

நேபாளப் பெருவெள்ளத்தின் பேரழிவின் வடு இன்னும் உலகம் முழுவதும் அனைவரின் மனதிலும் மாறாத நிலையில், இந்த துயரச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ‘உலகம் முழுவதும் பெரும் அழிவுகள் ஏற்படும்’ என்று பாபா வங்கா (Baba Vanga) முன்பே கணித்திருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் விறுவிறுவென பரவி அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு, 2026-ஆம் ஆண்டிற்காக பாபா வங்கா விடுத்ததாகக் கூறப்படும் எச்சரிக்கைகள் குறித்த இணைய விவாதங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
சமீபத்தில் நேபாளத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பல்கேரியாவின் கண் தெரியாத தீர்க்கதரிசியான பாபா வங்கா (Baba Vanga) இதைக் கணித்ததாக வதந்திகள் பரவி வருகின்றன.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் கடுமையான பருவமழை காரணமாகவே இந்த திடீர் வெள்ளம் (Glacial Lake Outburst Flood) ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க காலநிலை மாற்றம் (Climate Change) மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் நிகழ்ந்த ஒரு இயற்கை பேரிடராகும்.
2026 ஆம் ஆண்டில் பூமியின் 7 முதல் 8 சதவீதப் பகுதி இயற்கை சீற்றங்களால் அழியும் மற்றும் 3வது உலகப்போர் வெடிக்கும் என்று பாபா வங்கா கணித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்தக் கூற்று பெரும்பாலும் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், தீவிர வானிலை மாற்றங்கள் மற்றும் பிற இயற்கை பேரிடர்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. பாபா வங்கா இந்த ஆண்டில் மூன்றாம் உலகப் போர் மூளும் என்று கணித்ததாக மற்றொரு பரவலான கூற்றும் உள்ளது.
ஆனால் பாபா வங்கா நேபாள வெள்ளம் குறித்தோ, அல்லது 2026-இல் உலகம் அழியும் என்றோ குறிப்பிட்டதற்கான எந்தவொரு நேரடி அல்லது எழுதப்பட்ட ஆவண ஆதாரமும் இல்லை.
பல்கேரியாவைச் சேர்ந்த கண் தெரியாத தீர்க்கதரிசியான பாபா வங்கா தனது கணிப்புகளை எங்கும் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யவில்லை. தற்போதைய உலகளாவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் பதற்றங்களை ஒட்டி, இத்தகைய தகவல்கள் இணையத்தில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் பெற்றவர் எனக் கூறப்படும் பாபா வங்கா பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர்.
சிறு வயதில் நேரிட்ட விபத்தில் பார்வையை இழந்த பாபா வங்காவுக்கு, எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் சக்தி கிடைத்ததாக நம்பப்படுகிறது.
அதாவது, 12 வயது சிறுமியாக இருந்த பாபா வங்கா, பார்வை இழந்த நிலையில், எதிர்காலத்தைப் பார்க்கும் அபூர்வ சக்தி கிடைத்ததாக அவரது தொண்டர்களால் நம்பப்பட்டார். அவரது 30வது வயதில் அவர் பெரும் புகழடைந்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதையும் நேரடியாக வெளிப்படுத்தாமல், மறைமுகமான வார்த்தைகளைத் தொகுத்து அவர் தனக்கு தெரிந்த காட்சிகளை வெளிப்படுத்துவார். அதில்தான் இரண்டு உலோகப் பறவைகள் அமெரிக்க சகோதரர்கள் மீது மோதுகின்றன. அவ்விடம் சாம்பாலாக மாறுகிறது, மனித ரத்தம் ஆறாக பாய்கிறது என்று அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் குறித்து முன்கணித்திருந்தாராம்.
உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்கள் தலைதூக்கும், மனிதர் தொழிலாளர்களுக்கு மாற்று வரும் என்பது உள்ளிட்ட கணிப்புகள் ஏற்கனவே நிகழத் தொடங்கிவிட்ட நிலையில், மேலும் சில கணிப்புகள் மக்களை சற்று மனக்கலக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.
