உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா..? ஆன்லைனில் செக் செய்வது & சேர்ப்பது எப்படி..?

புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோருக்கான கடைசி தேதி அறிவிப்புடன் கூடிய முழு வழிகாட்டி.
New Voters|வாக்காளர் பட்டியல்
voter list|வாக்காளர் பட்டியல்
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் இரண்டு மாதங்களாக நடந்தது. இந்த பணிகள் முடிந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் 5.77 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் மொத்தமாக 5,77,46,618 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2,82,03,992 ஆண் வாக்காளர்களும், 2,95,34,734 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 7,892 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

SIR பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,73,43,291 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4-ம்தேதி (2027) வெளியிடப்பட உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? :

வரைவு வாக்காளர் பட்டியல்கள் https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த இணையதள பக்கத்திற்கு சென்று Electoral Roll Service என்பதை தேர்வு செய்யவும்.

Search Your Name In Electoral Roll என்பதை தேர்வு செய்யவும்.

அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை மூன்று வழிகளில் சரிபார்க்கலாம்..

எண் மூலம் (Search by EPIC), தனிப்பட்ட விவரங்கள் மூலம் (Search by Details), மொபைல் எண் மூலம் (Search by Mobile).

இதில் ஏதேனும் ஒரு வழியில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தேடலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 3 நாட்கள் சிறப்பு முகாம் மற்றும் என்னென்ன படிவங்கள் :

அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பாக அளிக்கப்பட்டுள்ள 12.11.2026 முதல் 11.12.2026 வரை உள்ள காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ அல்லது வாக்களார் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் ஆகியவற்றுக்கான படிவங்கள் 6, 6ஏ, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

யாருக்கு என்ன படிவங்கள் :

படிவம் 6 : புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவம்.

படிவம் 6ஏ : வெளிநாடு வாழ் வாக்காளர் ஒருவர் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பம்.

இதையும் படியுங்கள்:
SIR: இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும்..? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!
New Voters|வாக்காளர் பட்டியல்

படிவம் 7 : பெயரை நீக்க கோர விண்ணப்பிக்கலாம். ஒருவரது பெயரை சேர்க்க ஆட்சேபனை தெரிவிப்பதற்கான வாக்காளர் விண்ணப்ப படிவம் மற்றும் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோருவதற்கான விண்ணப்பம்.

படிவம் 8 : பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே மாற்றினாலோ, நடப்பு வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கான மாற்று வாக்காளர் அட்டை பெறுவதற்கான மாற்று திறனாளிகளை குறிப்பதற்கான விண்ணப்ப படிவம்.

சென்னையில் சிறப்பு முகாம் எப்போது :

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் வருகிற 21, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது. அங்கும் வாக்காளர்கள் விண்ணப்பங்களை வழங்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றுக்கான படிவங்கள் கிடைக்கும். அதனை வாங்கி பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

Election commission
Election commission

இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத தகுதியுடைய வாக்காளர்கள் 1.1.2027 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது நிறைவடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 4.1.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

பெயர் சேர்ப்புக்கான ஆவணங்கள் :

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரி சான்றாக 7 ஆவணங்களில் ஒன்றின் நகரை அளிக்கலாம். அதன்படி,

முகவரிக்கான நீர் அல்லது மின்சாரம் அல்லது கேஸ் இணைப்பு ரசீது (குறைந்தது 1 ஆண்டுக்கானது)

ஆதார் அட்டை

தேசியமயமாக்கப்பட்ட அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம்.

இந்திய பாஸ்போர்ட்

விவசாயி புத்தகம் உள்பட வருவாய் துறைகளின் நில உரிமை பதிவுகள்

பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம் (குத்தகை தாரராக இருந்தால்)

பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் (சொந்த வீட்டி வசிப்பவர் என்றால்)

இதையும் படியுங்கள்:
#BREAKING : மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.!
New Voters|வாக்காளர் பட்டியல்

வயதுக்கு 6 சான்றிதழ்கள் :

வயது சான்றாக சுய சான்றொப்பமிட்ட 6 ஆவணங்களில் ஒன்றின் நகலை அளிக்கலாம்.. அதன்படி,

தகுதி வாய்ந்த உள்ளாட்சி அமைப்பு அல்லது நகராட்சி அதிகாரி அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் வழங்கிய பிறப்பு சான்றிதழ்

ஆதார் அட்டை

பான் கார்டு

டிரைவிங் லைசென்ஸ்

சிபிஎஸ்இ அல்லது ஐசிஎஸ்இ அல்லது மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் (அதில் பிறந்த தேதி இருந்தால்)

இந்திய பாஸ்போர்ட்

https://voterportal.gov.in மற்றும் ‘ECINET’ கைபேசி செயலி மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பதிவு அலுவர் (ERO) அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க கடைசி நாள் : டிசம்பர் 11.

விண்ணப்பங்கள் மீதான முடிவு : டிசம்பர் 28

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : ஜனவரி 4, 2027.

இதையும் படியுங்கள்:
#JUST IN: தேர்தலுக்கு முன்பாக வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.!
New Voters|வாக்காளர் பட்டியல்

அடுத்த ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.