மக்களே உஷார்..! அடுத்தடுத்து காத்திருக்கும் விபரீதம்! எல் நினோவால் தமிழகத்திற்கு பேராபத்து..!

சூப்பர் எல் நினோ காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் ஏற்படும் வறட்சி, அதீத மழை மற்றும் வெள்ள அபாயம் குறித்த முழு விவரங்கள்.
சூப்பர் எல் நினோ|பருவமழை பாதிப்பு
சூப்பர் எல் நினோ|பருவமழை பாதிப்புAI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் தீவிர வெப்பமயமாதலான 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) காலநிலை மாற்றம், தமிழ்நாட்டிற்கு ஒரே மாதிரியான தாக்கத்தை தராமல் மூன்று வெவ்வேறான கட்டங்களில் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன், 2026-27 ஆம் ஆண்டுகளில் நிலவக்கூடிய 'சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் தமிழ்நாட்டில் நீடித்த கோடை, தீவிர கனமழை மற்றும் கடுமையான வறட்சி என மூன்று முக்கிய பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளார். இந்தத் தாக்கங்கள் காரணமாக பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பதோடு, வடகிழக்கு பருவமழையின்போது வெள்ள அபாயமும், அதன்பிறகு நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்குச் செல்லும் சூழலும் உருவாகக்கூடும். வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 2026-27ஆம் ஆண்டுகள் கடுமையான எல் நினோ தாக்கம் கொண்ட காலகட்டமாக அமையக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இயல்பைவிட அதிகமான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஒருபுறம் மழைப்பொழிவு குறைவு, வறட்சிபோன்ற பாதிப்புகளும், மறுபுறம் குறிப்பிட்ட பகுதிகளில் அதீத மழை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் முதல் கட்டத்தில் வறட்சியை பார்த்து விட்டேம். இப்போது இரண்டாம் கட்டத்தில் அதீத மழையை பார்க்க போகிறோம். கடைசியாக மூன்றாவது கட்டத்தில் பெரும் வறட்சி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக வெதர்மேன் ஹேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் எல் நினோ ஏற்படுத்தும் அந்த 3 வித தாக்கங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

முதல் கட்டம்: கடுமையான வறட்சி மற்றும் வெயில் (முடிந்தது):

விளைவு: வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக் காலத்தில், எல் நினோ உலகளாவிய காற்று மற்றும் அழுத்த மண்டலங்களை மாற்றுவதால் இந்திய அளவில் மழைப்பொழிவு குறைந்தது.

தமிழ்நாட்டில் பாதிப்பு: கடந்த காலகட்டத்தில் நிலவிய 'சூப்பர் எல் நினோ' தாக்கத்தின் முதல் கட்டமாகத் தமிழகம் கடுமையான வறட்சி மற்றும் வழக்கத்திற்கு மாறான அதீத வெப்பத்தை எதிர்கொண்டது. பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்த எல் நினோ (El Niño) காரணியால், ஜூன் மாதத்தில் பருவமழை மிகக் கடுமையானப் பற்றாக்குறையைச் சந்தித்தது. இதனால் தமிழகத்தில் குறிப்பாக அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையான வறட்சி பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேட்டூர் அணை போன்ற முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைந்து, குறுவை சாகுபடி மற்றும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. தற்போது இந்த முதல் கட்ட வெப்ப அலைகளின் தாக்கம் தமிழகத்தை விட்டு முழுமையாக விலகியுள்ளது.

இரண்டாம் கட்டம்: அதீத மழை மற்றும் வெள்ள அபாயம் (தற்போதைய நிலை):

அக்டோபர் 15 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாம் இப்போது இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம்.

விளைவு: தென்மேற்கு பருவமழையை பொய்க்க வைக்கும் எல் நினோ, அக்டோபர் 20 முதல் டிசம்பர் 20 வரை உள்ள காலங்களில் வீசும் வடகிழக்கு பருவமழையை தலைகீழாக 'சூப்பர்சார்ஜ்' (Supercharge) செய்து அதீத மழையைத் தருகிறது. வங்கக்கடலுக்கும் அரபிக்கடலுக்கும் இடையே ஏற்படும் காற்றழுத்த வேறுபாடு ஒரு 'காற்று சுரங்கத்தை' (Wind tunnel) உருவாக்கி, ஈரப்பதம் மிக்க காற்றை தமிழக கடலோரப் பகுதிக்கு தள்ளுகிறது.

தமிழ்நாட்டில் பாதிப்பு: எல் நினோவின் இரண்டாம் கட்டத் தாக்கத்தினால் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, இந்த ஆண்டு இயல்பை விட மிக அதிகமான மழை பெய்யக்கூடும். குறுகிய காலத்தில் தீவிர மழைப்பொழிவு உண்டாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில், சென்னை உள்ளிட்ட வட கடலோட மாவட்டங்கள், நாகை, கடலூர், காவிரி டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் 50 செமீ வரைக்கும் மழை பதிவாக வாய்ப்புள்ளது.

