ஆவினை தொடர்ந்து நெய், வெண்ணெய் விலையை உயர்த்திய ‘அமுல்’! பொதுமக்கள் அதிர்ச்சி!

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அமுல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. புதிய விலை விவரங்கள் உள்ளே.
amul |அமுல் நெய்
amul |அமுல் நெய்image credit-businesstoday.in/india, gharstuff.com
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘அமுல்’ (AMUL-Anand Milk Union Limited), தனது நெய் மற்றும் வெண்ணெய் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் பாக்கெட்டுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதுடன், சந்தையில் அமுல் பசு நெய்க்கான தேவை அதிகரித்துள்ள சூழலிலும், அதன் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பண்டிகைக் காலத்தில் இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்ய நெய், வெண்ணெய் ஆகியவற்றின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால், இந்த விலை உயர்வு நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவின் நிறுவனம் நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட 67 ஆவின் பொருட்களின் விலையை உயர்த்திய நிலையில் தற்போது அமுல் நிறுவனமும் தனது நெய், வெண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குஜராத் மற்றும் அண்டை மாநிலமான ராஜஸ்தானில் கலப்படப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தரமான பிராண்டட் நெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில், இந்த இரு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 லட்சம் கிலோ போலியான (கலப்பட) நெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நுகர்வோர் மத்தியில் போலிப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட்டு, அமுல் போன்ற நம்பகமான பிராண்டட் பொருட்களை வாங்குவதற்கான நாட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆன்லைன் தளங்களில் அமுல் பசு நெய் (அமுல் நெய்) லிட்டருக்கு 740 ரூபாயாகவும், 'சாகர்' (Sagar) நெய் 710 ரூபாயாகவும், தூய நெய் 700 ரூபாயாகவும், எருமை நெய் 720 ரூபாயாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.

நெய்
நெய்

இருப்பினும், பல ஆன்லைன் தளங்களில் அமுலின் தூய நெய், எருமை நெய் மற்றும் சில கூட்டுப் பொதிகள் (combo packs) உள்ளிட்ட பல வகைகள், 'விற்றுத் தீர்ந்தன' (Sold out) எனக் காட்டப்பட்டுள்ளன.

அமுல் பொருட்களின் புதிய விலை விவரங்கள்:

சமீபத்திய விலை மாற்றங்களின்படி, அமுல் பொருட்களின் புதிய அதிகபட்ச விற்பனை விலை (MRP) விவரம் பின்வருமாறு:

* முன்பு ரூ. 630-க்கு விற்கப்பட்ட 1 கிலோ நெய் (Carton) தற்போது ரூ. 50 உயர்த்தப்பட்டு ரூ. 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* 500 கிராம் தூய நெய் பாக்கெட்டின் விலை ரூ. 325-ல் இருந்து ரூ. 20 அதிகரித்து ரூ.345 ஆகியுள்ளது.

* முன்பு ரூ. 63க்கு விற்கப்பட்ட 100 கிராம் வெண்ணெய் பாக்கெட் தற்போது ரூ. 66 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!ஆவின், அமுல் பொருட்களின் விலை குறைந்தது..!!
amul |அமுல் நெய்

* 500 கிராம் வெண்ணெய் பாக்கெட் ரூ. 310-ல் இருந்து ரூ. 15 அதிகரித்து, தற்போது ரூ. 325-க்கு விற்கப்படுகிறது.

கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீமாகக் குறைக்கப்பட்டபோது, அமுல் நிறுவனம் தனது 700-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருந்தது. உதாரணமாக, அப்போது, ​​ஒரு லிட்டர் நெய் பாக்கெட்டின் விலை ரூ. 650-லிருந்து ரூ. 610-ஆகக் குறைக்கப்பட்டது; அதேபோல், ஐந்து லிட்டர் நெய் டின்னின் விலை ரூ. 3,275-லிருந்து ரூ. 3,075-ஆகக் குறைக்கப்பட்டது. வெண்ணெய் விலையும் குறைக்கப்பட்டது; 100 கிராம் பாக்கெட் ரூ. 62-லிருந்து ரூ. 58-க்கும், 500 கிராம் பாக்கெட் ரூ. 305-லிருந்து ரூ. 285-க்கும் மாற்றப்பட்டன. ஆனால், தற்போதைய இந்த திடீர் விலை உயர்வு, அந்த ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வோர் பெற்ற பலன்களைப் பெருமளவு ஈடுகட்டிவிட்டது.

மேலும், ஆண்டு முழுவதும் விற்கப்படும் நெய்யில் சுமார் 45 சதவீதம் பண்டிகைக் காலத்தில்தான் நுகரப்படுகிறது. இந்த திடீர் தேவை அதிகரிப்பால் விநியோகத்தில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அகமதாபாத்தில் உள்ள சில்லறை விற்பனையாளர்களின் கூற்றுப்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்குப் பிறகு நெய், குறிப்பாக பசு நெய்க்கான தேவை திடீரென அதிகரித்ததால், அதன் இருப்பு குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
காலாவதி தேதியை அழித்துவிட்டு விற்பனை: அமுல் பிராண்ட் பெயரில் நடந்த மெகா மோசடி..!
amul |அமுல் நெய்

தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்புகள் செய்ய மக்கள் ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த விலை உயர்வும் தட்டுப்பாடும் நுகர்வோருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.