கோவை சம்பவம் எதிரொலி: பெண்களே உடனே ‘காவல் உதவி’ செயலியை Download பண்ணுங்க..!

பெண்களின் பாதுகாப்பிற்கு உதவும் ‘காவல் உதவி’ செயலியை எப்படி Download செய்வது என்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
Kaaval Uthavi app
Kaaval Uthavi app
Published on

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் ஒரு பெரிய பிரச்சனையாகவே உருவெடுத்துள்ளது என்றே சொல்லலாம். குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், பாலியல் பலாத்காரம், பெண் சிசுக்கொலை மற்றும் அமிலம் வீசுதல் போன்று பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தினமும் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் தான் உள்ளது. இந்தியாவில் எந்த பகுதியையும் பெண்களுக்கு பாதுகாப்பானதாகக் கூற முடியாது. வீடு, பணியிடம், பள்ளி, கல்லூரி, கோவில் என எல்லா இடங்களிலும் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. 2022ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இருதினங்களுக்கு முன்பு கூட கோவையில் முதுகலை படித்துவரும் மாணவி ஒருவர் தனது காதலனுடன் இரவில் காரில் தனியாக பேசிக்கொண்டிருந்த போது 3 கயவர்கள் காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதையும் படியுங்கள்:
பெண்கள் பாதுகாப்பு திட்டம் தமிழ்நாடு காவல்துறை அசத்தல்!
Kaaval Uthavi app

அந்த வகையில் பெண்கள், குழந்தைகளை குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெண்கள் மத்தியில் இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முன்பு எல்லாம் சமூகத்துக்கு பயந்து கொண்டு, வெளியில் சொல்லாமல் இருந்தனர். இன்றைக்கு, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று புகார் செய்ய முன்வந்துள்ளனர்.

அந்த வகையில் அவசர காலங்களில் பெண்களுக்கும், பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு காவல்துறையால் கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது தான் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலி. இந்த செயலியை அவசர தேவைக்காக பெண்கள் முதல் குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

காவல் உதவி செயலி அப்படின்னா என்ன?, அதனால் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

கூகுள் பிளே ஸ்டோரில் போய் ‘Kaval uthavi’ என்று டைப் செய்தால் நமக்கு இந்த செயலி வரும். அதை பதிவிறக்கம்(Download) செய்ய வேண்டும்.

பின்னர் அந்த செயலியின் உள்ளே சென்றால் Sign in செய்த பின்னர் நீங்கள் எப்போது உபயோகிக்கும், வெளியில் எடுத்துச்செல்லும் போன் நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும். போன் நம்பரை கொடுத்தவுடன் verify என்று கேட்கும். அதன் பின்னர் ஒரு பாக்ஸ் ஓபனாகும். அதில் mandatory details எல்லாம் கேட்கும். அதில் உங்களுடைய பெயர், ஆண், பெண் என்ற விவரம், பிறந்த தேதி, வீட்டு முகவரி, உங்களுடைய ஏரியா, நகரம், மாவட்டம் போன்ற விவரங்கள் அந்த டைப் செய்த பின்னர் sign up கொடுக்க வேண்டும்.

அடுத்து உங்களுக்கு Activation code காட்டும். அதில் Activation code கொடுத்து நீங்க Ok கொடுத்தால் தான் காவல் உதவி ஆப்பை பயன்படுத்த முடியும். Activation code நம்பர் உங்களுடைய செல்போனுக்கு வரும். அதாவது இந்த செயலிக்கு நீங்க முதலில் கொடுத்த போன் நம்பருக்கு இந்த Activation code நம்ர் வரும். அதை இதில் பதிவு செய்து Ok கொடுத்த பின்னர் காவல் உதவி ஆப்பை நீங்கள் உபயோகப்படுத்த ஆரம்பித்து விடலாம்.

