ஒரு ராக்கெட் ஏவுவதில் நாசாவிற்கே இந்தக் கதியா?

apollo-vs-modern-rocket-launch
apollo vs modern rocket launchImage credit: AI image
Published on

ரு ராக்கெட் ஏவுவதில் நாசாவிற்கே இந்தக் கதியா?

தவறு, தடங்கல் நடப்பது இயல்புதான். ஆனால் வருடா வருடம் ஒரு ராக்கெட் ஏவுதலையே சுற்றி நடப்பது பலருக்குச் சந்தேகத்தையும், ஆச்சர்யத்தையும் தரலாம்.

எதனால் இது நடக்கிறது? என்னென்ன காரணங்களாக இருக்கலாம்?: அப்பல்லோ ராக்கெட் (Apollo Missions) ஏவப்பட்டிருந்த காலத்தில் குறைவாகவே காணப்பட்ட தாமதங்கள் (Delays); இன்று அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு இப்போதுள்ள நவீன (Modern) பயன்பாடுகளும் மற்றும் அதற்கான சிக்கலான வடிவமைப்பும்தான் காரணம். (apollo vs modern rocket launch).

1960 மற்றும் 1970-களின் முற்பகுதியில் நிகழ்ந்த அப்பல்லோ திட்டங்கள் ஒரு தனித்துவமான நன்கு திட்டமிட்ட இலக்கை கொண்டிருந்தன; அதுதான் மனிதர்களைச் சந்திரனில் தரையிறக்குதல் (Land humans on the Moon). இந்தத் தெளிவு நாசாவிற்கு (NASA) அதற்குத் தேவையான விஷயங்களை (Resources) நெறிப்படுத்தவும், அதீத பொறியியல் முயற்சிகளில் கவனம் செலுத்தவும், அதிக அளவிலான ஆபத்தைத் தைரியமாக ஏற்றுக் கொள்ளவும் ஒருமனதாக அனுமதித்தது.

ஆனால் இப்போதுள்ள ராக்கெட் ஏவுதலில் நவீன விண்வெளித் திட்டங்கள், செவ்வாய் கிரக ஆய்வு, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கிகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் (reusable rockets) மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு (international collaborations) போன்ற பரந்த நோக்கங்களை ஒரு ராக்கெட் திட்டத்திலே செய்யவேண்டி உள்ளது.

இதையும் படியுங்கள்:
நிலவில் ஓட்டை போடும் NASA. என்ன செய்யப் போகிறார்கள்?
apollo-vs-modern-rocket-launch

அதோடு ஒவ்வொரு ஏவுதலிலும் (Each mission) அதிக பங்குதாரர்கள் தேவைப்படுவது, முன்புபோல் இல்லாத கடுமையானப் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விரிவான சோதனைக்கு உட்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் ஆகியவை; இயற்கையாகவே இந்த ஒத்திவைப்புகளின் (postponements) சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது.

மற்றொரு காரணம், அப்போதைக்கும், இப்போதைக்கும் உள்ள ஆபத்து சகிப்புத்தன்மை (risk tolerance). புவிசார் அரசியல் (geopolitical urgency), அமெரிக்காவிற்கும் Vs சோவியத் யூனியத்திற்கும் இடையில் நிகழ்ந்த பனிப்போர் சூழலில் அப்போதைய அப்பல்லோ ராக்கெட் பயணங்கள் செயல்பட்டன.

இதனால் தோல்விகள் அவர்களால் முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது; அதை பொறுத்துக்கொள்ளவும் செய்தன. காரணம் அவர்களுக்கு ஒரு முழுமையைவிட அடுத்தடுத்து வேகமே முன்னுரிமையாக அளிக்கப்பட்டது. ஆனால், இன்று உள்ள அறிவியல் பொது ஆய்வு, அதற்கான வணிக ஈடுபாடு மற்றும் பில்லியன் டாலர் முதலீடுகள் போன்றவை அப்போதுபோல் விபத்துக்களை சகித்துக்கொள்ள முடியாது. இதுவும் இப்போதுள்ள ஏவுதள தாமதங்களின் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றன.

இது எந்தச் சமரசமின்றி அதில் பயணிக்கும் குழு பாதுகாப்பை உறுதி செய்கின்றன, விலையுயர்ந்த உபகரணங்களையும் பாதுகாக்கின்றன.

ஆச்சரியப்படும் விஞ்ஞான வேறுபாடுகள்:

சுவாரஸ்யமாக இன்று நம் கையில் உள்ள நவீன ஸ்மார்ட்போனைவிட; குறைவான (RAM and ROM) கொண்ட கணினிகளுடன்தான் (Computers) அப்பல்லோ (1967) வெற்றி பெற்றது. இதற்கு ராக்கெட் வடிவமைப்பு தத்துவத்தில்தான் (Design philosophy) வேறுபாடு உள்ளது. காரணம் அப்பல்லோ திட்டம் முழு மனித திறன், அனலாக் (Analog) அமைப்புகள் மற்றும் எளிமையான காரணங்களுக்காக செயல்பட்டன.

இப்போதுள்ள டிஜிட்டல் முறைகள் போலில்லாமல்; சூழ்நிலைகளை முறையாகக் (Manually) கையாள விண்வெளி வீரர்கள் பயிற்சி பெற்றனர். இதற்கு நேர்மாறாக இப்போது நவீன ராக்கெட் பயணங்கள் நிறைய டிஜிட்டல் அமைப்புகள், தானியங்கி சோதனைகளை ஒருங்கிணைக்கின்றன. இவை 100 மடங்கு சக்திவாய்ந்தவை என்றாலும்; எல்லாம் ரோபோடிக் என்பதால் கூடவே அதிக தோல்விகளைச் சந்திக்கின்றன. அதை சரிபார்த்து சோதனை செய்யவும் காலதாமதம் ஆகின்றன.

இதையும் படியுங்கள்:
NASA மறைக்கும் அந்த ஒற்றைப் புகைப்படம்! - 3I/அட்லஸ் உண்மையிலேயே என்ன?
apollo-vs-modern-rocket-launch

எனவே, அன்றைய காலகட்டத்தின் அப்பல்லோவின் வெற்றி ஒரு தனித்துவமான தேசிய மிஷன் (national mission), மகத்தான நிதி மற்றும் அரசியல் விருப்பத்தால் இயக்கப்பட்டது.

ஆனால், இன்றைய நவீன விண்வெளிப் பயணம் மிகவும் மாறுபட்டது. இது மிகவும் எச்சரிக்கையானது, வணிகரீதியாகப் பின்னிப்பிணைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com