இப்படி நடந்தால்...? நடுநடுங்கச் செய்யும் உண்மைகள்! கற்பனை செய்யவே நடுங்குதே!

பூமிக்கு ஈர்ப்பு விசை ஏன் அவசியம்?
Earth Rotation and Gravity
Earth
Published on

புவி ஈர்ப்பு திடீரென்று இல்லாமல் போவது என்பது இயற்கையில் நடக்காத ஒரு கற்பனைச் சூழல். ஆனால் அது நடந்தால் என்ன ஆகும் என்பதை அறிவியல் அடிப்படையில் பார்க்கலாம்.

புவி ஈர்ப்பு திடீரென்று இல்லாமல் போனால்:

1. மனிதர்கள், விலங்குகள், கட்டிடங்கள், வண்டிகள் எல்லாம் மேல் நோக்கி பறக்கத் தொடங்கும். உடலின் உள்ளுறுப்புகளும் திடீர் ஈர்ப்பில்லாத சூழலில் பாதிக்கப்படும்.

2. ஈர்ப்பு இல்லாவிட்டால் வளிமண்டலம் பூமி மீது தங்க முடியாது. சுவாசிக்க காற்றே கிடையாது. உயிர்கள் உடனடியாக ஆபத்தில் சிக்கும்.

3. கடல்கள், நதிகள், கடலலைகள் எல்லாம் வானில் மிதந்து பறந்து விடும். கடல் நீர் மேல் குமிழியாக உயர்ந்து வெளிநிலைக்கு வெளியேறி விடும். பூமி சில நிமிடங்களில் வறண்ட கோளாக மாறும்.

4. சந்திரன் பூமியைச் சுற்றுவது பூமியின் ஈர்ப்பால் தான். ஈர்ப்பு இல்லாது போனால் சந்திரன் நேர்கோட்டில் விண்வெளியில் பறந்து விடும். பூமியின் சுழற்சி மாறும்.

இதையும் படியுங்கள்:
சிம் கார்டை கழற்றி வீசினாலும் மாட்டிக்கொள்வார்கள்! உங்கள் போனை போலீஸ் ட்ராக் செய்வது இப்படித்தான்!
Earth Rotation and Gravity

5. பூமி சூரியனைச் சுற்றுவதற்கும் ஈர்ப்பே காரணம். ஈர்ப்பின்றி பூமி ஒரு நேர்கோட்டில் வேகமாக விண்வெளியில் பறந்து செல்லும். சூரிய ஒளி இல்லாததால் வெப்பநிலை சில நாட்களுக்குள் கடுமையாகக் குறைந்து உறைபனி கோளாக மாறும்.

6. உடலுக்குள் இரத்த ஓட்டம் சீரழியும். உள்ளுறுப்புகள் திடீரென மிதக்கும். இது உயிர் பிழைத்தலை இயலாச்செய்யும். சில விநாடிகளில் மயக்கம் ஏற்படும்.

7. ஈர்ப்பு இல்லாமல் போனால் அடித்தளம் பொருள்களை தக்கவைக்க முடியாது. கட்டிடங்கள் தரையிலிருந்து பிசகி உடைந்து பறக்கும்.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலை மலிவாகப் போகுதா? பூமிக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் புதையல்!
Earth Rotation and Gravity

புவி ஈர்ப்பு திடீரென மறைந்தால், பூமியில் உயிர்கள் ஒன்றுமே சில நிமிடங்களுக்கும் மேலாக உயிர் பிழைக்க முடியாது. பூமி தானே விண்வெளியில் கட்டுப்பாடின்றி பறக்கத் தொடங்கி, முழு சூரியக் குடும்பமும் பாதிக்கப்படும்.

புவி ஈர்ப்பு அதிகமாகிவிட்டால் என்ன நடக்கும்?

1) ஈர்ப்பு 2 மடங்கு ஆனால் எடை இரட்டிப்பாகும். 3 மடங்கு ஆனால் எடை மூன்று மடங்கு ஆகும். உடல் எடை அதிகரிப்பால் எலும்புகள், தசைகள் அதிக அழுத்தம் பெறும். முதுகுத்தண்டு சுருங்கி வலி, சுவாசிப்பது கடினம், நடப்பது மிகவும் சிரமம்.

2) இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டி வரும். இரத்தம் மேல் நோக்கி பம்ப் செய்ய சிரமம்; தலைசுற்றல், மயக்கம். நீண்ட நேரம் வாழ்வில் ஆபத்து.

3) இயக்கங்கள் மிகவும் மெதுவாகி ஓடுவது, குதிப்பது, பொருளை தூக்குவது எல்லாம் மிகக் கடினம். ஒரு காகிதத்தைக் கூட தரையிலிருந்து எடுப்பது வலி தரும்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட 128 புது நிலவுகள்.. யார் அந்த "நிலவுகளின் ராஜா"!
Earth Rotation and Gravity

4) எடை அதிகரிப்பதால் கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் அனைத்தும் அதிக சுமையால் பாதிக்கப்படும். தாங்க முடியாத கட்டிடங்கள் சிதையலாம்.

5) விமானங்கள், ராக்கெட்கள் பறக்க முடியாது. அதிக ஈர்ப்பு வளிமண்டலத்தை செறிவாக்கும்; பறக்கும் கருவிகளின் lift குறைந்து, take-off கிட்டத்தட்ட முடியாது.

6) ஈர்ப்பு அதிகமாகிவிட்டால் காற்று மிகுந்த அழுத்தத்தில் கீழே தணியும். அதிக வளிமண்டல அழுத்தம், காற்று அடர்த்தி உயரும் சுவாசம் சிரமப்படும். கடல் உயரம் குறைந்து, அலைகள் மெதுவாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
இனி 'கரண்ட் பில்' பத்தி கவலை இல்லை! உங்க வீட்டுச் செடியே பல்பு மாதிரி எரியப் போகுது!
Earth Rotation and Gravity

7) அதிக ஈர்ப்பால் மலைகள் உயரம் குறையும், நிலத்தட்டு நிலை மாறும். எரிமலை அழுத்தம் கூடும்.

8) பூமியின் ஈர்ப்பு அதிகரித்தால் சந்திரன் மேலும் அருகே இழுக்கப்படும். அலைகள் மிகப் பெரிதாகி கடற்கரை பகுதிகள் ஆபத்துக்கு உள்ளாகலாம்.

புவி ஈர்ப்பு சிறிதளவு கூட அதிகமாகினாலும், உயிரினங்கள், கட்டிடங்கள், இயந்திரங்கள் அனைத்து அமைப்புகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அதிக அளவில் அதிகரித்தால் உயிர்கள் வாழ இயலாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com