நடிகை ராதா வழக்கில் திடீர் திருப்பம்... அம்பிகாவின் 'அதிர்ச்சி' விளக்கம்..!

ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா அளித்த புகாருக்கு அவரது சகோதரியும் நடிகையுமான அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.
அம்பிகா ராதா
அம்பிகா ராதா
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ரூ. 46 கோடி காசோலை மோசடி புகாரில், தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு நடிகை அம்பிகா பதிலடி கொடுத்துள்ளார்.

1980-களில் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அலையை உருவாக்கிய நடிகை அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள் தற்போது சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். சிறந்த நடிப்பு, நடனம் மற்றும் அழகான தோற்றத்தால் குடும்ப ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த இவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கும் இவர்கள், சின்னத்திரையில் சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் 80-களில் கொடிகட்டிப் பறந்த பிரபல சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது எழுந்துள்ள சொத்துச் சர்ச்சை, சினிமா வட்டாரத்திலும் இணையத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திலும் சொத்துக்காக சண்டை, சச்சரவுகள் வருவது சகஜம் தான். உடன்பிறந்தவர்கள் குழந்தைகளாக இருக்கும்போது எவ்வளவு நெருக்கமாக இருப்பார்களோ அதேயளவு நெருக்கம் பெரியவர்களாகி தனக்கென ஒரு குடும்பம் வந்த பிறகு இருக்குமா என்றால், அது கேள்வி குறிதான்.

ஒரே வீட்டில் ஒற்றுமையாக ஒன்றாக வளர்ந்து, ஒரே தட்டில் சாப்பிட்டு, இன்ப, துன்பங்களை சேர்ந்தே அனுபவித்திருப்பார்கள். ஆனால் வயதாகி பெற்றோர் விட்டு சென்ற சொத்து, வீடு, நிலம், பணம் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய நேரம் வரும்போது அதே உறவுகளுக்குள் கணக்கு வேற மாதிரி ஆரம்பித்து விடுகிறது. சொத்தா? பாசமா? என்று வரும் போது சொத்து தான் ஜொயிக்கிறது. இதில் ஆரம்பிக்கும் பிரச்சனை சில நேரங்களில் வீட்டுக்குள்ளேயே பேசி தீர்க்க முடியாத அளவுக்கு கைமீறி போய்விடும். அப்படிதான் தற்போது நடிகை ராதா அளித்திருக்கும் புகார் அந்த மாதிரி ஒரு குடும்பப் பிரச்சனையை மீண்டும் பேச வைத்திருக்கிறது.

நடிகை ராதாவுக்கு சொந்தமான, கையொப்பமிடப்பட்ட வெற்று காசோலைகளை அவருக்கு தெரியாமல் எடுத்து, சுமார் ரூ. 46 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக, தன் அக்கா நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

நடிகை அம்பிகா மீது புகாரளித்த ராதா, அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அம்பிகா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை பார்க்கும் போது சொத்துத் தகராறு என்று வந்துவிட்டால் அதில் பெரிய குடும்பம், சிறிய குடும்பம், பிரபலம் என்ற எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

இதற்கிடையே நடிகை ராதா அளித்த புகாருக்கு அவரது சகோதரியும் நடிகையுமான அம்பிகா பதிலடி கொடுத்துள்ளார்.

அம்பிகா ராதா
அம்பிகா ராதாimage credit-cinema.dinamalar.com

இதுகுறித்து பேசிய அம்பிகா, மதுரவாயலில் ஏ.ஆர்.எஸ் (ARS) நிறுவனத்திற்குச் சொந்தமான 50 சென்ட் நிலத்தை தனது சகோதரி நடிகை ராதா முறைகேடாக அபகரித்துக் கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சென்னையில் உள்ள ஏ.ஆர்.எஸ் கார்டன் சொத்துகளை கேரளாவில் வைத்து அவர் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும், 1,299 கிராம் தங்கத்தைத் திருடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள மாநிலம் வட்டியூர்காவு காவல் நிலையத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் ராதாவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அம்பிகா, 'நிலுவையில் உள்ள இவ்வழக்குகளை மறைத்துவிட்டு, ஏதோ சதி நடந்தது போல ராதா பொய்யான புகாரை அளித்துள்ளார். அவர் மீது தொடரப்பட்ட செக் மோசடி வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே, முன்கூட்டியே காவல் நிலையத்தில் இப்படி ஒரு பொய் புகாரைக் கொடுத்து நாடகமாடுகிறார்' என்று தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வாகத் தான் ராதா, தனக்கு (அம்பிகா) 5 காசோலைகளை தீர்வுத்தொகையாக வழங்கியதாகவும் அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : காசோலை போல துண்டுப் பிரசுரம்... அதிமுகவிற்கு எதிராக வழக்கு..!
அம்பிகா ராதா

இவர்களின் தாயார் சரசம்மா மறைவுக்குப் பிறகு குடும்பச் சொத்துகள் மற்றும் ஏ.ஆர்.எஸ் (ARS) / ஆர்.ஆர் (RR) கார்டன் நிலம் தொடர்பான சகோதரிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும், குடும்பத் தகராறும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. நிலம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் அங்கு எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகே ஏஆர்எஸ் என்ற கார்டன் என்ற பெயருடன் ஸ்டூடியோ ஒன்றை 1983-ஆம் ஆண்டு இருவரும் தங்களின் கூட்டு உழைப்பில் தொடங்கினர். தற்போது, ஏஆர்எஸ் கார்டன் விவகாரத்தில் சகோதரிகள் இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த கார்டனில் ஏராளமான சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்டூடியோவில் உள்ள பங்குகளை விற்பதில் ராதாவுக்கும் அம்பிகாவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் தான், 46 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக அம்பிகா மீது ராதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். அதேசமயம் ARS கார்டன் நிலம் தங்களின் கூட்டு உழைப்பில் வாங்கப்பட்டது என்றும், அதில் ராதாவிற்கு மட்டும் முழு உரிமை கிடையாது என்றும் அம்பிகா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோரி பரபரப்பு வழக்கு!
அம்பிகா ராதா

இதை பார்க்கும்போது ஒரு விஷயம் நன்றாக புரியும். எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் குடும்பத்திற்குள் சொத்து யாருக்கு எவ்வளவு என்ற கேள்வி வரும் போது உறவுக்குள் சட்டம் வந்து நிற்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு இதேபோன்று நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலும் சொத்து தொடர்பான பிரச்சனை நீதிமன்றம் வரை போனது. சிவாஜி கணேசனின் மகள்கள் தங்களுடைய சகோதரர்களான நடிகர் பிரபு, ராம்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அதேபோல் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மகள் நடிகை வனிதா விஜயகுமார் குடும்பத்திலும் இதேபோல சொத்து பிரச்சனை வந்தது.

இதையும் படியுங்கள்:
ஏற்கனவே சொத்து தகராறு... இப்போது ரூ.46 கோடி செக் மோசடி! அம்பிகா மீது ராதா அதிர்ச்சி புகார்.!​
அம்பிகா ராதா

அனைவரின் குடும்பத்திலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை... ஆனால் பிரபலங்களில் வீடுகளில் நடக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ள மக்கள் அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில் தற்போது அம்பிகா ராதா சகோதரிகள் சொத்து பிரச்சனை இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com