நிலவின் மறுபக்கம்: நாம் அறியாத அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

நிலவின் மறைக்கப்பட்ட பகுதிகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன? ஒரு முழுமையான பார்வை.
நிலவின் மறுபக்கம் - dark side of the moon
நிலவின் மறுபக்கம் - dark side of the moonImage credit: Gemini
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on

நிலவில் பாட்டி வடை சுட்ட கதையில் தொடங்கிய நம் நிலவு பயணம். நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திராயன், ஆர்ட்டெமிஸ் (Artemis) என்று போய் கொண்டிருக்கிறது. நிலவிற்காக மனிதனால் எவ்வளவு செலவு செய்யப் பட்டாலும்; ஒவ்வொரு முறையும் அதன் செலவும் அடுத்தடுத்து ஏறத்தான் செய்கிறது, அதனைப் பற்றிய புதிர் அல்லது சந்தேங்களும் அதிகரிக்கத்தான் செய்கின்றன. சரி அப்படி என்ன குழப்பம் அந்த நிலவில் உள்ளது?. அதுவும் அதன் மறைக்கப்பட்ட பகுதிகளில் அப்படி என்ன விஷயங்கள் இருக்கின்றன?.

நிலவின் மறைக்கப்பட்ட பகுதிகள்:

நிலவில் இதுவரை பார்க்கப்படாத பகுதிகளாக, குறிப்பாக அதன் நிலவின் மறுபக்கம் மற்றும் நிலத்தடி எரிமலைக் குழாய் போன்ற அறைகள், ஆராய்ச்சியாளர்களை நீண்ட காலமாக ஈர்த்து வருகின்றன.

பூமியிலிருந்து வானத்தில் தெரியும் நிலவின் ஒரு பகுதியை போலல்லாமல், அதன் மறுபக்கம் கரடுமுரடானதாகவும், மனிதர்களின் நேரடி பார்வையிலிருந்து மறைக்கப்பட்டதாகவும் உள்ளது. நாசாவின் லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர்(Lunar Reconnaissance Orbiter) மற்றும் கிரெயில் திட்டம் (GRAIL mission) போன்ற சமீபத்திய திட்டங்கள், நிலவின் மறைக்கப்பட்ட நிலப்பரப்புகள் குறித்த முன்னெப்போதும் இல்லாத பல தகவல்களை வழங்கியுள்ளன.

சொல்லப் போனால், ஒரு காலத்தில் சாத்தியமற்றவை என்று கருதப்பட்ட அம்சங்களையும் அவை வெளிப்படுத்தியுள்ளன.

இதையும் படியுங்கள்:
நிலவொளியில் ஒளிரும் பளிங்குப் பாறைகள்! பேடாகாட் சுற்றுலா வழிகாட்டி!
நிலவின் மறுபக்கம் - dark side of the moon

நிலவின் நிலத்தடி குகைகள் மற்றும் எரிமலைக் குழாய்கள்:

பல ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் நிகழ்ந்த ‘எரிமலை வெடிப்பு’ செயல்பாடுகளால், அதன் நிலத்தடியில் குகைகள் போலான இயற்கையான பள்ளங்கள் இருக்கிறது என்று; செயற்கைகோள்களில் உள்ள சில ‘உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்’ வெளிப்படுத்தியுள்ளன.

இந்தக் குகைகள் நிலாவின் மேற்பரப்பிற்குக் கீழே பல மைல்கள் வரை நீண்டுள்ளன எனவும்; அங்கு ஒரு நிலையான வெப்பநிலை, சூரியன் அல்லது விண்வெளி கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு மற்றும் விண் கற்களிலிருந்து பாதுகாப்பும் இந்த குகைகள் தருகின்றன. இந்த இடங்களின் பற்றிய கண்டுபிடிப்பு, மனிதர்களின் எதிர்கால நிலவு பயணங்களில் மிகவும் உகந்தவையாக இருக்கக்கூடும். அவை நிலவின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றிய ஒரு புரிதலை வழங்ககூடும்.

