ரேஷன் கார்டில் இந்த தவறுகள் இருக்கா? நாளை ஒரே நாளில் சரிசெய்ய சூப்பர் வாய்ப்பு..!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் அக்டோபர் 10-ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் திருத்தம்
குடும்ப அட்டையில் திருத்தம்
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

பொது விநியோகத் திட்டத்தின் நன்மைகளை பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் மாதாந்திர குறைதீர் சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் (ரேஷன் கார்டு) உள்ள பல்வேறு திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான (அக்டோபர்) குறைதீர் சிறப்பு முகாம் எப்போது நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 28 லட்சத்து 12,942 குடும்ப அட்டைதாரர்களும், 35,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி ஏழை எளிய மக்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் கூட்டுறவுத் துறையின் நியாயவிலைக்கடைகள் வாயிலாக இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவச மற்றும் மானிய விலையிலான அரிசி, பாமாயில், பருப்பு வகைகள் மட்டுமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடர் நிவாரண உதவிகள் மற்றும் அரசு வழங்கும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு தான் பிரதான சான்றாக விளங்குகிறது.

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை நடைமுறைப்படுத்தியுள்ள ஒரே நாடுரேஷன் அட்டை (ONORC) திட்டத்தின் மூலம், தமிழகம் உள்பட இந்தியாவின் எந்தப் பகுதியிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகளில் (ரேஷன் கார்டு) திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை சனிக்கிழமை (அக்டோபர் 10-ம்தேதி) நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறைதீர் சிறப்பு முகாம் விவரங்கள்:

தேதி: அக்டோபர் 10-ம்தேதி (நாளை)

நேரம்: காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை

இடம்: சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாட்சியர் (Taluk) அலுவலகங்களிலும் இந்த முகாம் நடைபெறும்.

முகாமில் மேற்கொள்ளப்படும் சேவைகள்:

பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டைகளில் பின்வரும் மாற்றங்களை இந்த முகாம் மூலம் நேரடியாகச் செய்துகொள்ளலாம்:

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்த்தல்

இறந்தவர்கள் அல்லது திருமணமானவர்களின் பெயர்களை நீக்குதல்

குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்தல்

தொடர்ந்து பொருட்கள் வாங்காமல் விடுபட்ட கார்டுகளுக்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்

இதையும் படியுங்கள்:
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க....நாளை தமிழகம் முழுவதும்...
குடும்ப அட்டையில் திருத்தம்

மொபைல் எண் மாற்றம் அல்லது திருத்தம் செய்தல்

மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல்

ரேஷன் கடை குறைதீர் புகார்கள் மீது நடவடிக்கை

இந்த முகாமிற்கு நீங்கள் செல்லும்போது பணிகளை விரைவாக முடிக்க கீழ்க்கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்:

அசல் குடும்ப அட்டை (Original Ration Card)

ஆதார் கார்டு (Aadhaar Card)

பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)

திருமணப் பத்திரிகை / சான்றிதழ் (Marriage Invitation/Certificate)

இறப்புச் சான்றிதழ் (Death Certificate)

முகவரி சான்று (Address Proof)

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்

சென்னையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டு
ரேஷன் கார்டு

அதன்படி, 2026 அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை அக்டோபர் 10-ம்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளுக்கு நேரில் வர முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பதிலாக, வேறொருவர் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்கள் குடும்ப அட்டையில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, அதனுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் OTP (ஒற்றை முறை கடவுச்சொல்) மூலம் சேவைகள் உறுதிப்படுத்தப்படும் என்பதால், அந்த கைபேசியை உடன் எடுத்துச் செல்வது அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் பயனாளர்களுக்கு ஜாக்பாட்.! கைரேகை வேண்டாம்..! இனி முகத்தை காட்டினாலே போதும்.!
குடும்ப அட்டையில் திருத்தம்

தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாகப் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகளைச் சரிபார்க்கும் பணிகள் அக்டோபர் 1 முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், விடுபட்டவர்கள் தங்களின் e-KYC (பயோமெட்ரிக் சரிபார்ப்பு) விபரங்களையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சரிசெய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு மற்றும் ஆன்லைன் சேவைகளுக்குத் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ TNPDS இணையதளத்தை அணுகலாம். தகுதியுள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நெல் கொள்முதல் முதல் ரேஷன் கடை வரை: அனைத்து புகார்களுக்கும் உதவி எண்கள் அறிவிப்பு!
குடும்ப அட்டையில் திருத்தம்

கூடுதல் தகவல்:

அதே நாளில் (அக்டோபர் 10) தகுதியுள்ள புதிய நபர்களைச் சேர்க்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான இந்தச் சேவைகளை அருகில் உள்ள முகாம்களுக்குச் சென்று தகுந்த ஆவணங்களுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com