

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் திருவிழா கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புடன் தொடங்கியது.
சுமார் ஒன்றரை மாதங்களாக நீடித்து வந்த இந்த ஜனநாயகத் திருவிழா, இன்று (29-ம்தேதி) மேற்கு வங்கத்தின் இறுதிக்கட்ட தேர்தலுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு பல மாநிலங்களில் மிக அதிக அளவிலான வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கிறது.
கடந்த மாதம் 9-ம்தேதி அசாம், கேளரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், தமிழகத்திற்கு கடந்த 23-ம்தேதியும், மேற்கு வங்கத்திற்கு 23, 29-ம்தேதி என இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நேற்று மாலை 6 மணியுடன் மேற்கு வங்க 2-ம் கட்ட தேர்தலும் முடிவடைந்த நிலையில் வெளியிடப்பட்டது.
தேர்தலுக்கு முன் எடுக்கப்படும் கணிப்புகளை காட்டிலும் தேர்தலுக்கு பின் எடுக்கப்படும் ‘எக்ஸிட் போல்’ அதிக துல்லியமாக இருக்கும் என்பதால் இதனை அறிந்து கொள்ள மக்களிடையே ஆர்வம் அதிகளவில் உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இதே உங்கள் பார்வைக்கு...
தமிழ்நாட்டில் திமுக தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என என்டிடிவி-ன் PEOPLE'S PULSE கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது..
தமிழ்நாடு :
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை எனும் நிலையில், Peoples Pulse நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 125 முதல் 145 வரையிலும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 வரையிலும், தவெக 18 முதல் 24 சதவீத வாக்குகள் வாங்கும் எனவும், நாதக 2 முதல் 6 தொகுதிகள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Axis My India நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 92-110 தொகுதிகளும், அதிமுக 22-23 தொகுதிகளும், தவெக 98-120 தொகுதியும், நாதகவுக்கு ஒரு தொகுதியும் இல்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
JVC நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 75-95 தொகுதிகளும், அதிமுக 128-147 தொகுதிகளும், தவெக 8-15 தொகுதியும், நாதகவுக்கு ஒரு தொகுதியும் இல்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Peoples Insight நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 120-140 தொகுதிகளும், அதிமுக 60-70 தொகுதிகளும், தவெக 30-40 தொகுதியும், நாதகவுக்கு 2-6 தொகுதிகள் வரையிலும் பெறும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
Peoples Pulse நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 125-145 தொகுதிகளும், அதிமுக 65-80 தொகுதிகளும், தவெக 18-24 தொகுதியும், நாதகவுக்கு2-6 தொகுதிகள் கிடைக்கும்.
சாணக்கியா நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணிக்கு 145 முதல் 160 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 50 முதல் 65 தொகுதிகளும், தவெகவுக்கு 13 முதல் 18 தொகுதிகளும், நாதகவுக்கு 5 முதல் 8 தொகுதிகளும் கிடைக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
அஃனி நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணி 169 தொகுதிகளும், அதிமுக 64 தொகுதிகளும், தவெக 1 தொகுதியும், நாதகவுக்கு ஒரு தொகுதியும் இல்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மேட்ரீக்ஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணி 122 முதல் 132 வரையிலும், அதிமுக கூட்டணி 87 முதல் 100 வரையிலும், தவெக 12 முதல் 16 வரையிலும், நாதக 1 முதல் 6 தொகுதிகள் வரையிலும் பெறும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
வோட் வைப் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி அதிமுக கூட்டணி 114 முதல் 124 வரையிலும், திமுக கூட்டணி 103 முதல் 113 வரையிலும், தவெக 4 முதல் 10 தொகுதிகள் வரையிலும், நாதகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
ரீபப்ளிக் டிவி-ன் P MARQ கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணி - 125 - 154 தொகுதிகள் வரையிலும், அதிமுக கூட்டணி - 65 - 85 தொகுதிகள் வரையிலும், தவெக - 16- 26 தொகுதிகள் வரையிலும், நாதகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Poll of Polls கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணி 125 முதல் 145 வரையிலும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 வரையிலும், தவெக 18 முதல் 24 வரையிலும், நாதக 2 முதல் 6 தொகுதிகள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கேரளா :
140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான LDF, காங்கிரஸ் தலைமையிலான UDF, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய மூன்று கூட்டணிகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.
இதில் Peoples Pulse நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 75 முதல் 85 இடங்களையும், சிபிஐ-எம் கூட்டணி 55 முதல் 65 இடங்களை பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா - காங்கிரஸ் கூட்டணி 78 முதல் 90 இடங்களையும், சிபிஐ-எம் கூட்டணி 49 முதல் 62 இடங்களையும், பாஜக 0-3 இடங்களையும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Peoples Insight - காங்கிரஸ் கூட்டணி 66 முதல் 76 இடங்களையும், சிபிஐ-எம் கூட்டணி 58 முதல் 68 இடங்களையும், பாஜக 0-3 இடங்களையும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Vote Vib - காங்கிரஸ் கூட்டணி 70 முதல் 80 இடங்களையும், சிபிஐ-எம் கூட்டணி 58 முதல் 68 இடங்களை பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Peoples Insight- காங்கிரஸ் கூட்டணி 66 முதல் 76 இடங்களையும், சிபிஐ-எம் கூட்டணி 58 முதல் 68 இடங்களையும், பாஜக கூட்டணி 10 முதல் 14 இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளது.