நிலவின் ஈர்ப்பு விசை முரண்பாடுகள் மற்றும் அதன் உள் கட்டமைப்பு:

நாசாவின் கிரெயில் (GRAIL) திட்டம், நிலவின் ஈர்ப்பு விசையின் நுட்பமான மாறுபாடுகளை வரைபடமாக்கி, அதன் முன் பகுதி(நமக்கு தெரிவது) மற்றும் பின் பகுதிகளில் இடையே உள்ள வித்தியாச தன்மையை வெளிப்படுத்தியது. நிலவின் முன் பகுதியில், அதன் நிலத்தைத்தாண்டி அதன் உட்பகுதியில் உள்ள கதிரியக்கத் தனிமங்கள்(radioactive elements) உள்ளன;

நிலவின் மறுபக்கம் - dark side of the moon
நிலவின் மறுபக்கம் - dark side of the moonImage credit: Gemini

அவை சூரிய கதிர் படுவதால் வெப்பத்தை வெளியிடும். இதனால் அதன் நிலப்பகுதியை மெல்லியதாகவும், வலையும் படியும் வைத்திருக்கும். அதேசமயம் நிலவின் பின் பகுதி(மறுபக்கம்) கரடுமுரடாகவும், எரிமலை வெடிப்புகள் குறைவாகவும் உள்ளது. இந்த வேறுபாடுதான், முன்பகுதி ஏன் பரந்த சமவெளிகளுடன் மென்மையாகவும், பின் பகுதி ஏன் கருடுமுரடாகவும் இருக்கிறது என்பதை சந்தேகிக்கவும், ஆச்சரியத்தையும் தருகின்றன.

இதையும் படியுங்கள்:
நீலப் புரட்சி: இந்திய மீனவர்களின் வாழ்க்கையை மாற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள்!
நிலவின் மறுபக்கம் - dark side of the moon

கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து சுவாரஸ்யமான உண்மைகள்

இந்த மறைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிடைத்த மிகவும் ஈர் க்கக்கூடிய உண்மைகளாக நிலத்தடி குகைகளின் இருப்பு, எரிமலைகளால் உண்டான குழாய் போன்ற அறைகளில் இருக்கும் நிலையான வெப்பச் சூழல்கள், விண்வெளி கதிர்வீச்சிலிருந்து கிடைக்கும் இயற்கையான பாதுகாப்பு, குகைகளில் மறைந்திருக்கும் பாதுகாக்கப்பட்ட புவியியல் ஆவணங்கள், மற்றும் நிலவின் பரிணாம வளர்ச்சிக் பற்றிய புரிதல் போன்றவை. இந்தக் 5 கண்டுபிடிப்புகள் இன்னும் மனிதனால் நேரடியாக ஆராய்ச்சிச் செய்யப்படவில்லை;

செயற்கைகோள்களின் தரவுகளால் யூகிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து, நிலாவை ஒரு வறண்ட பாறையாக அல்லாமல், அறிவியல் சார்ந்த ஆய்வுக்கு இன்றியமையாத ஒரு ஆற்றல்மிக்க பொருளாக மனித குலத்திற்கு மறுவரையறை செய்கின்றன.

மாபெரும் சிந்தனையாளர்களின் கருத்துக்கள்:

நீல் ஆம்ஸ்ட்ராங் ஒருமுறை குறிப்பிட்டார், ‘மர்மம் வியப்பை உருவாக்குகிறது, அந்த வியப்புதான் மனிதனின் விருப்பத்தின் அடிப்படையாகும்.’ அவருடைய வார்த்தைகள், நிலவில் மறைந்திருக்கும் இந்தக் கண்டுபிடிப்புகளுடன் ஆழமாகப் பொருந்திப் போகின்றன.

ஆய்வு என்பது ஆர்வத்தினாலும், அறிவுத் தேடலாலும் செய்யப்படுகிறது என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன. அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் (Arizona State University) சேர்ந்த ராபர்ட் வாக்னர்(Robert Wagner) போன்ற விஞ்ஞானிகளும் இந்தக் கருத்தையே எதிரொலிக்கின்றனர்.

‘நிலவில் மனிதர்களின் வருங்கால செயல்பாடுகளுக்கு அங்குள்ள குகைகள் மிகவும் கைகொடுக்கும்’ என்று அவர் கூறியுள்ளார்.

விண்வெளி அறிவியலின் அதிநவீன உண்மைகளைப் புரிந்து கொண்டு, எதிர்கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் நிலவு குடியேற்றங்கள் பற்றிய தேடலில் உங்களுடைய அறிவியல் ஞானத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
நேபாள பேரழிவு: அதிநவீன செயற்கைக்கோள்களால் பனிச்சரிவை ஏன் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை?
நிலவின் மறுபக்கம் - dark side of the moon
logo
Kalki Online
kalkionline.com