ரயிலில் பாதுகாப்பாக உணவு ஆர்டர் செய்வது எப்படி? இந்த 14 தளங்கள் வேண்டாம்.! IRCTC எச்சரிக்கை.!

அங்கீகாரமற்ற செயலிகளால் பணம் பறிபோகும் அபாயம்; பாதுகாப்பாக உணவு ஆர்டர் செய்வது எப்படி?
Train Travel
Food OrderAI Image
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வது வழக்கம். திடீரென பயணத்தை திட்டமிடும் பயணிகளுக்கு, தட்கல் டிக்கெட் முறை உதவியாக இருக்கும். பொதுவாக ரயிலில் பயணம் செய்யும் போது, ரயில் நிற்கும் ரயில் நிலையங்களில் எல்லாம் வெளி உணவுகள் விற்பனை செய்யப்படும். இருப்பினும் தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் ரயில் பயணத்தின் போது கூட உணவுகளை ஆர்டர் செய்யும் வசதி வந்துவிட்டது. குறிப்பாக IRCTC இணையதளத்தின் வாயிலாக ரயில்வே துறை பயணிகளுக்கு உணவுகளை வழங்குகிறது.

இதுதவிர மேலும் சில இணையதளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாகவும் பயணிகள் உணவை ஆர்டர் செய்து உண்கின்றனர். இந்நிலையில் ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்ய அரசு அங்கீகாரம் பெறாத 14 இணையதளங்களைப் பயணிகள் பயன்படுத்த வேண்டாம் என IRCTC எச்சரிக்கை விடுத்துள்ளது.

IRCTC எச்சரிக்கையின் படி உணவு ஆர்டர் செய்யும் போது தவிர்க்க வேண்டிய 14 இணையதளங்கள்:

1. RAILRESTRO.COM

2. RAILRESTRO.IN

3. RAILMITRA.COM

4. RAILFOOD.NET

5. RAILMEAL.COM

6. DIBRAIL.COM

7. TRAVELKHANA.COM

8. TRAVELERFOOD.COM

9. TRAINWAY.IN

10. TRAINSCAFE.COM

11. TRAINMENU.COM

12. FOODONTRACK.IN

13. KHANAONLINE.IN

14. ECATERING.APP

அபாயங்கள்:

* FSSAI விதிகளைப் பின்பற்றாத மற்றும் உரிமம் பெறாத இடங்களில் இருந்து உணவுகள் வர வாய்ப்புள்ளது.

* உணவு ஆர்டரின் போது ரயில் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். இதனால் PNR எண், உங்கள் மொபைல் எண் மற்றும் கட்டண விவரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படவோ அல்லது மோசடி நடக்கவோ வாய்ப்புள்ளது.

* ஆர்டர் செய்த உணவு தாமதமானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ வாடிக்கையாளர் சேவை அல்லது உணவுக்காக செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் இல்லாமல் போகலாம்

.

indian railway food
indian railwayAI generated
இதையும் படியுங்கள்:
2 நிமிடமானது 2 மணி நேரப் பயணம்..! பாலம் செய்த மேஜிக் இது.!
Train Travel

உணவு ஆர்டர் செய்ய பயன்படுத்த வேண்டிய இணையதளம்:

ரயில் பயணத்தின் போது அரசு அங்கீகாரம் பெற்ற ஐஆர்சிடிசியின் ecatering.irctc.co.in என்ற இணையதளம் வாயிலாக உணவை ஆர்டர் செய்யலாம்.

இதுதவிரஜ ‘Food on Track’ என்ற மொபைல் செயலியையும் பயணிகள் பயன்படுத்தலாம்.

மொபைலில் இணைய வசதி இல்லாத பயணிகள் 1323 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உணவை ஆர்டர் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி ரயிலில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போட முடியாது..!!
Train Travel

புகார் அளிப்பது எப்படி?

அனைத்து ரயில் நிலைய வளாகங்கள் மற்றும் ரயில்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத உணவு விற்பனையாளர்கள் அல்லது சட்டவிரோத உணவு விநியோகத்தை நீங்கள் பார்த்தால், உடனே 182 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படைக்கு புகாரளிக்கலாம்.

IRCTC இ-கேட்டரிங்கில் என்னென்ன உணவுகள் ஆர்டர் செய்யலாம்?

IRCTC தளத்தில் பாரம்பரிய இந்திய உணவுகள், பிராந்திய உணவுகள் மற்றும் பீட்சா, பர்கர்கள் உள்ளிட்ட துரித உணவுகளும் கிடைக்கும்.

இதுதவிர பயணத்தின் போது பிறந்தநாள் மற்றும் ஆண்டு விழாக்களுக்காக கேக் மற்றும் பிற சிறப்பு பொருட்களையும் ஆர்டர் செய்து பெறலாம்.

பட்ஜெட் மற்றும் சுவைக்கு ஏற்ப பயணிகள் உணவுகளைத் தேர்வு செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ரயில் பயணத்தின் போது சரியான மற்றும் தரமான உணவு கிடைப்பது, அந்தப் பயணத்தையே நல்விதமாக மாற்றி விடும். ஆனால் சில இணையதளங்கள் ஆன்லைனில் தரமற்ற உணவுகளை வழங்கி வருகின்றன. மேலும் இவை அரசு அங்கீகாரம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இனி ரயில் பயணிகள் பயணத்தின் போது உணவை ஆர்டர் செய்வதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.