#BIG NEWS : சுக்குநூறாக உடையும் அதிமுக..! சி.வி.சண்முகம் எடுக்கும் 'முக்கிய' முடிவு? அதிர்ச்சியில் எடப்பாடி!

EPS vs CV Shanmugam
EPS
Updated on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக தமிழ்நாட்டின் நிலையற்ற கட்சியாகவே இருக்கிறது. அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சி தொடர்ந்து 11 தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அதிமுக.

எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட வாங்க முடியாத சூழலில், எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் சி.வி.சண்முகம் தலைமையில் சில எம்எல்ஏ-க்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்து அதிமுக ஓ பன்னீர்செல்வம் ஒரு அணியிலும் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியிலும் எதிரெதிர் திசையில் நின்றுனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக செங்கோட்டையன் தவெக-விலும், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது அதிமுக-விற்கு பாதகமாக அமைந்து விட்டது. இவர்கள் தவிர மற்றும் சில எம்எல்ஏ-க்களும் திமுகவில் இணைந்தது அதிமுகவிற்கு அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக தனித்து 47 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பெற்ற நிலையில், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இதன் காரணமாக அதிமுக நிர்வாகிகளும் எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான அதிர்ச்சியில் உள்ளனர்.

தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்கள் தேவைப்படும் சூழலில், அதிமுக ஆதரவு அளிக்குமா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருந்தது. ஆனால், எம்எல்ஏக்கள் அதிருப்தி காரணமாக இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

மேலும் சி.வி.சண்முகம் தலைமையில் சில எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக ஏற்கனவே இரண்டாக உடைந்த அதிமுக, தற்போது மீண்டும் பிரிவினை ஏற்படும் சூழலில் தத்தளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: தங்கத்தின் விலை ரூ.1,840 உயர்வு.! இல்லத்தரசிகள் ஷாக்.!
EPS vs CV Shanmugam

அதிமுகவின் இந்த வீழ்ச்சியும், தவெக-வின் எழுச்சியும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பெற்றது. ஆனால் இம்முறை அதுவும் கிடைக்காத சூழலில், தான் அதிமுக நிர்வாகிகள் தவெக-விற்கு ஆதரவு அளிக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இருப்பினும் அதிமுகவில் ஒரு தரப்பினர் தவெக-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பினர் ஆதரவளிக்க கூடாது எனவும் கூறி வருகின்றனர்

இதையும் படியுங்கள்:
4 குழுக்களாக பிரிந்த தவெக.! விஜய்யின் அதிரடி முடிவு.!
EPS vs CV Shanmugam
logo
Kalki Online
kalkionline.com