வாடகை வீட்டிற்கு முற்றுப்புள்ளி.. சென்னையில் சொந்த வீடு! பலரின் பல ஆண்டு கனவு இப்போ நிறைவேற போகிறது!

சென்னையில் சொந்த வீடு பெற விரும்புவோருக்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...
TNHB Housing Scheme
Housing Scheme
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

நாட்டின் முக்கியப் பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 'வந்தாரை வாழவைக்கும் சென்னை' என்ற புகழுக்கு ஏற்ப, பல தரப்பட்ட மக்களின் கனவுகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு முக்கியப் பெருநகரமாகச் சென்னை திகழ்கிறது. வேலை, கல்வி, மருத்துவம் எனப் பல்வேறு தேவைகளுக்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் சென்னையை நோக்கி வருகின்றனர்.

சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அந்த வகையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஏழை, எளிய மக்களின் கனவு இப்போது நிஜமாகப்போகிறது.

9 இடங்களில் 6,157 புதிய வீடுகள் கட்டப்பட உள்ள நிலையில், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு காலியாக உள்ள 13,000 வீடுகளும் பயனாளிகளுக்கு கிடைக்கப்போகிறது. இந்த வீடுகள் எப்படி ஒதுக்கப்படுகிறது, யாருக்கெல்லாம் கொடுக்கப்படுகிறது, தகுதிகள் என்ன, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம் வாங்க...

குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குப் பாதுகாப்பான வீடுகளை வழங்கவும் தமிழகத்தில் குடிசை மாற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையில் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, ஏழை மற்றும் எளிய மக்களுக்கான வீட்டு வசதித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் ரூ. 1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனாதைக்குப்பம் 64 வீடுகள், வியாசர்பாடி பழைய பிளாக் 1,158 வீடுகள், பட்டினப்பாக்கம் 1,484 வீடுகள், ருக்மணி நகர் 111 வீடுகள், முல்லை நகர் 462 வீடுகள், உதயசூரியன் நகர் 850 வீடுகள், பச்சைக்கல் வீராசாமி தெரு 912 வீடுகள், மேற்குக் கல்லறை சாலை 792 வீடுகள், கக்கன் காலனி 324 வீடுகள் என மொத்தம் 9 இடங்களில் 6,157 வீடுகள் கட்டப்பட உள்ளன.

இதற்கிடையே, பழுதடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்! வெற்றி வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
TNHB Housing Scheme

ஏற்கனவே இருந்த அளவைவிட இரு மடங்காக அதிகரித்து புதிதாகக் கட்டப்படும் ஒவ்வொரு குடியிருப்பும் 420 சதுர அடி பரப்பளவில் ஒரு படுக்கையறை, கூடம், சமையலறை (1BHK) என்ற அமைப்பில் இருக்கும் என்றும், நிலத்தின் தன்மை மற்றும் இடத்தின் வசதியைப் பொறுத்து 3 மாடிகள் முதல் 9 மாடிகள் வரை குடியிருப்புகள் கட்டப்படும்.

தற்போது சென்னையில் 9 இடங்களில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 21 இடங்களில் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான அரசாணைகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNHB வீடு|புதிய வீடுகள்
TNHB வீடு|புதிய வீடுகள்image credit-nobroker.in

யாருக்கு முன்னுரிமை? :

பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதே பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படும் போது, ஏற்கெனவே அங்கு வசித்து வந்த தகுதியான பயனாளிகளுக்கே முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படும். அவ்வாறு வீடு பெறும் பயனாளிகள் ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அந்தப் பகுதிகளில் ஏற்கெனவே வசிக்காத புதிய விண்ணப்பதாரர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கான கட்டணம் மாறுபடும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடுகளைப் பெற விரும்புவோர் சில முக்கியத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கெனவே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு பெற்றவர்கள் மீண்டும் வீடு பெறுவதைத் தடுக்கும் வகையில் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்படும் என்றும், ஒரே நபர் பலமுறை வீடுகளைப் பெற முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளை விற்பனை செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? :

தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டியது கட்டாயம்.

விண்ணப்பதாரர் சென்னையில் குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை வசித்திருக்க வேண்டும்.

அரசு வேலையில் இருக்கக் கூடாது.

இதையும் படியுங்கள்:
சொந்த வீடு கனவா? ரூ.1.80 லட்சம் மானியத்துடன் வீடு பெற விண்ணப்பிப்பது எப்படி?
TNHB Housing Scheme

வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவராக இருக்கக் கூடாது.

GST பதிவு வைத்திருக்கக் கூடாது.

விண்ணப்பதாரர் பெயரில் சொத்துகள் இருக்கக் கூடாது.

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :

முழுமையான வீட்டு முகவரி.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியல் (E-Print).

கணவன் மற்றும் மனைவியின் தனித்தனியான பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள்.

வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.

வருமானச் சான்றிதழ் நகல்.

சிறப்புச் சான்றிதழ் (மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கலப்புத் திருமணம் செய்தவர்கள்)

எங்கெங்கு விண்ணப்பிக்க வேண்டும்?:

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு கோரும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை, முதலமைச்சரின் தனிப்பிரிவு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் சமர்ப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு: புதிய திட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்!
TNHB Housing Scheme

புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, உண்மையில் வீடு தேவைப்படும் தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு அவை சென்றடையும் போது தான் அனைவருக்கும் வீடு என்ற இலக்கு முழுமையடையும் என்பது குறிப்பிடத்தக்கது.