மூங்கில் அரிசி சாப்பிட்டா இப்படி ஒரு நன்மை கிடைக்குமா? சர்க்கரை நோய் முதல் மூட்டு வலி வரை!

60 வருட மூங்கில் மரத்திலிருந்து கிடைக்கும் அதிசய அரிசியின் சத்துக்களும் பயன்படுத்தும் முறைகளும்!
Bamboo rice - மூங்கில் அரிசி நன்மைகள்
Bamboo rice - மூங்கில் அரிசி நன்மைகள்
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on

மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும். பழங்குடி மக்களின் முக்கியமான உணவு இந்த மூங்கில் அரிசி. இந்த அரிசி காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து எடுத்து சேர்த்த விதைகளாகும்.

இதனை உணவாக உட்கொள்வதால் உடலுக்கு மிகவும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

மூங்கில் அரிசியில் ஏராளமான கலோரிகள் உள்ளது

ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டுமே 60 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் புரதச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின், ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து உள்ளது.

சர்க்கரை நோய் குறைய

சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து மெலிந்து போனவர்களை சீரான உடல் அமைப்பை பெற செய்யும். மூங்கில் அரிசி, திணை அரிசி, சாலாமி அரிசி ஆகியவற்றை 100 கிராம் எடுத்து மாவு போல் அரைத்து கொள்ளவும். இந்த மாவிலிருந்து ரெண்டு ஸ்பூன் எடுத்து கஞ்சி போல் செய்து தினமும் குடித்து வந்தால் உடல் வலிமை அடையும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

எலும்பு ஆரோக்கியம் பெற

மூங்கில் அரிசியை தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோத்தல், முதுகு வலி, இடுப்பு வலி / கழுத்து வலி / உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

உடல் எடை குறைய

மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

Fat - மூங்கில் அரிசி நன்மைகள்
Fat - மூங்கில் அரிசி நன்மைகள்

கொழுப்பு கரைய

மூங்கில் அரிசியில் நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ்டெரால்கள் நிறைந்துள்ளன. பைட்டோஸ்டெரால்கள் என்பவை தாவர ஸ்டெரால்கள் ஆகும். இவை கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதன் மூலம், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. மூங்கில் அரிசியில் உள்ள நார்ச்சத்தும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம் சீராக

மூங்கில் அரிசியில் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டின் காரணமாக நாளமில்லா பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இதனால் தமனிகளின் தடிமனை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை சரி செய்யவும் உதவுகிறது.

மனநல பிரச்னை சரியாக

மூங்கில் அரிசியில் மனநிலையை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்ள செரோடோனின், டோபமைன் என்ற இரண்டு முக்கிய நரம்பு கடத்திகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி மனநிலையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

பற்களை வலுப்படுத்த

மூங்கில் அரிசியில் வைட்டமின் B6 அதிகளவில் உள்ளது. இது பற்கள் சிதைவடைவதிலிருந்து பாதுகாப்பதோடு, பற்சிதைவுப் பள்ளங்கள் (cavities) உருவாவதையும் தடுக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் B6 பற்களை வலுப்படுத்த உதவுகிறது.

தொண்டை, இருமல் சரியாக

மூங்கில் அரிசியில் உள்ள பாஸ்பரஸ் சத்து, இருமல் மற்றும் தொண்டை தொடர்பான பாதிப்புகளைத் தணிக்க உதவுகிறது. பாஸ்பரஸில் உள்ள ஆஸ்துமா எதிர்ப்புப் பண்புகள், ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
70 வயதில் டிமென்ஷியா வராமல் தடுக்க 40 வயதில் செய்ய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!
Bamboo rice - மூங்கில் அரிசி நன்மைகள்

வைட்டமின் குறைபாடு நீங்க

மூங்கில் அரிசியில் வைட்டமின் பி வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளது. இதில் குளூட்டன் இல்லாததால் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் இதை எளிதில் சாப்பிடலாம்.

இது சிவப்பு ரத்தங்களின் உற்பத்தி நரம்புகளின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவற்றிற்கு தேவைப்படுகிறது.

குழந்தைகளின் வைட்டமின் பி6 குறைபாடு காரணமாக ரத்த சோகை, வலிப்பு, அறிவாற்றல் பிரச்சனைகள் ஏற்படும். இந்த மூங்கில் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இது போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

செரிமானம் சரியாக

மூங்கில் அரிசியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது குடல் இயக்கத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான உடலினை நமக்கு கொடுக்கிறது.

இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் வாத நோயை குறைக்க உதவுகிறது.

இதில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தரும்.

இதையும் படியுங்கள்:
சியா விதையா? ஆளி விதையா? உங்கள் உடலுக்கு எது சிறந்தது? இதோ முழு ஒப்பீடு!
Bamboo rice - மூங்கில் அரிசி நன்மைகள்

Reference:

logo
Kalki Online
kalkionline.com