எஸ்பிஐ கார்டு முதல் எல்பிஜி விலை வரை… டிசம்பர் 1 முதல் பாக்கெட்டை காலி செய்யும் மாற்றங்கள்..!!

டிசம்பர் 1 முதல் எல்பிஜி சிலிண்டர் விலை, எஸ்பிஐ கார்டு கட்டணம், ஆதார் இ-மெயில் அப்டேட் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் குறித்த முழு விவரம்.
டிசம்பர் மாற்றங்கள்
டிசம்பர் மாற்றங்கள்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நாட்டில் பல்வேறு நிதி மற்றும் அன்றாட விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டின் கடைசி மாதமான வரும் டிசம்பர் 1-ம்தேதி (டிசம்பர் மாற்றங்கள்) முதல் சாமானிய மக்களின் பட்ஜெட் மற்றும் முதலீடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அதன்படி, இந்தியா முழுவதும் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...

எல்பிஜி சிலிண்டர் விலை:

அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றன. அதன்படி, டிசம்பர் மாதம் முதல் தேதியன்று எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் சமையல் எரிவாயுக்கான புதிய விலைகளை அறிவிக்கும். வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் மாற்றங்கள் இருக்கலாம்.

வணிக சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றம் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களைப் பாதிக்கும். அதே சமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்தாலோ அல்லது குறைந்தாலோ அது குடும்ப பட்ஜெட்டில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி மாற்றியமைக்கப்படுவதால் அவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு, விமான எரிபொருளுக்கான புதிய விலைகளும் அறிவிக்கப்படும்.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு கட்டணம்:

எஸ்பிஐ கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 1 முதல் சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் ஒரே பரிவர்த்தனையில் ரூ. 30,000-க்கு மேல் போக்குவரத்து (Transport)தொடர்பான கட்டணத்தைச் செலுத்தினால், பொருந்தக்கூடிய வரிகளுடன் 1% கட்டணம் விதிக்கப்படும். எரிபொருள் கொள்முதலைப் பொறுத்தவரை, ஒரு பில்லிங் சுழற்சியில் (Billing Cycle)மொத்தச் செலவு ரூ. 50,000-ஐ தாண்டினால், வரம்பை தாண்டிய தொகைக்கு மட்டுமல்லாமல், முழு எரிபொருள் செலவிற்கும் 1% கட்டணம் விதிக்கப்படும். உதாரணமாக ஒரு நபர் எரிபொருள் நிரப்ப ரூ.60,000 வரை செலவு செய்தால் இனிமேல் ரூ.600 கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும்.

ஆதார் அட்டையில் இலவசமாக இ-மெயில் அப்டேட் செய்யும் வசதி:

அதிகாரப்பூர்வ ஆதார் மொபைல் செயலி மூலம் மின்னஞ்சல் முகவரியைச் சேர்ப்பதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 75 கட்டணத்தை UIDAI தள்ளுபடி செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைத்தால் அபராதம் உண்டா? RBI விதி சொல்வது என்ன?
டிசம்பர் மாற்றங்கள்

டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் இந்தச் சலுகை, மொபைல் செயலி வழியாக மேற்கொள்ளப்படும் அப்டேட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அனைத்து ஆதார் திருத்தங்களுக்கும் பொருந்தாது. புதிய மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க அல்லது ஏற்கனவே உள்ள முகவரியை மாற்ற விரும்புவோர், காலக்கெடுவிற்குள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். டிசம்பர் 31-க்குப் பிறகு வழக்கமான கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

ஓய்வூதியதாரர்கள் லைஃப் சான்றிதழை சமர்ப்பிக்க நவம்பர் 30 கடைசி தேதி:

மத்திய அரசு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய பென்ஷன் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக லைஃப் சான்றிதழை (Life Certificate) நவம்பர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதை செய்யாத நபர்களுக்கு டிசம்பர் மாதத்தில் ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது டிசம்பர் 1-ம்தேதி முதல் வரும் புதிய விதி அல்ல. ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயம் தான். வருடத்திற்கு ஒருமுறை பென்ஷன் பெறுபவர்கள் இதை செய்ய வேண்டும்.

december 1 rules
december 1 rulesAI image

RBI நிதிக் கொள்கைக் குழு கூட்டம் & ரெப்போ வட்டி விகிதம்:

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் டிசம்பர் 2 முதல் 4-ம்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் ரெப்போ (Repo Rate) வட்டி விகிதம் குறித்து மறுஆய்வு செய்யப்படும். முன்னதாக அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக நிர்ணயித்த நிலையில், தற்போது இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் தான் ஹோம் லோன், கார் லோன் மற்றும் பர்சனல் லோன் வாங்கியவர்களுக்கு மாதாந்திர வட்டி குறைகிறதா? அல்லது கூடுகிறதா? என்பது தெரிய வரும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான டிஜிட்டல் KYCவசதி:

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), வெளிநாட்டு இந்தியக் குடிமக்கள் (OCI) மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய முதலீட்டாளர்கள் ஆகியோர் தங்களது கேஒய்சி (KYC) நடைமுறைகளை நிறைவு செய்ய இனி இந்தியா வர வேண்டிய அவசியமில்லை.

இதையும் படியுங்கள்:
ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு..! வரும் நவம்பர் 1 முதல் இனி இப்படி செஞ்சா தான் பணம் கிடைக்கும்..!
டிசம்பர் மாற்றங்கள்

செபியின் புதிய விதிகளின்படி, நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) தரநிலைகளுக்கு இணங்கும் நாடுகளில் வசிக்கும் தகுதியுள்ள முதலீட்டாளர்கள், தங்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் கேஒய்சி செயல்முறையை முடித்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி வருகின்ற டிசம்பர் 3-ம்தேதி முதல் கொண்டு வரப்படுகிறது.

செபியில் பதிவு செய்யப்பட்ட தரகர்கள் அல்லது நிதி நிறுவனங்களின் உதவியுடன் இதனைச் செய்வதன் மூலம், இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு இந்தியர்கள் முதலீடு செய்வது மிகவும் எளிதாகும்.

செபி (SEBI) கமாடிட்டி மார்ஜின் விதிகள்:

கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் (Commodity Derivatives) சந்தையில் வர்த்தகம் செய்பவர்களுக்காக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) டிசம்பர் 1 முதல் திருத்தப்பட்ட மார்ஜின் விதிகளைக் கொண்டு வருகிறது. விலை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து, வர்த்தகர்கள் 6%, 8% அல்லது 10% ஆரம்ப மார்ஜினைப் பராமரிக்க வேண்டும். இடர் பகுப்பாய்விற்கு (Risk Analysis) 2 முதல் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
இனி எங்கும் அலைய தேவையில்லை... குழந்தை பிறந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்..!
டிசம்பர் மாற்றங்கள்

இந்தத் திருத்தப்பட்ட தேவைகள் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத அனைத்து கமாடிட்டி வர்த்தகத்திற்கும் பொருந்தும்.