிராகரிக்கப்படுகிறது என்ற தீர்ப்பை வழங்கியது கோர்ட்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கண்ணுக்குத் தெரியாதவன் கதை சொல்கிறேன்!
Tamil short story - Thaththu - theerpu!

இந்தத் தீர்ப்பை கேட்டதும் மயக்கமான ராதாவின் நிலைமை கண்டு வருத்தமுற்ற மோகன், நாம் எல்லாவிதமான ஆவணங்கள் கொடுத்த பிறகும் நிராகரிக்கப் பட்டத்தை எதிர்த்து, உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம், என்று சொன்னதும் ராதாவுக்கு நிம்மதி ஆனது.

அதற்குண்டான வேலைகள் பார்க்கப்பட்டு இதோ விசாரணை ஆரம்பித்து நிறைய வாய்தாக்கள் பிறகு தீர்ப்பு வழங்க போகும் நாள்....

ராதாவும் அவள் பெற்றோர்களும் தங்கள் குலதெய்வத்தை வேண்டி நின்றார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: "பிரிமியம் பால் இருக்கா?"
Tamil short story - Thaththu - theerpu!

உயர் நீதிமன்றம் தன் விசாரணையில்:

முறைகேடான குழந்தையின் தாய் குழந்தையின் பாதுகாவலர்; என்பதை மறுக்க முடியாது. சட்ட விரோதமா பெற்ற குழந்தையின் தாய் மட்டுமே இயற்கைப் பாதுகாவலர். 2021 ஆம் ஆண்டுத் தகாத உறவின் காரணமாக ஒரு ஆண்குழந்தைக்கு, மைனராக இருந்தபோது, ​​அவர் வயது முதிர்ந்தவராக இல்லை, குழந்தையைத் தத்துக் கொடுக்க மனப்பூர்வமாக விரும்பியதால் தத்து பெறும் தம்பதியினர் குழந்தையைத் தத்தெடுக்க முன்வந்தனர். அவர்களும் அனைத்து சம்பிரதாயங்களையும் சட்ட திட்டங்களையும் மேற்கொண்ட பிறகும் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்துள்ளனர். தந்தையின் அடையாளம் தெரியவில்லை என்றால், அவரது சம்மதத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம். தத்தெடுக்கும் நேரம் இறையியல் தந்தையின் ஒப்புதல் இல்லாததால் மறுக்கப் படுகிறது என்று கோர்ட் கூறியுள்ளது. தத்து கொடுக்கும் பெண் ஒரு இந்து. வளர்த்தெடுப்பவரும் ஒரு இந்து; மற்றும் அவரது குடும்பம் குழந்தையைத் தத்தெடுப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 இன் பிரிவு 6 (பி), இந்து மைனர் முறைகேடான பையனின் விஷயத்தில் அல்லது ஒரு முறைகேடான திருமணமாகாத பெண், தாய் இயற்கையான பாதுகாவலர் மற்றும் அவளுக்குப் பிறகு, தந்தை: நடைமுறைக்கு வரும்போது, ​​முறைகேடான மைனர் குழந்தையின் தாய் மட்டுமே பாதுகாவலர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; பெருங்கூட்டத்தில் ஒருவன்!
Tamil short story - Thaththu - theerpu!

இந்த வழக்கில், தந்தைக்கு அடையாளம் இல்லை. ஒருவேளைபோக்சோ சட்டம், 2012 இன் கீழ் அம்பலப்படுத்தி இருந்தால் தண்டனை கிடைத்து இருக்கும். ஆனால் அந்தப் பெண் அவமானத்துக்குப் பயந்து அவ்வாறு செய்யாமல் இருந்திருக்கலாம். தந்தை இருக்கும் இடம் தெரியாத போது குழந்தையின் இயற்கையான தந்தையிடமிருந்து பெண் ஒப்புதல் பெற முடியாது. எனவே, ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் பிரிவு 9 இன் துணைப்பிரிவு (2) இன் விதி, இதற்குப் பொருந்தாது... நீதிபதியின் ஆணாதிக்கம் மட்டுமே இதில் தெரிகிறது எனவே கீழ் கோர்ட்டின் அந்தத் தீர்ப்பு நிராகரிக்கப்படுகிறது. சமூகத்தில் ஒரு இளம்பெண் அதுவும் ஒற்றைப் பெற்றோராக வாழ்வதே பெரும் பாடு. அறியா பருவத்தில் ஏற்பட்ட வடு இவ்வளவு சோதனைகளை ஏற்படுத்தி உள்ளது. தன் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தப் பெண் தத்து கொடுக்க முன் வந்ததைப் பாராட்டி இந்த மன்றம் ராதா - மோகன் தம்பதிகளுக்குத் தத்துக் கொடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com