சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்.. ஒட்டுமொத்தமாக எழுந்து நின்ற திமுக எம்எல்ஏக்கள்..!

திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசினார்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்image credit - maalaimaalar.com
Updated on

திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசினார்.

சட்டமன்றத்தில் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார். முதலமைச்சர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது எழுந்து நின்று திமுகவினர் முழக்கமிட்டனர். எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று கே.என். நேரு உள்ளிட்ட மூத்த திமுக உறுப்பினர் தங்களுக்குள் ஆலோசனை செய்தனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முதலமைச்சர் விஜய் திமுக ஆட்சியில் நடத்த பல்வேறு சம்பவங்களை பட்டியலிடத் தொடங்கினார்.

திமுகவினர் அரசியல் பாராம்பரியத்தை பேசியால் ஓடினாலும் ஓடிவிடுவார்கள் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

சட்டம், ஒழுங்கு சீரழிவு பற்றி பேசுவதற்கு முன் திமுக ஆட்சியை கண்ணாடியில் பார்த்து கொள்வது நல்லது.

கடந்த ஆட்சியில் திமுகவினர் பலர் காப்பற்றப்பட்டது குறித்து என்னிடம் சில சாம்பிள்கள் உள்ளன. திமுக அரசுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய டாக்குமெண்ட் என்னிடம் உள்ளது என்றார்.

வீராணம் ஒப்பந்தத்திற்கு 1974 வரை 7 முறை தவணை முறையில் ரூ.29 லட்சம் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. வீராணம் டெண்டருக்காக இரண்டரை சதவீதம் கமிஷன் கேட்டார் கருணாநிதி மருமகன் மாறன் என்றும், வீராணம் ஒப்பந்தத்தை சத்தியநாராயணா பிரதர்ஸ்க்கு வழங்க முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியவர் கருணாநிதி என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது என்றார்.

1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சு.

Party Fund-ல் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது. Party Fund குறித்து பேசும் போது ஆதாரம் கேட்டார்கள், Party Fund ஆதாரம் இங்கு பக்கத்தில் தான் உள்ளது என்றார். Party Fund என்ற பெயரில் வாங்கிய லஞ்சத்தில் பலன் பெற்றவர்கள் முக ஸ்டாலின், உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது. 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது.

Party Fund என்ற பெயரில் வாங்கிய லஞ்சத்தில் பலன் பெற்றவர் உதயநிதி என்றும் Party Fund என்ற பெயரில் வாங்கிய லஞ்சத்தில் பலன் பெற்றவர் கவின், ரமேஷ் என்றும் ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம் என்றும் கூறினார்.

திமுக எப்போது எது செய்தாலும் குடும்பமாக சேர்ந்து தான் செய்வார்கள். தவறு செய்தால் மாட்டிக்கொள்ளாத வகையில் ஏற்பாடு செய்து விட்டு திமுகவினர் தப்பு செய்வார்கள்.

கரூர் கேங் என்ற பெயரில் பார் உரிமையாளர்களிடம் Party Fund வசூலித்தனர். கரூர் கேங் Organised crime syndicate ஆக செயல்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது.

திமுகவினர் குறித்து பேசும் போது FRAUD, CORRUPT என முதல்வர் விஜய் அழுத்தி கூறியதால் திமுகவின் கூச்சலிட்டனர்.

சட்டப்பேரவையில் ஊழல் என்று சொன்னால் ஆதராம் கொடு என திமுகவினர் எழுந்து விடுவார்கள். என்ன கோல்மால் செய்தாலும் எதுவும் எடுபடாது என்று முதமைச்சர் விஜய் கூறினார்.

3 துறைகளின் ஃபைல்களை தான் ஓப்பன் செய்துள்ளோம், மற்றவைகளை எல்லாம் ஓபன் செய்தால்? என்று ஆகும் என்று கேள்வி எழுப்பினார். திமுக ஆதாரம் கேட்டால் 50 வருடங்கள் கீழே சென்று தோண்டி எடுத்து வருவோம் என்றார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

காவல்துறையின் சட்டபூர்வ கடமையான எஃப்ஐஆர் பதிவை கூட திமுக ஆட்சியில் ஒழுங்காக செய்யவில்லை. எல்லாவற்றையும் மக்கள் மறந்து விட்டதாக திமுகவினர் நினைக்கிறார்கள், ஆனால் மக்கள் மறக்கவில்லை.

இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? திமுகவுக்கு ஒட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால் தான், இவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறார்.

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு, போதைப்பொருள் பயன்பாடுகள் இருந்தன.

திமுக ஆட்சியில் பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகர் மனைவி கைது செய்யப்படவில்லை, பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக பிரமுகர்கள் மீது உடனடியாக வழக்கு பதியவில்லை என்றார்.

திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டினார். திமுக மீதான புகார்களில் உடனடியாக FIR பதிவு செய்யலாமல் கால தாமதம் செய்தனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்..!
முதலமைச்சர் விஜய்

தவெக ஆட்சியில் தவறு செய்வர்கள் ஆளும்கட்சியினராக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள் என்று கூறியா முதலமைச்சர் விஜய், ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா? முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பினார்.

திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும். செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்.

கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஆதாரம் போதுமா.. திமுகவின் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டிய முதல்வர் விஜய்..!
முதலமைச்சர் விஜய்

மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான். இறைவனும், இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், கடந்த கால திமுக அரசின் மீதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக உரையாற்றினார்.

முதல்வரின் இந்த பேச்சால் அதிர்ச்சியடைந்த திமுக உறுப்பினர்கள் உடனடியாக எழுந்து நின்று பலத்த முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
President Rules | அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்? அரசியலைப்பு சட்டம் என்ன சொல்கிறது?
முதலமைச்சர் விஜய்

இதனிடையே, அவையில் முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வாறு உடனடியாக பதிலடி கொடுப்பது என்பது குறித்து கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த திமுக உறுப்பினர்கள் தங்களுக்குள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

logo
Kalki Online
kalkionline.com