பூமி சுழல்வது உண்மையா? உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் நிழல் கொண்டே கண்டறியலாம்!

சத்தமே இல்லாமல் சுழலும் பூமியின் நகர்வை உங்கள் வெறும் கண்களால் அறிந்துகொள்ள 4 எளிய வழிகள்.
பூமி சுழற்சி - Earth rotation proof
பூமி சுழற்சி - Earth rotation proofImage credit: Gemini
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on

சிறுவயதில் அனைவரும் படித்திருப்போம், பூமியுடன் சேர்ந்து 7 கிரகங்கள் சூரியனை சுற்றி வருகிறது. அப்படி பூமி சூழல்வதால்தான் பருவகால மாற்றங்களில் தொடங்கி; இரவு, பகல் மாற்றங்கள் நடக்கிறது என்று புரிந்து வைத்திருப்போம். ஆனால் என்னதான் புத்தகத்தில் இதை படித்திருந்தாலும், அனைவரும் இந்த ‘சுழற்சியை’ உடல் ரீதியாக உணர்ந்திருக்க மாட்டார்கள். சரி அப்போ நாம் எப்படி பூமி சுழற்சி உணரலாம்? தெரிந்து கொள்வோம்.

சாதாரண மக்கள் பூமியின் சுழற்சியை எப்படி உணரமுடியும்?

பூமி ‘பூமத்திய ரேகை (Equator) பகுதியில்’ மணிக்கு ஏறக்குறைய 1,670 கி.மீ வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள நிலம், காற்று மற்றும் பெருங்கடல்கள் அனைத்தும் ‘இந்த வேகத்துடன் ஒரே சீராக நகர்வதால்’, இந்தச் சுழற்சியை நம்மால் நேரடியாக உணர முடிவதில்லை.

பெரும்பாலான மக்கள் பகலையும், இரவையும் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அதில் சில மக்கள் அந்த வெளிச்சத்தை ‘பூமி ஓய்வில்லாமல் சுழன்று கொண்டிருப்பதால் நடக்கிறது’ என்ற ஒரு அர்த்தத்தை மிகவும் அரிதாகவே தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள்.

இந்த சுழற்சியை உணர எந்த ஒரு நபருக்கும் மேம்பட்ட உபகரணங்கள் தேவையில்லை, அதை உணர சில எளிய நம்பகமான வழிகள் உள்ளன. இந்த முறைகள் நூற்றாண்டு பழமையான சோதனைகளுடன், இப்போதுள்ள நவீன காலத்துடன் கலந்து நமக்கு புரியவைக்கின்றன.

இவற்றையெல்லாம் விஞ்ஞானிகளும் சந்தேகத்திற்கு இடமின்றி தேவைப்படும்போது ‘பூமியின் சுழற்சியை நிரூபிக்கப்’ பயன்படுத்துகின்றனர். அதில் மிகத்தெளிவான எடுத்துகாட்டிகளில் ஒன்று போட்டுகால்ட் ஊசல் (Foucault pendulum) ஆகும். மிக நீளமான கம்பியில் தொங்கவிடப்பட்ட ஒரு கனமான பொருளை (ஊசல் குண்டு போன்றது), சாதாரணமாக ‘முன்னும், பின்னும்’ ஊசலாடி ‘ஒரு வடிவத்தை’ வரைந்து கொண்டிருக்கும்.

பூமி சுழற்சி - Earth rotation proof
பூமி சுழற்சி - Earth rotation proof

இந்த பொருள் இருக்கும் கட்டடமும், அதன் தளமும் தரையில் பூமியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அவை பூமியுடன் சேர்ந்தே சுழன்று கொண்டே இருக்கும். ஆக, ஊசலாடும் குண்டு அதன் கீழ் தளம் நகர்வதால், அதன் ‘வரையும் வடிவம்’ திசை மாறிக்கொண்டே இருக்கும்.

இதை பார்வையாளர்கள் ‘ஊசலின் திசை மாறுவதாக’ நினைக்கலாம்’, ஆனால் அது திசை மாறவில்லை; நம் நிலப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக சுழல்கிறது என்பதை நேரடியாக இது காட்சி படுத்துகிறது.

