கையால் சாப்பிடும்போது சுவை கூடுவது ஏன்? பாட்டியின் ஞானமும் நவீன அறிவியலும்!

கரண்டிக்குப் பதிலாக கையால் சாப்பிடும்போது சுவை ஏன் கூடுகிறது? 2019 ஆய்வு சொல்லும் சுவை ரகசியம் மற்றும் சுகாதார வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
கையால் சாப்பிடும்போது  | eating with hands
கையால் சாப்பிடும்போது | eating with handsImage credit: Chatgpt
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 
MM strip
MM strip

கரண்டிக்குப் பதிலாக கையால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? புலன்கள், சூடு உணரும் திறன் மற்றும் சுவை அதிகரிக்கும் காரணங்களைப் பாருங்கள்.

உலகளவில் நம் தமிழ்க் கலாச்சாரம் பண்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. அதில் ஒன்று தான் வாழை இலையும் அறுசுவை உணவுகளும். கீழே தரையில் அமர்ந்து இளம் பசுமை நிற வாழை இலையில் சூடான சாதம், சாம்பார், ரசம், பொரியலுடன் சாப்பிடுவதில் தனி சுகம். கரண்டியால் சாப்பிடுவதைவிட கையால் சாப்பிடும்போது கிடைக்கும் சுவையே தனிதான்.

தற்போது ஸ்பூன் கலாச்சாரம் பெருகி விட்டாலும், 'கையால் பிசைந்து சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்' என்று நம் பாட்டிகள் சொல்வது நமது நினைவுக்கு வரும். இது வெறும் பழக்கமா? அல்லது இதற்குப் பின்னால் அறிவியல் காரணங்களும் இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் நமக்கு.

உண்மையில், கையால் சாப்பிடுவதற்கும் நமது உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறது ஆய்வுகள்.

விரல் நுனிகளுக்கும் சுவைக்கும் இருப்பது என்ன தொடர்பு..? ஆச்சரியமாக உள்ளதா? ஆம்.. நமது விரல் நுனிகளில் ஏராளமான தொடு உணர்வு நரம்புகள் உள்ளன என்றும் கையால் உணவைத் தொடும்போது அதன் சூடு, குளிர்ச்சி, மென்மை, கடினத்தன்மை, ஈரப்பதம், உணவின் பதம் ஆகியவற்றை உணர்வதன் மூலம் இந்தத் தகவல்கள் மூளைக்குச் செல்கின்றன. இதனால் உணவைச் சாப்பிடுவதற்கு முன்பே அதன் தன்மையை நம்மால் உணர முடிகிறது.

உணவை கையால் சாப்பிடும்போது ஐந்து புலன்களும் ஒன்றாகச் செயல்படுகின்றன. சாப்பிடும்போது நாக்கு மட்டும்தான் சுவையை உணர்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் பார்வை, வாசனை, தொடு உணர்வு, சுவை, உணவின் அமைப்பு எனப் பல உணர்வுகள் இணைந்துதான் சாப்பாட்டு அனுபவத்தை தருகின்றன. மேலும் உணவின் தன்மையை விரல்களால் உணர்வதும் சாப்பாட்டின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க செய்வதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தினசரி வரவு-செலவு நோட்டு உங்கள் குடும்பத்தின் சேமிப்பை எப்படி இரட்டிப்பாக்கும்?
கையால் சாப்பிடும்போது  | eating with hands

இதெல்லாம் புறத்தில் உணர்வது.. ஆனால் மூளைக்கும் கையால் சாப்பிடுவதற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது உண்மைதானா?

ஆம் என்கிறது, 2019-ல் Journal of Retailing இதழில் வெளியான ஒரு ஆய்வு.

உணவை நேரடியாகக் கையால் தொடுவது சிலருக்கு அதன் சுவை மற்றும் சாப்பிடும் அனுபவத்தை மேம்படுத்தக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளதாக குறிப்புகள் உள்ளன.

அத்துடன் உணவைக் கட்டுப்பாட்டுடன் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களிடம் இந்த விளைவு அதிகமாகக் காணப்பட்டதாகவும் அதாவது, கையால் சாப்பிடும்போது உணவு இன்னும் சுவையாக இருப்பதாக உணர்வது வெறும் கற்பனை மட்டுமல்ல. அதற்குப் பின்னால் உணர்வு சார்ந்த அறிவியல் இருக்கிறது.

