மழை வெள்ளத்தில் இருந்து ஒரிஜினல் சான்றிதழ்களை காப்பாற்ற சூப்பர் ட்ரிக்..!!

பருவமழை காலத்தில் ஆதார், கல்விச் சான்றிதழ்கள் நனையாமல் இருக்க டிஜிலாக்கர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அவற்றை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
DigiLocker
DigiLockerAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என்பதால், மழைக்காலங்களில் வீட்டுப் பத்திரங்கள், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் மழையில் நனைந்து சேதமடையாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். இத்தகைய சூழலில் பொதுமக்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, தேவைப்படும் இடங்களில் டிஜிலாக்கர் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக டிஜிட்டல் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதாவது டிஜிலாக்கர் (DigiLocker) என்பது இந்தியாவின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு கிளவுட் (Cloud) அடிப்படையிலான இணையதள மற்றும் செயலி (App) சேவையாகும்.

இது வங்கியில் வழங்கப்படும் லாக்கரை போலவேதான். அங்கு வங்கிக்கு நேரடியாக சென்று முக்கியமான பொருட்களை லாக்கரில் வைத்து பாதுகாப்போம். ஆனால் இந்த டிஜிட்டல் லாக்கரில் முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

உங்கள் முக்கியமான அரசு ஆவணங்களை பாதுகாப்பாக இணையத்தில் சேமித்து வைக்கவும், தேவைப்படும்போது எங்கும் பயன்படுத்தவும் இது உதவுகிறது. டிஜிலாக்கரில் இருக்கும் ஆவணங்கள் அசல் (Original) ஆவணங்களுக்கு இணையான சட்டப்பூர்வ தகுதியைக் கொண்டுள்ளன.

அரசு சார்ந்த சேவைகள் மட்டுமின்றி நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் அடையாளச் சரிபார்ப்புகளுக்கு முக்கியமான ஆவணங்களான, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பள்ளி மதிப்பெண்கள் சான்றுகள், இன்சூரன்ஸ் பாலிசி, ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ் ஆவணங்கள் என அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்க முடியும்.

அதுமட்டுமின்றி உங்கள் ஆவணங்களை காகித வடிவில் எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அதிகாரிகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ க்யூஆர் கோடு (QR Code) அல்லது பாதுகாப்பான இணைப்பு மூலம் நேரடியாக ஆன்லைனில் பகிரலாம்.

இது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதால், உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் ஆவணங்கள் 100% பாதுகாப்பாக இருக்கும். ஒவ்வொரு பயனருக்கும் 1 GB வரையிலான கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாக வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் வசதி மூலமாக ஆவணங்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும் நேரத்தில் டிஜி லாக்கரில் இருந்து எடுத்து பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். இயற்கை பேரிடர் சமயங்களில் முக்கிய ஆவணங்களை இழக்கும் போது இந்த டிஜி லாக்கரை வசதி கைக்கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி சான்றிதழ் வாங்க அலைய தேவையில்லை : அரசாணை வெளியீடு..!!
DigiLocker

டிஜிலாக்கரைப் பயன்படுத்தத் தொடங்குவது எப்படி?

டிஜிலாக்கரை ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப் என்ற இருமுறைகளில் பயன்படுத்த முடியும்.

ஆன்லைன் முறையில் கணக்கு தொடங்கும் வழிமுறைகள்:

அதிகாரப்பூர்வ DigiLocker தளம் அல்லது பிளே ஸ்டோர் / ஆப் ஸ்டோரிலிருந்து டிஜிலாக்கர் செயலியைத் திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள 'Sign Up' பொத்தானைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் அட்டையில் உள்ளபடி முழுப் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி (Email ID) மற்றும் உங்களுக்கு விருப்பமான 6 இலக்க பாதுகாப்பு பின் (Security PIN) என அதில் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு 'Submit' கொடுக்கவும்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டு சரிபார்க்கவும்.

அடுத்து பாதுகாப்பு பின்னை உருவாக்கி உங்கள் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும், ஒரு பயனர்பெயர் (Username) மற்றும் பாஸ்வேர்டை அமைத்து கணக்கை உறுதிப்படுத்தவும்.

டிஜிலாக்கர் சேவை
டிஜிலாக்கர் சேவைAI image

அதன் பிறகு தேவையான நேரத்தில் டிஜிட்டல் லாக்கரை பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்அப் மூலம் கணக்கு தொடங்கும் வழிமுறைகள்:

மேலும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ 'மை MyGov Helpdesk வாட்ஸ்அப் எண்ணான +919013151515 என்ற எண்ணைத் தொடர்பில் சேமித்து வைப்பதன் மூலம், வாட்ஸ்அப் செயலி வழியிலேயே அச்சான்றிதழ்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பருவமழை காலங்களில் இதன் தேவை முக்கியமானதாகிறது. மேலும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ 'மை MyGov Helpdesk வாட்ஸ்அப் எண்ணான +919013151515 என்ற எண்ணைத் தொடர்பில் சேமித்து வைப்பதன் மூலம், வாட்ஸ்அப் செயலி வழியிலேயே அச்சான்றிதழ்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இச்சேவையைப் பெற விரும்புவோர், 'மைMyGov Helpdesk' வாட்ஸ்அப் எண்ணிற்கு 'ஹாய்' (Hi) அல்லது 'வணக்கம்' எனச் செய்தி அனுப்பி உரையாடலைத் தொடங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்க போறீங்களா? அக்டோபர் 1 முதல் மாறும் கெடுபிடி விதி..!
DigiLocker

அதைத் தொடர்ந்து திரையில் தோன்றும் விருப்பங்களில் 'டிஜிலாக்கர் சேவைகள்' என்ற தேர்வைத் தேர்ந்தெடுத்து, தங்களது 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிய வேண்டும்.

பின்னர், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லைப் (OTP) பதிவு செய்து சரிபார்ப்பைச் செய்ய வேண்டும்.

சரிபார்ப்புச் செயல்முறை வெற்றிகரமாக முடிந்தவுடன், டிஜிலாக்கரில் கணக்கு வைத்துள்ள பயனர்களின் சான்றிதழ்களான ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் , காப்பீட்டுப் பத்திரங்கள் மற்றும் பள்ளி மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களின் பட்டியலும் சாட்பாட்டில் திரையிடப்படும்.

அதில் தேவையான சான்றிதழைத் தேர்ந்தெடுத்த சில வினாடிகளில், வாட்ஸ்அப் உரையாடலிலேயே பிடிஎஃப் கோப்பாக அப்பத்திரங்கள் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
இனி வங்கிக்கு அலைய வேண்டாம்! வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி?
DigiLocker

இதன் மூலம் இயற்கைச் சீற்றங்களின் போது அசல் சான்றிதழ்கள் சேதமடைவது முற்றிலும் தவிர்க்கப்படுவதோடு, அவசரத் தேவைகளுக்கும் ஆவணங்களை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

logo
Kalki Online
kalkionline.com