

நேபாளம் துயர சம்பவம் யாரும் எதிர்பார்க்காத ஒரு பயங்கரமான பேரழிவு. இப்போது அதற்கான மீட்பு நடவடிக்கைகள் நடந்தது கொண்டிருந்தாலும், மறுபடியும் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் செயற்கைகோள் தரவு வைத்து எச்சரிக்கிறார்கள். சரி இந்த எச்சரிக்கைகள் பேரழிவு நடப்பதற்கு முன்னேயே தந்திருக்கிலாமே; ஏன் செயற்கைக்கோள்கள் அப்போது தரவில்லை? தெரிந்து கொள்ளலாம். நேபாளப் பேரழிவை செயற்கைக் கோள்களால் ஏன் கணிக்க முடியவில்லை:
போன மாதம் ஆகஸ்டில் நிகழ்ந்த நேபாள-திபெத் பனிப்பாறைச் சரிவு, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களின் பயன்கள் மற்றும் அதன் பங்குகள் பற்றிய குழப்பங்கள் நம்மில் சிலருக்கு வந்திருக்கலாம்.
இஸ்ரோ மற்றும் யுஎஸ்ஜிஎஸ்(USGS) செயற்கைக்கோள்கள் போதே கோஷி-திரிசூலி (Bhote Koshi–Trishuli) நதியில் ‘நிகழ்ந்த கடும் வெள்ளத்தின்’ முன்னும், பின்னும் இருந்த படங்களை பதிவு செய்து பகிர்ந்தாலும்; நம் கேள்வி அந்த பேரழிவு எப்படி திடீரென நிகழ்ந்தது என்பதே. இந்த பேரழிவிற்கு முன், கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கு முன்னர் இந்த நதியில் இரண்டு மீட்டருக்கும் குறைவான அளவே ‘பனிப்பாறைகளின்’ கண்டறியக்கூடிய நகர்வு இருந்தது.
அதே நம் நாட்டில் பல மாதங்களாக பனிப்பாறையின் நகர்வு வெளிப்படையாகத் தெரிந்த இந்தியாவில் நிகழ்ந்த சாமோலி பேரழிவைப் (2021) ’ போலல்லாமல்; இந்த நேபாள நிகழ்வு முன்கூட்டியே எந்த ஒரு அறிகுறியும் உணர்த்தாத வகையில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த செயற்கைக்கோள்கள் என்ன நடந்தது என்பதை மீண்டும் நமக்கு புரியவைக்கும், ஆனால் இதுபோன்ற திடீர் ‘பனிச்சரிவு’ பெரும்பாலும்
அவற்றால் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லெய் வாங்(Dr. Lei Wang ) கூறியது போல, ‘சில நாட்கள் அல்லது மணி நேரங்களில் நிகழக்கூடிய ஒரு நிலநடுக்கத்தைத் துல்லியமாகக் கணிக்க, நம்மிடம் இப்போது தொழில்நுட்பம் இல்லை என்றார்’.
செயற்கைகோள்களால் எந்தெந்த பேரழிவுகளைக் கணிக்கவோ அல்லது தடுக்கவோ முடிவதில்லை:
செயற்கைகோள்களுக்கு அதிநவீன தன்மை இருந்தபோதிலும், அவை சில குறைபாடுகளை எதிர்கொள்ளதான் செய்கின்றன
நிலநடுக்கங்கள்: இதற்கு செயற்கைகோள்களால் இதற்கு எந்த ஒரு ‘திடீர் சிக்னலும்’ தரப்படுவதில்லை. செயற்கைக்கோள் ஈர்ப்பு விசை(Gravity) தரவுகள் (GRACE திட்டங்கள்), 2010-ல் சிலி அல்லது 2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டன.
பனிப்பாறை சரிவுகள்: அரு (2016) போன்ற சில பனிச்சரிவுகள் குறைந்தது எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே காட்டின. ஆனால் இந்த (நேபாளம் 2026) எந்த அறிகுறியையும் காட்டவில்லை.
