பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு பெற வேண்டுமா? இதை செய்தால் போதும்..!

PMAY என்பது அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு விரிவான திட்டமாகும்.
PMAY 2.0
PMAY 2.0
Published on

எல்லாருக்குமே சொந்த வீடு கட்டவேண்டும் என்ற ஆசை, கனவு இருக்கும். உங்களுடைய கனவை நினைவாக்கும் பொருட்டு மத்திய அரசு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்காங்க. 2015 முதல் முதல் செயல்பட்டுவரும் இந்த திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குகிறது. அந்த திட்டத்தின் நோக்கம், யாருமே வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்பது தான். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு (Pradhan Mantri Awas Yojana) விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்..

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) மூலம் வருமானத்தில் பின்தங்கிய மக்களுக்கு வீடு கட்ட உதவி செய்வதற்காக PMAY என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

இந்த திட்டத்தின் மூலமாக கிராமம் மற்றும் நகரத்தில் இருக்கக்கூடிய மக்கள் என இரண்டு தரப்பு மக்களுமே பயன் அடையும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. உங்களுக்கு வீடு இல்லை என்றால் முதலில் இந்த திட்டத்திற்கு முயற்சி செய்து பாருங்கள். ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் மானியத்தை வைத்து வீடு கட்டிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வறுமையின் பிடியில் இருந்து பிரதம மந்திரி நாற்காலி வரை!
PMAY 2.0

இத்திட்டம் 2025-ல் தொடர்ந்து செயல்படுகிறது, குறிப்பாக நகர்ப்புறப் பகுதிக்கு (PMAY-U) 2025 டிசம்பர் 31 வரை விண்ணப்பக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வீடு கட்ட மானியங்கள், வட்டி சலுகைகள் அளிக்கப்படுகின்றன, மேலும் 2028-29 வரை கிராமப்புறத் திட்டம் (PMAY-G) நீட்டிக்கப்பட்டு, 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நிறைய பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து விட்டு காத்துக்கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தால் அதன் மூலமே உங்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள முடியும்.

இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 92.61 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் ஒரு வீடு இல்லாத பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

தேவையான தகுதிகள் :

* இந்த திட்டத்தின் பலனை பெற விண்ணப்பிக்கும் நபருக்கு சொந்தமாக வீடு இருக்கக்கூடாது. உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரிலோ சொந்த வீடு இருக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
நோயாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம்..!
PMAY 2.0

* வீடு இல்லாதவர்கள், இருப்பதற்கே இடம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது.

* நீங்கள் எந்த ஒரு அரசு திட்டத்திலும் பயன் பெற்றிருக்கக்கூடாது.

* பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் (EWS)

பயன்கள்:

* வீடு கட்ட மானியம்.

* வீட்டுக் கடனுக்கான வட்டி சலுகை (நகர்ப்புற திட்டத்தில்).

யார் விண்ணப்பிக்கலாம்?

PMAY திட்டத்தில் விண்ணப்பிக்க, உங்கள் குடும்ப வருமானம் கீழ்கண்ட 4 வகைகளில் எதில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த (Economicaly weaker section (EWS) பிரிவின் கீழ் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்த வருமானக் குழு (lower income group (LIC)): இந்த பிரிவில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்க வேண்டும்.

நடுத்தர வருவாய் குழு (Middle Imcome Group(MIG-I)) : இந்த பிரிவின் கீழ் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருக்க வேண்டும்.

நடுத்தர வருமானக் குழு II (MIG II) – குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க முடியாதவர்கள் :

* சொந்த வீடு இருப்பவர்கள்

* இருசக்கர வாகனம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

* சொந்தமாக இயந்திரமயமாக்கப்பட்ட விவசாய உபகரணங்கள் (மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்கள்) வைத்திருப்பவர்கள்

* ரூ.50,000 முதல் அதற்கு மேல் வரம்பு வரை கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) வைத்திருப்பவர்கள்.

* அரசு வேலையில் இருப்பவர்கள்

* ஜிஎஸ்டி, வருமான வரி கட்டுபவர்கள்.

* உங்கள் வீட்டில் பிரிட்ஜ், லேண்ட்டு லைன் போன் இருப்பவர்கள்

* 2.5 ஏக்கர் பாசன வசதி கொண்ட நிலம் வைத்திருப்பவர்கள்

தேவையான ஆவணங்கள் :

நகர்புறத்திற்கு (PMAY- Urban) :

விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு

குடும்பத்தினரின் ஆதார் கார்டு

ஆதாருடன் லிக்கில் உள்ள வங்கி கணக்கு விவரம்

உங்களிடம் சொந்தமாக நிலம் இருந்தால் அந்த ஆவணங்கள்

வருமான வரி சான்றிதழ்

வருமான சான்றிதழ்

நில உரிமை ஆவணங்கள்(Property Documents)

கிராம புறத்திற்கு (PMAY- Gramin) :

விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு

குடும்பத்தினரின் ஆதார் கார்டு

வருமான வரி சான்றிதழ்

வங்கி கணக்கு விவரம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு அட்டை(MGNREGA job card)

உங்களிடம் சொந்தமாக நிலம் இருந்தால் அந்த ஆவணங்கள்(Property Documents)

இதையும் படியுங்கள்:
சிறு தொழிலுக்கு உதவும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)!
PMAY 2.0

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க PMAY வலைத்தளமான pmaymis.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com