சிறுகதை: ஆணவக் கொலை..!

சாதி வெறியால் உயிர் அச்சுறுத்தலை சந்தித்த காதல் ஜோடியை, ஒரு தோழியின் புத்திசாலித்தனமான திட்டமும் நீதிமன்றத்தின் தலையீடும் எப்படி காப்பாற்றியது என்பது தான் இந்தக் கதை!
couple
Tamil short story: coupleImage credit: AI Image
Updated on
MM strip
MM strip

மதுரை. இங்குதான் செல்வி வாழ்ந்து வந்தார். பட்டப் படிப்பு முடித்தவர். படிக்கும்போதே சிவன் என்பவரை காதலித்து வந்தார். சிவனும் தனது காதலில் உண்மையான பற்றுடன் இருந்தார். இருவரும் வேறு வேறு சாதிகள்.

செல்வியின் தந்தை கோபால் அண்ணா நகர் காவல் நிலையத்தில் எஸ். ஐ. ஆக இருந்தார். அவருக்குச் சாதிய பற்று. இல்லை சாதிய வெறி இருந்தது. நிச்சயமாக கோபால், செல்வி - சிவன் கல்யாணத்துக்குச் சம்மதிக்கமாட்டார் என்று செல்விக்குத் தெரியும். இருந்தாலும் கேட்டுப் பார்க்காலாமே என்று தோன்றியது.

ஆரம்பம் ஆனது புயல். செல்வி முதுகலை படிக்க ஆசைப்பட்டார். கோபால் கண்டிப்பாக முடியாது என்று சொல்லிவிட்டார். மேலும், செல்வி வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார். எல்லாம் செல்வி காதலிக்கக்கூடாது என்பதற்காகவே. செல்வி மனம் உடைந்தது. சிவனைப் பார்க்க முடியவில்லை.

செல்வி நன்கு யோசித்தார். காதல் கல்யாணம் செய்துகொண்டால் சிவன் உயிருக்கு பேராபத்து என்று உணர்ந்தார். கோபால் சிவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். நடுத்தர குடும்பம். தீ கதிர் அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணிபுரிந்தார்.

வெகு நாட்கள் ஆகியும் செல்வி இடம் இருந்து தகவல் இல்லை. செல்வி நிலை குறித்து கவலைப்பட்டார். சிவனுக்குச் செல்வியின் நண்பர் உஷாவை நன்கு தெரியும். அவரிடம், "செல்வி வீட்டிற்குப் போய் விவரம் அறிந்து வாருங்கள்" என்றார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பாட்டியைக் காணோம்!
couple

செல்வி உஷா சந்திப்பு நடந்தது. உஷா செல்வி வீட்டிற்கே சென்று விட்டார். அப்போது எல்லா விவரங்களை கேட்டு அறிந்தார். கல்யாணம் என்றால் செல்வி - சிவன் இருவரையும் ஆணவக் கொலை செய்துவிடுவார் கோபால், என நன்கு புரிந்தது.

செல்வி, "நாங்கள் மதுரையில் இருந்தால் உயிருக்கு ஆபத்துதான்" என்றார்.

உஷா ஒரு யோசனை சொன்னார். "கல்யாணம் முடிந்ததும் நீங்கள் இருவரும் சென்னைக்குச் சென்றுவிடுங்கள். என் தம்பி பாபு அங்குதான் இருக்கிறார். நான் மற்ற எல்லா விஷயங்களைப் பார்த்துக்கொள்கிறேன்."

உஷா திட்டவட்டமாக ஒன்று சொன்னார். "கல்யாணம் பதிவுத் திருமணம்தான். அன்றே, செல்வியை தந்தை கோபால் ஆணவக் கொலை செய்யலாம். மேலும், சிவனையும் கொன்று விடலாம். எனவே, நீதி மன்றம் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் செய்து தர வேண்டும்" என்று செல்வியை ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

செல்விக்குப் பயம். ஆனால், உஷா தெம்பு கொடுத்தார்.

"வரும் வெள்ளிக் கிழமை கோயிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு என் வீட்டிற்கு வந்துவிடு. சனி காலை கல்யாணம். கல்யாணம் முடிந்த கையுடன் சென்னை பயணம்."

“அப்பா பெயரிலேயே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டுமா…?“

“செல்வி வேறு வழி இல்லை..! பயம் இன்றி புகார் மனு கொடு. நீதி மன்றத்தில் உனக்காக வாதாட வக்கீல் ஜெயம் உள்ளார். அவர் எனக்கு நல்ல நண்பர்தான்… பாரு… திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை… நீ வெள்ளிக்கிழமை என் மாமா வீட்டில்தான் தங்க வேண்டும். என் வீட்டைக் கண்டுபிடித்து வர தந்தை கோபாலுக்குக் கஷ்டம் ஒன்றும் இல்லை."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ராகவி..!
couple

நிச்சயமாக முதலில் உஷா வீடுதான் செல்வி இருக்கும் இடம் என தீர்மானித்து உஷா வீட்டிற்கு ஒரு படையுடன் வந்தார். உஷா மற்றும் செல்வி, திருநகரில் உஷா மாமா வீட்டில் இருந்தார்கள். வெள்ளி இரவுதான் கோபால், உஷா வீட்டை துவம்சம் செய்தார் கோபால்.

சனிக்கிழமை காலை. பதிவு அலுவலகம் சென்று இருவரும் கல்யாணம் செய்துகொண்டார்கள். மாலை மாற்றி தாலியும் கட்டினார்கள். பின்னர் பக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் டிபன் சாப்பிட்டார்கள்.

உஷா வீட்டை துவம்சம் செய்ததை அறிந்து செல்வி பயந்துபோய் இருந்தார்.

ஹோட்டலில் இருந்து வெளியே வந்து ஒரு கேப் புக் செய்தார். எல்லோரும் போனார்கள். நல்ல வேளை ஒரு சென்னை பஸ் இருந்தது. செல்வி அழுதவாறே உஷாவை கட்டிப் பிடித்தார். சிவன் உஷாவிடம், 'மிகுந்த நன்றி' தெரிவித்தார்.

பஸ் புறப்பட்டது. உஷா… கோபால் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் தமது வீட்டை துவம்சம் செய்ததை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

செல்வி - சிவன் சென்னையை அடையும் முன்னரே கோபால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

புது இடம். புது உறவுகள். உஷா தம்பி பாபு அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டார்.

சிவனுக்கு ஒரு வாரத்தில் மாலை நாளிதழில் சப்-எடிட்டர் பணி கிடைத்தது. செல்விக்கு ஒரு வக்கீல் அலுவலகத்தில் டைப்பிஸ்ட் பணி கிடைத்தது.

இருவரும் நலம். ஆம். உஷா ஒரு ஆணவ கொலையைத் தவிர்த்துவிட்டார்.

சாதிகள் ஒழிக…!

காதல் வாழ்க..!!

logo
Kalki Online
kalkionline.com