திடீர் மேகவெடிப்புகள் மற்றும் மின்னல்: செயற்கைக் கோள்களின் தெளிவுத்திறனில் உள்ள பிரச்னைகள், நிலத்தில் நிகழும் திடீர் மேகவெடிப்புகள் மற்றும் மின்னலைத் துல்லியமாகக் கண்டறிவதைத் தடுக்கின்றன என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா(Mrutyunjay Mohapatra) ஒப்புக்கொண்டார். இந்த திடீர் மேகவெடிப்புகள், மின்னல்களால் 2025-ல் இந்தியாவில் 2,500 பலியாகியிருக்கிறார்கள்.
திடீர் நிலச்சரிவுகள்: மெதுவான நிலச்சரிவு நகர்வுகளைக் கண்காணிக்க முடிந்தாலும், விரைவாக நடக்கும் சரிவுகள் பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை.
விண்வெளி நிகழும் பிரச்னைகள்: சூரியனில் நிகழும் புயல்களைக் கண்காணிக்க முடியும். ஆனால் அவை எப்போது பூமியை தாக்கும் என்பதை கணிப்பது கடினமாக உள்ளது. இது பூமியை சுற்றும் செயற்கைக் கோள்களுக்கும், அதன் மின் கட்டமைப்புகளுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
அறிவியலிலிருந்து வரும் குரல்கள்:
காலநிலை விஞ்ஞானியான டாக்டர் முஜ்தபா ஹசன்(Dr. Mujtaba Hassan) குறிப்பிட்டார், ‘நாம் இயற்கையின் எச்சரிக்கைகளை நீண்ட காலமாகப் புறக்கணித்து விட்டோம், இப்போது பேரழிவுகள் தீவிரமடைந்து வருகின்றன. செயற்கைக்கோள்கள் ‘நிகழ்ந்த மாற்றங்களின்’ தரவுகளை வழங்குகின்றன, ஆனால் அதிலிருந்து மீண்டு வருவது என்பது நாம் அதன் மீது எவ்வாறு செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தது..
அதேபோல், செயற்கைக்கோள்களால் மிகச்சிறிய நில அதிர்வுகளைக் கண்டறிய முடிந்தாலும், அது பின்னாளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற வசதிகள் இன்னும் இல்லாததால், நிலநடுக்கங்கள் மற்றும் நிலச்சரிவுகளைப் பெரும்பாலும் கணிக்க முடியாதவையாகவே உள்ளன என்று பென் ஸ்டேட்டின் கிறிஸ்டெல் வாத்தியர்(Penn State’s Christelle Wauthier ) கூறினார்.
பேரிடர்களைக் கண்காணிப்பதற்கும், ஏற்பட்ட இழப்புகளை புனரமைப்பதற்கும் செயற்கைக்கோள்கள் சக்திவாய்ந்த கருவிகளாகும். ஆனால் நிலநடுக்கங்கள், மின்னல் தாக்குதல்கள் அல்லது திடீர் பனிப்பாறை சரிவுகள் போன்ற திடீர், குறுகிய கால நிகழ்வுகளை அவற்றால் இன்னும் கணிக்க முடியாது. இதை பற்றி அறிவியல் ரீதியான ஒருமித்த கருத்து தெளிவாக உள்ளது.
‘தொழில்நுட்பத்தால் அபாயத்தைக் குறைக்க முடியும், ஆனால் இயற்கை இன்னும் நம் தற்போதைய புரிதலுக்கு அப்பாற்பட்ட பல ஆச்சரியங்களை தந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தின் நிஜமான எல்லைகள் மற்றும் நிலநடுக்கம், திடீர் பனிச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்வதில் மனிதகுலம் சந்திக்கும் சவால்கள் பற்றிய தெளிவான அறிவியல் பார்வையை நீங்கள் பெறுவீர்கள்.