இந்த ஆப்பின் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஆப்பை நீங்க sign in செய்த உடன் Mandatoryயாக மூன்று emergency contact கேட்பார்கள். அந்த மூன்று contact நம்பரை நீங்க கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மூன்று contactல் பெயர், போன் நம்பர், உறவுமுறை போன்ற தகவல்களை அதில் பதிவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆண் டெய்லர்கள், ஆண் ஜிம் ட்ரெய்னர்கள் கிடையாது… பெண்கள் பாதுகாப்பு கருதி புதிய கட்டுபாடுகள்!
Kaaval Uthavi app

அதாவது, உங்கள் வீட்டில் யார் இருக்காங்க அல்லது உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரும் போது இவங்களுக்கு போன் பண்ணா எடுப்பார்கள் என்று நினைக்கும் மூன்று பேரின் தகவல்களை இதில் தரவேண்டும்.

கடைசியாக Submit கொடுக்க வேண்டும். submit கொடுத்தவுடன் உங்களுடைய டேட்டா அனைத்தும் இதில் உள்ளது என்று உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். நாம் ok கொடுத்தவுடன் உங்களுடைய புகைப்படம், வீடியோவை Record செய்ய (allow kaval uthavi to take pictures and record video?)அனுமதி கேட்கும். நீங்க while using the app ஐ கிளிக் செய்தவுடன் device's location கேட்கும். அதற்கும் ஓகே கொடுத்தவுடன் record audio கேட்கும் அதற்கும் ஒகே (while using app) கொடுத்தவுடன் உங்களுடைய காவல் உதவி ஆப் ரெடியாகி விட்டது என்று அர்த்தம்.

எங்கேயாவது வெளியில்் செல்லும் போது ஆபத்தில் மாட்டிக்கொண்டீர்கள் என்றால் காவல் உதவி செயலியை நீங்கள் ஓபன் செய்து அதில் ‘அவசரம்’ என்ற சிகப்பு கலர் பட்டன் இருக்கும்.

அந்த பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் எந்த இடத்தில் இருக்கீங்க என்பது தொடர்பான 30 விநாடி வீடியோவை தானாகவே அந்த ஆப் பதிவு(record) செய்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும்.

அதன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று காவல்துறையினர் உங்களுக்கு போன் செய்து கேட்பார்கள்.

கிட்டதட்ட 60 விதமான உதவிகள் இந்த ஆப்பில் இருக்கு. அதில் அனைத்து விதமான emergency helplines நம்பர்கள் கொடுத்திருப்பார்கள். அதாவது women helpline, senior citizen helpline, child helpline, cyber fraud related, maternity and child welfare, ambulance service போன்ற 60 விதமான அவசர உதவி எண்கள் இதில் உள்ளது. உங்களுக்கு உடனடியாக உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் இந்த ஆப்பை ஓபன் செய்து தேவையான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியும்.

பெண்கள் எங்கேயாவது தனியாக பயணம் செய்யும் போதும், அல்லது இரவில் தனியாக பயணம் செய்யும் போது நீங்க எந்த லொக்கேஷனில் பயணம் செய்றீங்க என்பதை உங்கள குடும்ப உறுப்பினர்கள் கண்காணிக்க முடியும். காவல் உதவி செயலியில் இந்த வசதிகள் உள்ளது. நீங்க உங்க குடும்ப உறுப்பினர்கள் நம்பரை இந்த காவல் உதவி ஆப்பில் பதிவு செய்து விட்டால் நீங்க எங்கே சென்றாலும் உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய இடத்தை டிராக் செய்ய முடியும்.

அதுமட்டுமின்றி இந்த காவல் உதவி ஆப்பில் இன்னொரு புகாரையும்(complaint) நீங்கள் பதிவு செய்யமுடியும். அதாவது பெண்கள் மீதான ஈவ்டீசிங், வரதட்சணை, பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை, பின்தொடர்தல் போன்ற பிரிவுகளில் அதிதீவிரமான குற்றங்களை (report high priority emergency assistance) வீடியோவாகவும் அல்லது மெசேஜாகவும் (30 MPக்கு உட்பட்டு) காவல் உதவி செயலியில் உடனடியாக நீங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல், வன்கொடுமை... பெண்களே! இதில் உங்கள் பங்கு என்ன?
Kaaval Uthavi app

அதற்கு report high priority emergency assistanceல் சென்று எந்த எமர்ஜென்சி என்பதை (select emergency sub type) பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக ஈவ்டீசிங் என்றால் அதை (select emergency sub type) தேர்வு செய்து என்ன மெசேஜ், எங்கு குற்றங்கள் நடக்கிறது என்பதை டைப் செய்ய வேண்டும், பின்னர் location, address போன்றவற்றை டைப் செய்த பின்னர் open galleryஐ கிளிக் செய்தால் நீங்கள் கொடுக்கக்கூடிய புகாருக்கு என்ன ஆதாரம் இருக்கோ, அதாவது, வீடியோ, புகைப்படம்(30 MPக்குள்) போன்ற ஆதாரங்களை Upload செய்து கொள்ள வேண்டும்.

