அரிசியை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் கிடுகிடு உயர்வு: அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்..!

அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்த நிலையில், தற்போது மளிகைப் பொருட்கள் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
விலை உயர்வுAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பங்குச்சந்தைப் புள்ளிகளில் இல்லை; சாமானிய மக்களின் தட்டில் இருக்கும் உணவில் இருக்கிறது. சத்தமே இல்லாமல் அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்த நிலையில், தற்போது மளிகைப் பொருட்கள் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களது மாதாந்திர குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

முன்பெல்லாம் ஆடம்பரப் பொருட்களை வாங்க யோசித்த சாமானியர்கள், இன்று ஒரு மூட்டை அரிசி வாங்க யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பருவமழை பொய்த்தது முதல் சந்தை வரத்துக் குறைந்தது வரை பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும், இதன் நேரடிப் பாதிப்பைச் சுமப்பது அடித்தட்டு மக்களே.

கடந்த சில மாதங்களாக 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கூடுதல் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரண அரிசி சில்லறையில் கிலோ ரூ.70 எனவும், 26 கிலோ மூட்டை ரூ.1,800 எனவும் உயர்ந்துவிட்டது. உயர் ரக அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.82 ஆக உயர்ந்து, மூட்டை ரூ.2,150 ஆக அதிகரித்துள்ளது.

26 கிலோ மூட்டை டீலக்ஸ் பொன்னி அரிசி ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 ஆகவும், 26 கிலோ மூட்டை பொன்னி அரிசி ரூ.1,600-ல் இருந்து ரூ.1,950 ஆகவும், வெள்ளை பொன்னி ரூ.2,300 ஆகவும் அதிகரித்துள்ளது.

26 கிலோ சாப்பாடு அரிசி மூட்டை ரூ.300 ரூபாய் முதல் ரூ.500 வரை அதிகரித்துள்ளது. ரூ.1000 ஆக இருந்த அரிசி மூட்டை ரூ.1500 ஆகவும், ரூ.1500 ஆக இருந்த மூட்டை ரூ.2000 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல் 26 கிலோ மூட்டை இட்லி அரிசி ரூ.900-ல் இருந்து ரூ.1,200 ஆகவும், பாஸ்மதி அரிசி 30 கிலோ மூட்டை ரூ.3,300-ல் இருந்து ரூ.3,600 ஆகவும் உயர்ந்துள்ளது.

கிச்சடி புழுங்கல் அரிசி ரூ.2120-ல் இருந்து 80 ரூபாய் அதிகரித்து ரூ.2,200 ஆக உயர்ந்துள்ளது.

அரிசி விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீள்வதற்குள், தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் 20 சதவீதம் வரை சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளன.

மளிகை பொருட்கள் விலை
மளிகை பொருட்கள் விலைAI image

வரத்து குறைவால் கடந்த 2 மாதங்களில் கிலோவுக்கு ரூ.10-20 வரை உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் கிலோவுக்கு ரூ.40-50 வரை உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் கிலோ ரூ.220-க்கு விற்கப்பட்ட மிளகாய் வற்றல் தற்போது 340 ரூபாய்க்கு மேல் வரை விற்கப்படுகிறது.

தனியா விலை ரூ.150-ல் இருந்து ரூ.220 ஆக உயர்ந்துள்ளது.

உளுந்து விலை ரூ.140-ல் இருந்து ரூ.150 ஆகவும்,

துவரம் பருப்பு ரூ.15-ல் இருந்து 160 ஆகவும்,

பொட்டுக்கடலை ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும்,

கடலைப்பருப்பு விலை ரூ.90-ல் இருந்து ரூ.100 ஆகவும்,

நிலக்கடலை விலை ரூ.140-ல் இருந்து ரூ.17 ஆகவும்,

முந்திரி விலை ரூ.900-ல் இருந்து ரூ.1000 ஆகவும்,

பாதாம் பருப்பு விலை ரூ.1200-ல் இருந்து 1440 ஆகவும்,

பாசிப்பருப்பு விலை ரூ.110-ல் இருந்து ரூ.130 ஆகவும்,

நாட்டு சிவப்பு கொண்டைக்கடலை விலை ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும்,

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகள் ஷாக்.! மளிகை விலை விண்ணை முட்டுகிறது: அரிசி,பருப்பு,எண்ணெய் விலைகள் தாறுமாறு உயர்வு!
விலை உயர்வு

வெள்ளைக்கொண்டைக்கடலை விலை ரூ.120-ல் இருந்து ரூ.140 ஆகவும்,

தட்டைப்பயிறு விலை ரூ.110-ல் இருந்து ரூ.130 ஆகவும்,

சீரகம் விலை ரூ.330-ல் இருந்து ரூ.360 ஆகவும்,

வெந்தயம் விலை ரூ.120-ல் இருந்த ரூ.160 ஆகவும்,

வெல்லம் விலை ரூ.50-ல் இருந்து ரூ.100 ஆகவும்,

பட்டாணி விலை ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல் கிலோ 150-க்கு விற்கப்பட்ட பூண்டு விலை தற்போது ரூ.280 முதல் ரூ.300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இரண்டு மடங்கு பூண்டு விலை கூடியிருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சூரிய காந்தி ரீ பைண்டு சமையல் எண்ணெய் கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.150 ஆகவும், ரூ.150 இருந்த பாமாயில் விலை தற்போது ரூ.185 ஆகவும் அதிகரித்துள்ளது.

சர்க்கரை விலை மட்டும் கிலோ ரூ.70 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.55 ஆக குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மூங்கில் அரிசி சாப்பிட்டா இப்படி ஒரு நன்மை கிடைக்குமா? சர்க்கரை நோய் முதல் மூட்டு வலி வரை!
விலை உயர்வு

அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை மட்டுமல்லாது காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட் மற்றும் பீன்ஸ் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. தக்காளி, உருளைக்கிழங்கு விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பருவமழை குறைந்து நெல் மற்றும் பயறு வரத்து சரிந்திருப்பதும், பண்டிகை காலத் தேவை அதிகரித்ததும்தான் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

அதேசமயம், அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மக்களுக்கு அடுத்த ஷாக்..! தீபாவளிக்கு முன் கிலோ ₹100 தொடும் அரிசி விலை..!
விலை உயர்வு

குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com