

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைதாரர்களின் பாதுகாப்பிற்காக இந்த மிக முக்கியமான வசதியை வழங்குகிறது. உங்கள் பயோமெட்ரிக் (கைரேகை மற்றும் கண் விழித்திரை) தரவை பூட்டுவதன் (Lock) மூலம், உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் ஆதார் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும். மேலும் இதன் மூலம், கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற உங்கள் தகவல்கள், அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைத் தடுக்கலாம்.
ஆதார் அட்டை என்பது இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். இந்தியாவில் அடையாளச் சான்றாகவும், முகவரிச் சான்றாகவும் பல்வேறு முக்கியப் பணிகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகிறது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கும், பான் கார்டுடன் (PAN Card) ஆதார் எண்ணை இணைப்பதற்கும் இது கட்டாயமாகும். கேஸ் சிலிண்டர் (LPG) மானியம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் பொருட்கள், தனியார் சேவைகள், ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை நேரடியாகப் பெற இது தேவைப்படுகிறது. நாடு முழுவதும் எங்கும் செல்லுபடியாகும் தனித்துவமான புகைப்படத்துடன் கூடிய அடையாள மற்றும் முகவரி ஆவணமாக இதனை பயன்படுத்தலாம்.
அதேசயமம், பல இடங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ஆதார் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பொதுமக்கள் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த வசதியை வழங்குகிறது. ஆதார் அட்டையில் உள்ள கைரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் முக அடையாளம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் பூட்டி வைப்பதன் (Lock) மூலம், உங்கள் அனுமதியின்றி யாரும் அடையாள சரிபார்ப்பு அல்லது நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.
உங்களின் ஆதார் பயோமெட்ரிக் (கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன்) விவரங்களை லாக் செய்ய UIDAI அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது mAadhaar செயலி (App) அல்லது எஸ்எம்எஸ் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். தேவைப்படும்போது நீங்களே தற்காலிகமாகப் பூட்டைத் திறந்து (Unlock), பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடித்த பிறகு அது தானாகவே மீண்டும் பூட்டிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
இதை எவ்வாறு செய்வது?
நீங்கள் மூன்று வழிகளில் உங்கள் ஆதாரைப் பூட்டலாம். இந்த மூன்று வழிகளில் உங்களுடைய ஆதாரை பூட்டுவதற்கு, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் (Registered Mobile Number) மிகவும் அவசியமாகும், ஏனெனில் இதற்கு OTP (One Time Password) அனுப்பப்படும்.
mAadhaar செயலி (Mobile App) மூலம் லாக் செய்யும் முறை:
ஆதார் பயோமெட்ரிக் தரவை MyAadhaar செயலியைப் (App) பயன்படுத்தி மிக எளிதாக 4 படிகளில் லாக் செய்துவிடலாம்:
படி 1: உங்கள் ஸ்மார்ட்போனில் Google Play Store அல்லது Apple App Store-லிருந்து mAadhaar செயலியைப் பதிவிறக்கம் செய்து திறந்து, உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் லாகின் (Login) செய்து உள்ளே நுழைவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள சேவைகளில் 'Lock/Unlock Biometrics' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: உங்கள் திரையில் தோன்றும் பாதுகாப்பு குறியீட்டை (Captcha) உள்ளிட்டு, 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை உள்ளிட்டு 'Verify' செய்தவுடன், உங்களது பயோமெட்ரிக் தரவு வெற்றிகரமாக லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் கைரேகை அல்லது விழித்திரையைப் பயன்படுத்த முடியாது.
UIDAI அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் லாக் செய்யும் முறை:
* முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ myAadhaar போர்ட்டலுக்குச் சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள "Lock/Unlock Aadhaar" அல்லது "Lock/Unlock Biometrics" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படித்துவிட்டு 'Next' என்பதைக் கிளிக் செய்து, உங்களுடைய 12 இலக்க ஆதார் எண் (அல்லது Virtual ID) மற்றும் திரையில் தோன்றும் CAPTCHA குறியீட்டை உள்ளிடவும்.
* பின்னர் "Send OTP" என்பதை அழுத்திய உடன் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு தற்காலிக கடவுச்சொல் (OTP) வரும்.
* அந்த OTP-ஐ உள்ளிட்டுச் சமர்ப்பித்த (Submit) பிறகு, பயோமெட்ரிக் லாக் அம்சத்தை "Enable" (செயல்படுத்து) செய்ய வேண்டும்.
எஸ்எம்எஸ் (SMS) வழியாக லாக் செய்தல்:
இதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து 1947 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் (SMS) அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ்சில் GETOTP என்று டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு, உங்கள் ஆதாரின் கடைசி 4 இலக்க எண்ணை உள்ளிடவும்.
அதேசமயம் உங்கள் மொபைல் எண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், கடைசி 8 இலக்கங்களைப் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் மொபைலுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டுச் சரிபார்த்தால், உங்கள் பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்படும்.
எதிர்காலத்தில் நீங்கள் ரேஷன் கடையிலோ அல்லது வங்கிப் பணி அல்லது சிம் கார்டு வாங்க பயோமெட்ரிக் தேவைப்பட்டால், இதே செயலியில் 'Unlock Biometrics' கொடுத்து தற்காலிகமாக (10 நிமிடங்களுக்கு) அன்லாக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு அது தானாகவே மீண்டும் லாக் ஆகிவிடும்.
ஆதார் கட்டாயம் இல்லாத இடங்களில் ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அட்டை போன்ற வேறு ஆவணங்களைப் பயன்படுத்துவது நல்லது. அதுவே ஆதார் தேவைப்படும்போது, மாஸ்க்டு ஆதார் (masked Aadhaar) அட்டையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.