சடங்கல்ல அறிவியல்: தமிழ் மாதப் பிறப்புகளின் பின்னே இருக்கும் வானியல் ரகசியம்!

ancient-scientific-wisdom
ancient-scientific-wisdom
Updated on

ம் முன்னோர்கள் தன்னிகரற்ற அறிவாளிகள், மகத்தானவர்கள் என்பது பலமுறை வெள்ளிடை மலை போல நமக்கு நிரூபணம் ஆன உண்மை. இதற்கு மற்றும் ஒரு உதாரணம், சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள்தான் சித்திரை முதல் நாள். அதன் காரணமாகத்தான் நம் பண்டைய தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர் என்பது ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது.

அதற்கு மற்றும் ஒரு உதாரணம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகர்கள் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் பற்றி நமக்கு தெரியவேண்டிய உண்மைகள்.

சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை முதல் நாட்களை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுவது சடங்கு அல்லது பழக்கம் என்று நினைச்சுக்கிட்டு இருக்கோம். இதுக்கு பின்னால் நம் முன்னோர்கள் மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சியை அப்போதே கணித்து வச்சிருக்காங்கனு உங்களில் எத்தனை பேர்களுக்கு தெரியும்?

கிழக்கே உதிக்கும் சூரியன் என்பது நம் எல்லோருக்கும் பொதுவாக தெரியும். அதற்கென்று ஒரு அளவு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும். அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்.

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு-ன்னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற காலம்தான் சரியாக ஒரு வருடம் ஆகும். சரி, இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம் வந்தது பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள்தான் சித்திரை முதல் நாள். அன்றுதான் நமக்கு தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

இதையும் படியுங்கள்:
இடைத்தரகர் இல்லாத டிஜிட்டல் புரட்சி! பிளாக்செயின் தொழில்நுட்பம் என்றால் என்ன?
ancient-scientific-wisdom

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளிதான் ஆடி முதல் நாள் அன்றுதான் ஆடி பிறப்பு. (solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது ஐப்பசி முதல் நாள். (equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு வரும்போது தை முதல் நாள். அன்றுதான் தைப்பொங்கல் திருநாள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில்தான் திருவிழாக்களாக கொண்டாடி வந்தனர்.

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு (vernal equinox) ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு (summer solstice) ஐப்பசிஅமாவாசை தீபாவளி (autumn equinox) தை முதல் நாள் பொங்கல் திருநாள் (winter solstice).

இந்த அறிவியல் நிகழ்வை அன்றே கணித்து சொன்ன நமது முன்னோர்கள் தன்னிகரற்ற மாபெரும் அறிவாளிகள் மிகவும் மகத்தானவர்கள் என்பதை அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.

logo
Kalki Online
kalkionline.com