நீங்க தான் புகார் செய்றீங்க என்பது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்தால் Remain anonymous என்பதை கிளிக் செய்த பின்னர் submit கொடுக்க வேண்டும். இதன் மூலம் உங்களுடைய புகார் ரிஜிஸ்டராகி விடும்.

அதுமட்டுமின்றி குழந்தை திருமணம், குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் கொடுமைகள், சாலை விபத்து, செயின் பறிப்பு போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த காவல் உதவி செயலியின் மூலமாக நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே புகார் செய்யலாம்.

அதுமட்டுமில்லாமல் இன்று மிகவும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது சைபர் குற்றங்கள். செல்போன், கம்ப்யூட்டரில் உங்களுடைய Code நம்பரை திருடி உங்கள் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் திருடிவிடுவார்கள். இது போன்ற பைசர் குற்றங்கள் நடந்தாலும் காவல் நிலையத்திற்கோ, சைபர் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்த செயலியில் உள்ள பட்டனை டச் செய்தாலே போதும். உடனடியாக 1930 என்ற நம்பருக்கு அதுவாகவே ஆட்டோமெட்டிக்காக அந்த செயலியே (நீங்கள் 1930 நம்பரை டயல் செய்ய வேண்டிய அவசியமில்லை) கூப்பிட்டு உங்களுடைய திருடப்பட்ட பணத்தை அங்கேயே நிறுத்தி வைத்து மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கிற்கே பணம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

நீங்க ஏதாவது தெரியாத ஊருக்கு போறீங்க. அங்க போனவுடன் உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் அல்லது ஆபத்து வருகிறது, ஆனால் அதை யாரிடம் சொல்வது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலைப்படவேண்டாம். இந்த செயலியில் 37 மாவட்டங்கள் 9 காவல் ஆணையரகங்கள் அதனுடைய கண்ட்ரோல் ரூம் இருக்கு. காவல் உதவி ஆப்பில் Police station locator என்று இருக்கும்.

அதில் எல்லா ஊரிலும் எவ்வளவு காவல் நிலையம் இருக்கும் என்பதை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டும். அந்த சிவப்பு நிறத்தில் நீங்கள் எந்த மாவட்டம் என்பதை தேர்வு செய்து கிளிக் செய்தால் அந்த போலீஸ் நிலையம் குறித்த தகவல்கள் வந்து விடும். உடனே காவல் துறையினர் உங்களுடைய உதவி வருவார்கள். அதேபோல் நீங்க இப்போது இருக்கும் இடத்தில் இருந்து எப்படி அந்த போலீஸ் நிலையத்திற்கு போவது என்பதற்கு கூகுள் மேப்பையும் தொடர்பு செய்து கொள்ளலாம்.

அதனால், இந்த காவல் உதவி ஆப்பை எல்லா பெண்களும் உங்களுடைய போனில் install பண்ணி வச்சிக்கோங்க. அப்படி வைத்துக்கொண்டால் பிரச்சனை வரும் போது உங்களால் போன் பண்ண முடியவில்லை என்றாலும். அந்த ஆப்பை தட்டினாலே போதும், SOS என்ன பண்ணும் என்றால் நீங்க எந்த லொக்கேஷனில் இருக்கீங்க என்பதை காட்டி கொடுத்து விடும்.

இதையும் படியுங்கள்:
கிராமப்புற பெண்கள் பாதுகாப்பு குறித்து சமூகம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Kaaval Uthavi app

இன்னைக்கு எல்லோரும் செல்போன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். எத்தனையோ ஆப் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும், இந்த காவல் உதவி செயலி என்பது போன் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்க வேண்டிய முக்கியமான ஒரு ஆப் என்று தமிழக காவல்துறையினர் சொல்லியிருக்காங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com