Other Articles
கவிதைத் தூறல்!
முனி!
பேயை
துரத்தும் சாக்கில்
என் மீது
ஆணி அடித்து
துன்புறுத்துகிறார்களே
வருந்துகிறது
முனியாய் நின்ற
அந்த
பனை மரம்!
...............................................................
அனுபவம்!
திருமணப் பதிவு
அலுவலகத்தில்
இருக்கக் கூடாத
வாசகம்
“முன் அனுபவம் தேவை.”
...............................................................
புதுச் செருப்பு!
திருப்பி அடிக்க
முடியவில்லையே
வெறுப்புடன் அவர்
முறைத்துப் பார்க்கிறார்
காலைக் கடித்த அந்த
புதுச்செருப்பை.
...............................................................
அன்பு
அள்ளிக் கொடுத்தால்
கிள்ளியாவது
திரும்ப கிடைக்கிறது
அன்பு.
...............................................................
இறுமாப்பு
மணம் வீசுவதில்
நானே உயர்ந்தவள்
இறுமாப்பு கொள்கிறாள்
ஜாதி மல்லி.
...............................................................
மது
அருந்துபவரின்
உயிரை
ருசித்து குடிக்கிறது
மது.
...............................................................
சகுனம்
கேட்டுச் சென்ற
கடன்...
முத்துகள் மூன்று
மகளிர் சிறப்பு
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
மொபைல் மூலம் திருடனைப் பிடித்த பெண்
வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த திருடனை, மொபைல் போனில் உள்ள வசதியை பயன்படுத்தி, போலீசாரிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார் ஒரு பெண். கேரளாவில்...
இளம் புயல் குட்டி சாய்னா!
-ஆர். மீனலதா, மும்பை
குட்டி சாய்னாவா? யார்? குட்டி சாய்னா என்றழைக்கப்படும் 13 வயது நய்ஷா கெளர், மும்பை செம்பூர் St. gregarious High School 8வது வகுப்பு படித்து வரும் சுட்டி மாணவி.
சமீபத்தில்...
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
அது ஒரு பொற்காலம்
சிறுகச்சிறுக சேர்த்த பணத்தில் அண்ணாநகரில் இரண்டு கிரெளண்ட் இடம் வாங்கி, இரண்டு படுக்கை அறை, சமயலறை, ஹால், ஸிட் அவட் என சின்னதாக வீடு கட்டி 40 வருடங்களுக்கு முன்...
இதற்காகவா ஒரு கொலை? – 2
-ஜி.எஸ்.எஸ்.
ஸ்டீவன், ஹீதர் தம்பதிகளுக்கிடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரிந்து விடலாம் என்று தீர்மானித்தார்கள். தனித்தனியாக வாழத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களது ஒன்றரை வயதுக் குழந்தையை யார் வைத்துக் கொள்வது? இருவருமே தன்னிடம்தான்...