சாதத்தைப் பிசைந்து சாப்பிடுவதிலும் ஒரு ரகசியம் உள்ளது..

நம் பாரம்பரிய உணவுகளில் பலவற்றைக் கையால் பிசைந்துதான் சாப்பிடுகிறோம்.

உதாரணமாக சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், பருப்பு சாதம் உள்ளிட்டவற்றை கையால் பிசையும்போது சாதம், குழம்பு, காய்கறி, நெய் ஆகியவை ஒன்றாகக் கலக்கின்றன. உண்ணும் ஒவ்வொரு கவளத்திலும் அனைத்து உணவுகளின் சுவையும் கிடைக்கிறது. இதே ஸ்பூன் அல்லது முள்கரண்டியால் எடுக்கும்போது இந்தக் கலவை ஒரே மாதிரியாக இருக்காமல் போகலாம்.

மேலும் சூடான சாதத்தை விரல்களால் தொடும்போது அதன் வெப்பத்தை உணர முடியும். இதனால் குழந்தைகளுக்கு ஊட்டும் போதும் நமக்கும் உணவு மிகவும் சூடாக இருக்கிறதா, சாப்பிடுவதற்கு ஏற்ற பதத்தில் இருக்கிறதா என்பதை அறிய உதவுகிறது.

கையால் உண்பதால் பல நன்மைகளை பெறலாம். குறிப்பாக உணவின் அளவை அறிந்து சிறிய கவளங்களாகச் சாப்பிடலாம். சாதம் மற்றும் குழம்பை நன்றாகக் கலக்கலாம். உணவின் பதத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

மெதுவாகச் சாப்பிடும் பழக்கத்தை வளர்க்கலாம். உணவின் சுவையை ரசித்துச் சாப்பிடலாம். இவை அனைத்தும் உணவு உண்ணும் அனுபவத்தை மேம்படுத்த உதவும்.

கையால் சாப்பிடும்போது | eating with hands
கையால் சாப்பிடும்போது | eating with handsImage credit: Chatgpt

பாட்டி சொன்னதில் இருக்கும் இது போன்ற பாரம்பரிய அறிவியலை முதலில் புரிந்து கொண்டால் இது போன்ற பாரம்பரிய பழக்கங்களை எதிர்வாதம் புரியாமல் கடைப்பிடிக்க முடியும்.

அடுத்து கையால் சாப்பிடுவது சுகாதாரமானதா என்ற கேள்வி வரலாம்.

நிச்சயமாகச் சாப்பிடலாம். ஆனால் சில விஷயங்களை முறையாக செய்வது அவசியம்.

  • சாப்பிடுவதற்கு முன்பு சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.

  • விரல் இடுக்குகளையும் நகங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

  • சாப்பிடும்போது கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும்

  • மற்றவர்களின் உணவைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். நோய்த்தொற்று இருக்கும் நேரங்களில் கூடுதல் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
மாடு படுத்தால் மழை வருமா? பாரம்பரிய நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன?
கையால் சாப்பிடும்போது  | eating with hands

ஆக கரண்டியைவிட கைதான் சிறந்ததா என்றால் அப்படிச் சொல்ல முடியாது. அவ்வப்போது கரண்டியால் சாப்பிடுவதும் தவறில்லை. உணவின் வகை, தனிப்பட்ட வசதி, பழக்கம் ஆகியவற்றைப் பொறுத்து சாப்பிடும் முறை மாறலாம். தற்போது பெரும்பாலும் கரண்டியால் உண்பதே நவீனமாகிவிட்டது.

ஆனால் பாட்டி சொன்னது போல் உணவைச் சாப்பிடுவது என்பது வயிற்றை நிரப்புவது மட்டுமல்ல; அதன் சுவையையும் மணத்தையும் உணர்ந்து ரசிப்பதும்தான். அதனால்தான் வாழை இலையில் கையால் பிசைந்து சாப்பிட்ட பழைய காலத்து சாப்பாட்டை இன்றும் பலரால் மறக்க முடியவில்லை என்பதே உண்மை.