

சீன நிறுவனமான ஹுவாவே ரத்த அழுத்தத்தை துல்லியமாகக் கணிக்கும் சிறப்பு ‘கஃப்’ வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் ஈசிஜி (ECG) மற்றும் பிற தொழில்நுட்ப வசதியை சேர்த்துள்ள நிலையில், சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவே , மணிக்கட்டுப் பட்டையிலேயே சிறிய ஏர்பேக் (Inflatable Cuff) வசதியைக் கொண்ட புதிய ஹுவாவே வாட்ச் டி3 (Huawei Watch D3) ஸ்மார்ட்வாட்ச்சை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவே (Huawei), ஒரு படி மேலே சென்று வாட்ச் டி3 (Huawei Watch D3) ஸ்மார்ட்வாட்ச்சை அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தியுள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாக இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் ஒரு இரத்த அழுத்த அளவீட்டுக் கருவியை சேர்த்துள்ளது.
அதாவது ஹுவாவே நிறுவனம் அறிமுகப்படுத்திய டி3 என்பது மருத்துவ தரத்திலான ரத்த அழுத்தத்தை துல்லியமாகக் கண்காணிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆகும். 'D3' என்பது ஏற்கனவே இரத்த அழுத்தத்தை அளவிடும் திறன் கொண்ட ஹூவாய் (Huawei) நிறுவனத்தின் 'Watch D' சாதனத்தின் அடுத்தகட்டப் பதிப்பாகும். இந்த சிறிய அளவீட்டுக் கருவி, வாட்ச்சின் பட்டையில் உட்பொதிக்கப்பட்டு, உங்கள் மணிக்கட்டைச் சுற்றி காற்றடைக்கப்பட்டு, சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் அளவீடுகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், இதன் வன்பொருள் (hardware) மேலும் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதே இதில் உள்ள புதிய அம்சமாகும்.
இதில் உள்ள மருத்துவ தரத்திலான மெக்கானிக்கல் ஏர்பேக் மற்றும் உயர் துல்லிய சென்சார் மூலம் 24 மணி நேரமும் ரத்த அழுத்தத்தை உடனுக்குடன் கண்காணிக்க முடியும்.
அதாவது, மற்ற சாதாரண ஸ்மார்ட் வாட்ச்கள் ஆப்டிகல் சென்சார்கள் மூலம் இரத்த அழுத்தத்தை (BP Monitoring) தோராயமாக மட்டுமே கணிக்கும்.
ஆனால், இந்த Huawei Watch D3 மாடல், நாம் மருத்துவ மனைகளில் பயன்படுத்தும் பாரம்பரிய பிபி மானிட்டர்களைப் போலவே, அதன் பட்டையில் இருக்கும் ஏர்பேக் மூலம் மணிக்கட்டை இறுக்கி துல்லியமான (Oscillometric method) அளவீட்டை வழங்குகிறது.
இது 24 மணி நேர ஆம்புலேட்டரி இரத்த அழுத்த (ரத்த அழுத்தம்) கண்காணிப்பை (Ambulatory Blood Pressure Monitoring -ABPM) ஆதரிக்கிறது. இதன் மூலம் பகல் மற்றும் இரவு நேரங்களில் உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் போது தானாகவே சீரான இடைவெளியில் 24 மணிநேரமும் இரத்த அழுத்த அளவீடுகள் எடுக்கப்பட்டு, உங்கள் மருத்துவரிடம் பகிர்ந்துகொள்ளக்கூடிய வகையிலான துல்லியமான ABPM அறிக்கையைத் தரும்.
‘இந்த அணுகுமுறை பயனர்களுக்கு இரத்த அழுத்த மாற்றங்கள் குறித்த முழுமையான புரிதலை வழங்குவதோடு, துல்லியமான முடிவுகளையும் உறுதி செய்கிறது’ என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Watch D3 பார்ப்பதற்கு ஒரு மருத்துவ உபகரணத்தைப் போலத் தோன்றாது. முந்தைய மாடல்களை விட இந்த வாட்ச் 1.92 இன்ச் AMOLED திரை மற்றும் 11.3 மிமீ மிக மெல்லிய தடிமன் கொண்டது. தில் 3,000 நிட்ஸ் (nits) வரையிலான அதிகபட்ச பிரகாசம் கொண்ட 1.92 அங்குல AMOLED திரை இடம்பெற்றுள்ளது.
அதன் ஏர்பேக் பட்டி 7.5 கிராம் எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண ஸ்மார்ட்வாட்ச் போலவே கைகளில் கட்டுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். சாதாரண பயன்பாட்டில் ஒரே சார்ஜில் 6 நாட்கள் வரை பேட்டரி லைஃப் வழங்கும்.
இரத்த அழுத்தத்துடன் சேர்த்து, இது ECG, இதயத் துடிப்பு (Heart Rate), இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு (SpO2), உடல் வெப்பநிலை மற்றும் தூக்கத்தைக் கண்காணிக்கும் வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த வாட்ச் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் (iOS) ஆகிய இரண்டு சாதனங்களிலும் தடையின்றி வேலை செய்யும்.
இதுகுறித்து ஹுவாவே நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘மருத்துவக் கருவி போன்ற தோற்றம் இல்லாமல், சாதாரண ஸ்மார்ட்வாட்ச் போலவே 40 கிராம் எடையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக’ கூறப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் (செப்டம்பர்) அறிமுகப்படுத்தப்பட்ட Watch D3 ஸ்மார்ட் வாட்ச் கருப்பு, வெள்ளை மற்றும் மோகா கோல்டு (mocha gold) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது.
ஐரோப்பாவில் இதன் விலை தோராயமாக 449 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 49,420) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹுவாவே நிறுவனம் இந்த மாதத்தில் Watch D3-ஐ அறிமுகப்படுத்தியது.
கருப்பு, வெள்ளை மற்றும் மோகா கோல்டு (mocha gold) ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், ஐரோப்பிய சந்தையில் 449 யூரோக்கள் (449 EUR) என்ற விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 49,420 ஆகும்.