1996ஆம் ஆண்டு மறைந்த பாபா வங்கா, 9/11 தாக்குதல், பிரின்ஸ் டயானா மறைவு, 2004ல் நிகழ்ந்த சுனாமி, கரோனா பேரிடர் உள்ளிட்டவற்றை சரியாகக் கணித்திருந்தார். ஆனால் அவர் இறந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும், அவரது கணிப்புகள் பற்றிய கதைகள் தொடர்ந்து பரவி வருகின்றன.
இதற்கிடையே அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையேயான பதற்றம் மற்றும் தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம் காரணமாக 2026-ல் 3-வது உலகப்போர் தொடங்கும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் பதவியிலிருந்து விலகுவார் என்றும் தகவல்கள் பரவுகின்றன.
அத்துடன், பாபா வங்காவின் 2026-ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் என்று கூறப்படுபவற்றில் மிகவும் விசித்திரமான ஒன்று, வேற்றுலக உயிரினங்கள் (ஏலியன்கள்- extraterrestrial life )தொடர்பானதாகும்.
சில இணையவழித் தகவல்களின்படி, 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு பிரம்மாண்டமான விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையக்கூடும் என்றும், இது மனிதகுலம் வேற்றுலக உயிரினங்களை முதன்முறையாக நேரில் சந்திப்பதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
பாபா வங்கா இந்தக் கணிப்பை வெளியிட்டார் என்பதற்கு எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லை. அதேவேளையில், வானில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் தென்படுவது மட்டுமே வேற்றுலக உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரமாகிவிடாது. அத்தகைய நிகழ்வுகளுக்கு ட்ரோன்கள், விமானங்கள், செயற்கைக்கோள்கள் அல்லது வளிமண்டல நிகழ்வுகள் எனப் பலவிதமான விளக்கங்கள் இருக்கக்கூடும்.
அதுமட்டுமில்லாமல், கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, உலகளாவிய பொருளாதார நெருக்கடி, தங்கம் விலையில் நிறைய மாற்றங்கள் நடந்து, நடுத்தர மக்களின் பொருளாதாரமே மோசமாக பாதிக்கப்படும் என்றும் பீதியை கிளப்பி விட்டு வருகிறார்கள்.
2026ஆம் ஆண்டுக்குள் இதெல்லாம் நிகழும் என்று அவர் கணித்திருந்த நிலையில், இன்னும் 4 மாதங்களே இருக்கின்றன. அதிலும் ஒரு குறிப்புக்கு நவம்பர் மாதமே காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 2026-ஆம் ஆண்டிற்காக பாபா வங்கா இத்தகைய குறிப்பிட்ட கணிப்புகளை வெளியிட்டார் என்பதை உறுதிப்படுத்தும் நம்பகமான முதன்மை ஆதாரம் எதுவும் இல்லை. இத்தகவல்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் பிறர் வழித் தகவல்கள் மூலமாகவே பரப்பப்பட்டுள்ளன.
எனவே, நேபாளப் பேரழிவைத் தொடர்ந்து 2026-ல் உலகம் அழியப் போகிறது என்று பாபா வங்காவின் பெயரில் வெளியாகும் செய்திகள் யாவும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தப் பரப்பப்படும் வெறும் வதந்திகளே ஆகும்.
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தீவிரப் பருவநிலை மாற்றங்களே நேபாள வெள்ளத்திற்கு காரணம் என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். இதற்கும் பாபா வங்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அவரது கணிப்புகள் என்று வெளியாகும் எந்தவொரு தகவலும் எழுத்துப்பூர்வமாக எழுதி அவர் விட்டுச் செல்லவில்லை; அவருடன் இருந்தவர்களிடம் அவர் பரிமாறிக் கொண்ட தகவல்களைத் தொகுத்தே இந்த வெளியீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.
சில கணிப்புகள் தவறாகும்போது, பாபா வங்காவின் கூற்றுகளைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.