அசாம் :
126 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாமில் பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் இடையில் நேரடி போட்டி நிலவுகிறது.
இதில் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பின்படி, பாஜக கூட்டணி 88 முதல் 100 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 24 முதல் 36 இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
Janmat polls கருத்துக் கணிப்பின்படி, பாஜக கூட்டணி 87 முதல் 98 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 29 முதல் 30 இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
JVC கருத்துக் கணிப்பின்படி, பாஜக கூட்டணி 88 முதல் 101 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 23 முதல் 33 இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
Poll Diary கருத்துக் கணிப்பின்படி, பாஜக கூட்டணி 86 முதல் 101 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 15 முதல் 26 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
Matrize கருத்துக் கணிப்பின்படி, பாஜக கூட்டணி 85 முதல் 95 இடங்களையும், காங்கிரஸ் 25 முதல் 32 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
Peoples Insight கருத்துக் கணிப்பின்படி, பாஜக கூட்டணி 88 முதல் 96 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 34 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம் :
மேற்கு வங்கத்தில் பல்வேறு ஊடகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் பெரும்பாலான கணிப்புகள் பா.ஜ.க மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதையும், பா.ஜ.கவுக்குச் சாதகமான சூழல் இருப்பதையும் காட்டுகின்றன.
மேட்ரைஸ் நியூஸ் (Matrize News) கருத்துக் கணிப்பின்படி, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் எனத் தெரிகிறது. பா.ஜ.க 146 – 161 இடங்கள், திரிணாமுல் காங்கிரஸ் 130 – 140 இடங்கள்.
பி.எம்.ஏ.ஆர்.க்யூ (PMARQ) கருத்துக் கணிப்பின்படி, திரிணாமுல் காங்கிரஸ் 118 – 138 இடங்கள், காங்கிரஸ் 02 – 06 இடங்கள் என்றும், பா.ஜ.க 150 – 175 இடங்கள் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.
ஏ.பி.பி (ABP News) நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி, பா.ஜ.க 146 – 161 இடங்கள், திரிணாமுல் காங்கிரஸ் 125 – 140 இடங்கள், இதர கட்சிகள் 06 – 10 இடங்கள்
பிரஜா போல் கருத்துக் கணிப்பின்படி, பாஜக - 178 முதல் 208 இடங்கள், திரிணாமுல் - 85 முதல் 110 இடங்கள், மற்றவை - 0 முதல் 5 இடங்கள்.
NDTV கருத்துக் கணிப்பின்படி, பாஜக - 143 இடங்கள், திரிணாமுல் - 142 இடங்கள், காங்கிரஸ் - 1, மற்றவை - 7 இடங்கள்.
Times Now JVC கருத்துக் கணிப்பின்படி, பாஜக - 138 முதல் 159 இடங்கள், திரிணாமுல் - 131 முதல் 152 இடங்கள், காங்கிரஸ் 1 - 2, மற்றவை - 1 முதல் 2 இடங்கள்.
Today Chanayka கருத்துக் கணிப்பின்படி, பாஜக - 150 முதல் 160 இடங்கள், திரிணாமுல் - 130 முதல் 140 இடங்கள், மற்றவை - 6 முதல் 10 இடங்கள்.
Poll Diary கருத்துக் கணிப்பின்படி, பாஜக - 142 முதல் 171 இடங்கள், திரிணாமுல் - 99 முதல் 127 இடங்கள், மற்றவை - 5 முதல் 9 இடங்கள்.
பீப்பிள்ஸ் பல்ஸ் (People's Pulse) கருத்துக் கணிப்பின்படி, திரிணாமுல் காங்கிரஸ் 110 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், இது மற்ற கணிப்புகளை விடக் குறைவான மதிப்பீடாகும். பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் பா.ஜ.க 150 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 130 இடங்களுக்கு அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், இழுபறி நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
புதுச்சேரி :
ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பின்படி, என்.டி.ஏ.கூட்டணி 16-20 இடங்கள், இந்தியா கூட்டணி 6-8 இடங்கள், தவெக கூட்டணி 2-4 இடங்கள், மற்றவை 1-3 இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளது.
காமக்யா அனாலிட்டிக்ஸ் கருத்துக் கணிப்பின்படி, என்.டி.ஏ.கூட்டணி 17-24 இடங்கள், இந்தியா கூட்டணி 4-7 இடங்கள், தவெக கூட்டணி 1-4 இடங்கள், மற்றவை - 0-1 இடங்கள் கிடைக்கும்.
பிரஜா கருத்துக் கணிப்பின்படி, என்.டி.ஏ.கூட்டணி 19-25 இடங்கள், இந்தியா கூட்டணி 6-10 இடங்கள், தவெக கூட்டணி 0 இடங்கள், மற்றவை - 0 இடங்கள் கிடைக்கும்.
பீப்புள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பின்படி, என்.டி.ஏ.கூட்டணி 16-19 இடங்கள், இந்தியா கூட்டணி 10-12 இடங்கள், தவெக கூட்டணி 0 இடங்கள், மற்றவை 1-2 இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளது.
- நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில தேர்தல்களில் பா.ஜ.க. 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.