மற்றொரு எளிய வழி, வானில் உள்ள 'நட்சத்திரங்களை' (star-trail) புகைப்படம் எடுப்பது மூலம்; நம் பூமியின் நகர்வுகளை கணிக்கலாம். நீங்கள் இரவில் வானத்தை நோக்கி நீண்ட நேரம் அல்லது ஒரு 15–30 நிமிடங்களுக்கு ‘கேமராவை ஆன் செய்து வீடியோ பதிவு எடுத்துக் கொள்ளுங்கள். கேமரா எடுத்த படத்தில்போல நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் சில நேரங்களுக்கு பிறகு நிலையாக இருக்காது; மாறாக, அவை திசை மாறி இருக்கும். இதனால் நட்சத்திரங்கள் நகர்கிறது என்பது அர்த்தம் அல்ல, பூமி சுழல்வதாலேயே இது நிகழ்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் . ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் எளிய செயலிகளைப் (apps) பயன்படுத்தி கூட, மக்கள் இந்தப் படங்களை எடுக்க முடியும்.

'கோரியோலிஸ் விளைவு' (Coriolis effect) மூலமாகவும் பூமியின் சுழற்சியை நாம் அறியலாம். இந்தியாவில் சூறாவளிகள் ஏன் ‘கடிகார முள் சுழலும் திசைக்கு’ எதிர் திசையில் (anticlockwise) சுழல்கின்றன என்பதற்கு இதுவே காரணமாகும்.

இதையும் படியுங்கள்:
நேபாள பேரழிவு: அதிநவீன செயற்கைக்கோள்களால் பனிச்சரிவை ஏன் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை?
பூமி சுழற்சி - Earth rotation proof

இப்படி வானிலை வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள் இந்தச் சுழல் வடிவத்தை தெளிவாக காட்டுகின்றன. காற்று, கடல் நீரோட்டங்களில் ஏற்படும் இந்தத் திருப்பத்திற்கு பூமியின் சுழற்சியே காரணமாக அமைகிறது.

நாம் நிழல்களைப் பயன்படுத்தி மிக எளிமையான ஒரு சோதனையையும் மேற்கொள்ளலாம். தரையில் ஒரு குச்சியை நேராக நட்டு வைத்து, ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் அதன் நிழலின் நுனியை ஒரு குறியீடு வைப்பதன் மூலம் குறித்து வாருங்கள். நிழல் சீராக நகர்வதை நீங்கள் காண்பீர்கள். இந்த நகர்வு சூரியன் நம்மைச் சுற்றி வருவதால் ஏற்படுவதல்ல; அது பூமி சுழல்வதால் உண்டாவது. வெவ்வேறு பருவக்காலங்களில் இச்சோதனையைத் தொடர்ந்து செய்தால், சூரியனைச் சுற்றி பூமி வலம் வருவதால் சூரியனின் பாதையில் ஏற்படும் மாற்றங்களையும் நீங்கள் கவனிக்க முடியும்.

சிறந்த சிந்தனையாளர்களின் வார்த்தைகள்:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(Albert Einstein) ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்: ‘இயற்கையை உற்று பாருங்கள்; அப்போதுதான் எல்லாவற்றையும் நீங்கள் இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்வீர்கள்.’

இதையும் படியுங்கள்:
நரகத்தை விடக் கொடூரம்! ஆசிட் மழை பெய்யும் அந்த கிரகம் எது தெரியுமா? திகிலூட்டும் ரிப்போர்ட்!
பூமி சுழற்சி - Earth rotation proof

காற்று, நிழல்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற எளிய விஷயங்களைக் கவனிப்பது கூட, பூமி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக அமைகிறது என்பதை அவரது வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.

அதேபோல, நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் (Nicolaus Copernicus) எழுதியுள்ளார்: ‘ ‘விண்வெளியில் உள்ள கோள்கள் பல வகையிலும் பூமியின் இயக்கத்திற்குச் சான்றளிக்கின்றன’ என்றார்.

logo
Kalki Online
kalkionline.com