Super El Nino 2026
Super El Nino 2026image credit-severe-weather.eu

அல்லது மிகக் குறுகிய காலத்தில் (சில மணி நேரங்களில் 15 முதல் 20 செ.மீ வரை) மேகவெடிப்பு போன்ற அதிதீவிர கனமழை பெய்து, 2015 மற்றும் 2023 போன்ற மிக மோசமான பெருவெள்ள அபாயத்தை உருவாக்குகிறது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமான புயல்கள், மேகவெடிப்பு போன்ற நிகழ்வுகள் மற்றும் வரலாறு காணாத மிரட்டலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பருவநிலை அறிவியலில் (Climate Science) இது 'கிளாசியஸ்-கிளாபிரான் சமன்பாடு' (Clausius-Clapeyron relation) என்று அழைக்கப்படுகிறது. இதன் படி, வளிமண்டலத்தின் வெப்பநிலை ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் உயரும் போதும், வளிமண்டலத்தில் கூடுதலாக 7% ஈரப்பதம் அதிகமாகும். ஆனால் 4 செல்சியல் அளவிற்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. அப்போது கிட்டதட்ட 287% ஈரப்பதம் அதிகரிக்கும். இந்திய பெருங்கடல் பகுதியிலும் 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அப்போது தோராயமாக பார்த்தால் 307% அளவிற்கு ஈரப்பதம் வளிமண்டலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது குறுகிய நேரத்தில் அதீத மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகை அச்சுறுத்தும் 'அதிதீவிர எல் நினோ': உலக வானிலை அமைப்பின் பகீர் எச்சரிக்கை..!!
சூப்பர் எல் நினோ|பருவமழை பாதிப்பு

குறிப்பாக நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை (North East Monsoon) தீவிரம் அடையும் பிரதான மழை மாதமாக அமையும். அடுத்தடுத்த நிகழ்வுகளால் அதீத மழைப்பொழிவுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மூன்றாவது கட்டம்: பெரும் வறட்சி (எதிர்காலக் கணிப்பு):

விளைவு: வடகிழக்கு பருவமழை காலம் முடிந்தவுடன், எல் நினோவின் தாக்கம் வளிமண்டல சுழற்சியை மாற்றி மேகங்கள் உருவாவதைத் தடுத்து, தெளிவான வானிலையை உருவாக்குகிறது. இதனால் சூரியனின் வெப்ப கதிர்வீச்சு நேரடியாக நிலத்தை தாக்குகிறது.

தமிழ்நாட்டில் பாதிப்பு: இதில் மூன்றாம் கட்ட தாக்கம் தான் தீவிரமாக இருக்கும். இந்த அதீத மழைக்காலம் மற்றும் எல் நினோ சுழற்சி முழுமையாக நிறைவடைந்த பிறகு, அதன் இறுதிப் பகுதியாகிய மூன்றாவது கட்டத்தில் தமிழகம் மீண்டும் மிகப் பெரிய வறட்சியை நோக்கிச் செல்லும் அபாயம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
2027-ல் உலகம் இன்னும் சூடாகுமா? எல் நினோ விடுக்கும் புதிய எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோ|பருவமழை பாதிப்பு

இதன் காரணமாக, அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெப்பநிலை வழக்கத்தை விட 3°C வரை அதிகரித்து, கடுமையான வெப்ப அலைகளை (Heatwaves) உருவாக்கும். நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்து சென்னை போன்ற பெருநகரங்களில் தீவிர குடிநீர் பற்றாக்குறையும், மின் தேவையும் உச்சத்தை தொடும்.

எனவே, இந்த இரண்டாம் கட்டத்தில் கிடைக்கப் போகும் அதீத மழைப்பொழிவைச் சரியாகத் திட்டமிட்டு, நீர்நிலைகளில் சேமித்து மேலாண்மை செய்வது மட்டுமே, மூன்றாவது கட்டத்தில் வரவிருக்கும் பெரும் வறட்சியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எல் நினோ மார்ச், ஏப்ரல் மாதங்களில் வலுவிழந்தாலும், அதன் வளிமண்டலத் தாக்கம் உடனே முடிவுக்கு வராது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடல் குளிர்ந்தாலும், நமக்கு அதற்கு அடுத்தடுத்து வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதன் எஞ்சிய தாக்கத்தால் கடுமையான வெப்ப அலைகளும் (Heatwaves), வழக்கத்தை விட அதிகமான வெப்பமும் நீடிக்கும்.

இதையும் படியுங்கள்:
எல் நினோ அலையின் உச்சக்கட்டம்… உங்களை காப்பாற்றிக்கொள்ள சூப்பர் ஐடியா!
சூப்பர் எல் நினோ|பருவமழை பாதிப்பு

இந்த பன்முகத் தாக்கங்களை எதிர்கொள்ள தமிழக அரசு, நீர்நிலைகளைத் தூர்வாருதல், வெள்ள மேலாண்மை மற்றும் கோடைக்கால வெப்பத் தடுப்பு நடவடிக்கைகள் என மூன்று கட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com