சொத்தை பிரிக்கவே இல்லை.! நீதிமன்ற படிகளில் ஏறி நின்ற குடும்பத்தினர்.உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

கணவர் இறந்த பிறகு அவரது சொத்தில் விதவை பெண்ணுக்கு உள்ள உரிமை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தரமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
விதவை சொத்து உரிமை
விதவை சொத்து உரிமைAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

பாகப்பிரிவினை (Partition) செய்யப்படவில்லை என்றாலும் கூட, கணவரின் சொத்தில் விதவை பெண்ணுக்கு உள்ள உரிமை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், அவருக்கு அந்த சொத்தில் முழுமையான உரிமை உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கணவர் இறந்த பிறகு அவரது சொத்தில் விதவை பெண்ணுக்கு உள்ள உரிமை தொடர்பான வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்திருந்த கர்நாடக உயர்நீதிமன்றம், உயிரிழந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழுமையான உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வி.என். பட்டி மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், ஜம்கண்டி தாலுகா, டெர்டால் கிராமத்தை சேர்ந்த கங்காராம் 1949-ல் உயில் ஏதும் எழுதாமல் காலமானார்; அவர் தனது முதல் மனைவி மூலம் பிறந்த மகன் கணபதி (அசல் வாதி; தற்போது இவரது சட்டப்பூர்வ வாரிசுகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்) மற்றும் இரண்டாவது மனைவி காஷிபாய் அவருக்கு இருமகள்கள் சகுந்தலா மற்றும் கமலவ்வா.

இந்து வாரிசுரிமை சட்டம், 1956 அமலுக்கு வருவதற்கு முன்பே காஷிபாய் கணவர் உயிரிழந்ததால், அப்போது நடைமுறையில் இருந்த இந்து பெண்களின் சொத்துரிமை சட்டம் 1937ன் கீழ், கணவரின் சொத்தில் விதவைக்கு வரையறுக்கப்பட்ட உரிமை மட்டுமே வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த சொத்தில் பாகப்பிரிவினை கோரும் உரிமையும் அவருக்கு இருந்தது.

இந்த வழக்கை முதலில் விசாரித்த ஜாம்கண்டி நீதிமன்றமும், முதல் மேல்முறையீட்டு நீதிமன்றமும், காஷிபாய் தனது கணவரின் சொத்தில் பாகப்பிரிவினை கோரி தனியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை காரணம் கூறி காஷிபாயின் உரிமை கோரிக்கையை நிராகரித்தன. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த இரு நீதிமன்றங்களின் முடிவையும் மாற்றி, மனைவிக்கு முழுமையான உரிமை இருப்பதாகத் தீர்ப்பளித்தது.

உயிரிழந்த கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனின் (கணபதி) சட்ட வாரிசுகள், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

ஒரு சொத்தில் முறையான பாகப்பிரிவினை நடைபெறாதது மட்டுமே அந்த சொத்தின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் பெண்ணின் உரிமையை மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. பிரிக்கப்படாத சொத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பங்கு காலப்போக்கில் மாறுபடலாம் என்றாலும் விதவைக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட உரிமையை மறுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

இந்து வாரிசுரிமை சட்டம், 1956-ன் பிரிவு 14(1)-ன் படி, பெண்ணுக்குக் கிடைத்த வரையறுக்கப்பட்ட சொத்துரிமை காலப்போக்கில் முழுமையான உரிமையாக (Absolute Ownership) மாறுகிறது. இதற்கு முறையான பாகப்பிரிவினை நடந்திருக்க வேண்டும் என்பது அவசியமான முன்நிபந்தனை இல்லை.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் (Hindu Succession Act) படி, ஒரு திருமணமான ஆண் சொத்து பிரிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டால், கூட்டுக்குடும்பச் சொத்தில் அவருக்கு என்ன பங்கு கிடைக்க வேண்டுமோ, அந்தப் பங்கு அப்படியே அவருடைய வாரிசான விதவை மனைவிக்குச் சென்றடையும்.

குடும்பத்தில் உள்ள மற்ற வாரிசுகள் பாகப்பிரிவினை கோரவில்லை அல்லது சொத்து பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது அல்லது விதவைப் பெண் பாகப்பிரிவினை கோரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக விதவையின் சட்டப்பூர்வ பங்கினை ( சொத்துரிமை) எக்காரணம் கொண்டும் மறுக்கவோ அல்லது பறிக்கவோ முடியாது.

சொத்து பிரிக்கப்படாமல் கூட்டு உடைமையாக இருந்தாலும், கணவரின் மறைவுக்குப் பின் அவரது சட்டபூர்வமான வாரிசு என்ற அடிப்படையில் மனைவிக்கு அந்தச் சொத்தில் உரிமை கோர முழு அதிகாரம் உண்டு. மற்ற குடும்ப உறுப்பினர்கள் "சொத்து இன்னும் பிரிக்கப்படவில்லை" என்று கூறி பெண்ணின் உரிமையை தட்டிப்பறிக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
திடீர் திருப்பம்! விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்!
விதவை சொத்து உரிமை

பாகப்பிரிவினை (Partition) செய்யப்படவில்லை என்றாலும் கூட, இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் பிரிவு 14(1)-ன்படி, கணவரின் சொத்தில் விதவை பெண்ணுக்கு உள்ள வரையறுக்கப்பட்ட உரிமை (Limited Interest) தானாகவே முழுமையான உரிமையாக (Absolute Ownership) மாறும்.

குடும்பச் சொத்து முறையாகப் பிரிக்கப்படவில்லை (Undivided property) அல்லது பாகப்பிரிவினை செய்யப்படவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரின் விதவை மனைவிக்கு கிடைக்க வேண்டிய சொத்து உரிமையை அல்லது பங்கினை மறுக்க முடியாது.

எனவே, 1937-ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 3(2)-ன் கீழ் காஷிபாய் உரிமையை அனுபவித்ததாகக் கூற முடியாது என்ற மேல்முறையீட்டாளரின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு நபர் இறக்கும்போது அவரது சொத்தைப் பெறுவதற்கான உரிமையைச் சட்டம் உறுதிப்படுத்துவது என்பது, 'கூட்டுரிமைத் தொடர்ச்சி' (survivorship) அல்லது 'வாரிசுரிமை' (inheritance) ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட, சொத்து கைமாறும் ஒரு செல்லுபடியாகும் முறையாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையும் படியுங்கள்:
5 ஆண்டுகளுக்கு மேல் வாடகைக்கு இருப்போருக்கு அந்த வீடு சொந்தமாகுமா..? உச்சநீதிமன்றம் சொல்வதென்ன..?
விதவை சொத்து உரிமை

பிரிக்கப்படாத குடும்பச் சொத்தில் பங்குகள் மாறலாம், ஆனால் விதவை பெண்ணின் அடிப்படை உரிமை எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்படாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com