

வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக, மத்தியப் பிரதேச மாநிலம் வனவிலங்கு பாதுகாப்பில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும் வகையில், இந்தியாவில் முதன்முறையாக ‘சிவப்பு சாலை’ (Red Road) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சூட்சமம் வேலிகளோ வேகக் கண்காணிப்புக் கருவிகளோ அல்ல, மாறாக, ஓட்டுநர்கள் தாங்களே உணராதவாறு அவர்களை மெதுவாகச் செல்ல வைக்கும் ஒரு சாலை மேற்பரப்புதான்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால்–ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலை NH-45-இன் இரண்டு கிலோமீட்டர் நீளப் பகுதியில், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 5 மில்லிமீட்டர் தடிமனுடைய சிவப்பு நிற தெர்மோபிளாஸ்டிக் பூச்சு பூசப்பட்டுள்ளது. 2 கி.மீ நீளமுள்ள, பிரகாசமான மற்றும் சற்றே உயர்த்தப்பட்ட இந்தச் சாலை, முகத்தில் அடிப்பதை போன்ற சிவப்பு நிறம், விலங்குகள் செல்லும் வழித்தடங்களில் வாகன ஓட்டிகளை மெதுவாகச் செல்லுமாறு எச்சரித்து, வன விலங்குகள் மீது மோதுவதை தவிர்க்க, வனவிலங்குகள் மற்றும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்காக சாலை இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
2 கி.மீ நீளமுள்ள, பிரகாசமான மற்றும் சற்றே உயர்த்தப்பட்ட இந்தச் சாலை, விலங்குகள் செல்லும் வழித்தடங்களில் வாகன ஓட்டிகளை மெதுவாகச் செல்லுமாறு எச்சரித்து, மோதல்களைக் குறைத்து, வனவிலங்குகள் மற்றும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, வனப்பகுதிகள் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகள், தங்கள் வாழ்விடத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல சாலைகளைக் கடக்கும் விலங்குகளுக்கு பெரும்பாலும் ஆபத்தை விளைவிக்கின்றன. இந்தப் பகுதிகளில் அடிக்கடி அதிவேகமாகச் செல்லும் வாகனங்களில் அடிபட்டு அதிகளவிலான விலங்குகள் உயிரிழந்துள்ளன. இந்த அபாயத்தைக் குறைப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), புலிகள் காப்பகத்திற்குள் உள்ள அபாய மண்டலமாகக் குறிக்கப்பட்ட பகுதியில், சாலையின் மீது 5 மிமீ தடிமன் கொண்ட சிவப்பு நிற மேற்பரப்பை அமைத்துள்ளது.
இந்த பிரகாசமான சிவப்பு நிற அமைப்பு, வாகன ஓட்டிகள் வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதிக்குள் நுழைகிறார்கள் என்பதை உணர்த்தும். சிவப்பு நிறக் குறியீடுகளுடன், நெடுஞ்சாலையின் இருபுறமும் வெள்ளை நிற ஓரக்கோடுகள் வரையப்பட்டன. இந்தக் கோடுகள், வாகன ஓட்டிகளைச் செப்பனிடப்பட்ட சாலையிலேயே செல்ல வழிகாட்டி, செப்பனிடப்படாத அல்லது புல் நிறைந்த ஓரங்களில் அவர்கள் செல்வதைத் தடுத்து, பாதுகாப்பு நிலைமைகளை மேலும் மேம்படுத்துகிறது.
வனவிலங்குகளின் நடமாட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), 11.9 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடத்தில் சுமார் 25 சுரங்கப்பாதைகளையும் அமைத்துள்ளது. இவை, விலங்குகள் போக்குவரத்து மண்டலங்களுக்குள் நுழையாமல் பாதுகாப்பாகக் கடந்து செல்ல உதவுகின்றன.
இந்த சுரங்கப்பாதைகள், விலங்குகளின் நடமாட்ட முறைகளின் அடிப்படையில் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 8 அடி உயரம் கொண்ட இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு, விலங்குகளை சுரங்கப்பாதை நோக்கி வழிநடத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மொத்தம் 11.9 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.122.25 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீரங்கனா துர்காவதி புலிகள் காப்பகத்திற்குள் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்ட இந்த புதுமையான நடவடிக்கை, வாகனங்களின் வேகத்தை இயற்கையாகக் குறைத்து, விலங்குகள் அதிகம் காணப்படும் பகுதிகள் குறித்து ஓட்டுநர்களை எச்சரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல்களை குறைக்கும் இந்த முன்னோடியான திட்டம், இந்தியாவில் சுற்றுச்சூழல் நட்பு உள்கட்டமைப்பிற்கான புதிய திசையை உருவாக்கும் என நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.