தூக்கத்தில் உயரத்திலிருந்து கீழே விழுவது போல் திடுக்கிடுவது ஏன்? அறிவியல் சொல்லும் காரணம்!

ஆழ்ந்த உறக்கத்தின் போது உயரத்திலிருந்து கீழே விழுவது போல உடல் தூக்கிப்போட விழித்தெழும் நிகழ்வு எதனால் ஏற்படுகிறது என்பதற்கான அறிவியல் காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்.
தூக்கத்தில் திடுக்கிடல் hypnic jerk reasons
தூக்கத்தில் திடுக்கிடல் hypnic jerk reasonsGemini Image
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, திடீரென ஒரு உயரமான கட்டடத்திலிருந்தோ, மலை முகட்டிலிருந்தோ கீழே விழுவது போல உடல் தூக்கிப்போட விழித்தெழுந்த அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அறிவியல் இந்த நிகழ்வை 'ஹிப்னிக் ஜெர்க்' (Hypnic Jerk) என்று அழைக்கிறார்கள். உலக மக்களில் சுமார் 70 சதவீதம் பேர் தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் இதை அனுபவித்திருப்பார்கள். 

இது முற்றிலும் ஒரு இயல்பான, உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத நிகழ்வுதான். நாம் தூங்கத் தொடங்கும் நேரத்தில் நமது மூளைக்கும் தசைக்கும் இடையில் ஏற்படும் ஒரு சிறிய தகவல் தொடர்புப் பிழையே இதற்கு முக்கியக் காரணம்.

மூளையின் தற்காப்பு நடவடிக்கை!

விழிப்பு நிலையிலிருந்து ஆழ்ந்த தூக்க நிலைக்கு மெல்ல மெல்ல மாறும்போது, நமது இதயத் துடிப்பு குறையத் தொடங்கும். அதே நேரத்தில் கை, கால் தசைகளும் முழுமையாகத் தளர்வடையும். தசைகள் இப்படித் தளர்ந்து வருவதை நமது மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. 

நாம் விழிப்போடு இருந்து கொண்டே திடீரென எங்கிருந்தோ கீழே விழுந்து கொண்டிருக்கிறோம் என்று மூளை அவசரமாகக் கணித்துவிடுகிறது. அதனால் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக, உடனடியாகத் தசைகளுக்குச் சிக்னல்களை அனுப்பி உடலைத் திடுக்கிடச் செய்கிறது.

தூக்கத்தில் திடுக்கிடல் hypnic jerk reasons
தூக்கத்தில் திடுக்கிடல் hypnic jerk reasonsGemini Image

இதற்கு மற்றொரு சுவாரஸ்யமான காரணத்தையும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆதிகாலத்தில் நமது மனித மூதாதையர்கள் பாதுகாப்பிற்காக மரக்கிளைகளில் அமர்ந்தபடியே தூங்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். தூக்கத்தின்போது தசைகள் முழுமையாகத் தளர்ந்துவிட்டால் மரத்திலிருந்து கீழே விழுந்துவிட வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
பேனா மூடியில் இருக்கும் இந்தச் சிறிய துளைக்கு பின்னால் இவ்வளவு பெரிய ஆபத்துத் தடுப்பு உள்ளதா?
தூக்கத்தில் திடுக்கிடல் hypnic jerk reasons

அதைத் தடுப்பதற்காகவே மூளை உருவாக்கிய இந்தத் தற்காப்பு எதிர்வினை, பரிணாம வளர்ச்சியின் மிச்சமாக இன்றும் தொடர்கிறது. மேலும், தூக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் இடையில் மூளையின் நரம்பு சிக்னல்களில் ஏற்படும் சிறிய தடுமாற்றத்தால், உடலில் லேசாக மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வும் ஏற்படலாம்.

இதைத் தூண்டும் அன்றாடப் பழக்கங்கள்!

பெரும்பாலும் இது இயல்பான நிகழ்வாக இருந்தாலும், சில பழக்கவழக்கங்கள் இதை அடிக்கடி தூண்டக்கூடும். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாகக் கடுமையான மன உளைச்சலுடன் இருந்தால், மூளை ஓய்வெடுக்காமல் விழிப்புடன் தசை அதிர்வுகளை அதிகப்படுத்தும். 

அதேபோல, இரவில் காபி, தேநீர் குடிப்பதும் புகைப்பிடிப்பதும் நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிடுவதால் மூளையால் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்ல முடியாது. தூங்குவதற்குச் சற்று முன்பாகக் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்தாலும் தசைகள் எளிதில் தளர்வடையாமல் திடுக்கிடச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
பள்ளிக்குச் செல்ல குழந்தைக்கு பயமா? மௌனமாகத் தாக்கும் ‘புல்லிங்’ ஆபத்து: தப்பிப்பது எப்படி?
தூக்கத்தில் திடுக்கிடல் hypnic jerk reasons

அமைதியான தூக்கத்திற்கான வழிமுறைகள்!

இந்தத் திடுக்கிடலைக் குறைக்க மூளையின் தூக்கச் சுழற்சியை சீராக்க வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாலை நேரத்திற்குப் பிறகு காஃபின் கலந்த பானங்களைத் தவிர்ப்பதுடன், தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே மொபைல் போன் பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டும். அந்த நேரத்தில் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வது அல்லது புத்தகங்கள் படிப்பது மனதை அமைதிப்படுத்தும்.

இது ஒரு சாதாரணச் செயல்பாடு என்பதால் இதற்காகப் பயப்படத் தேவையில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் பலமுறை இப்படித் திடுக்கிடல் ஏற்பட்டுத் தூக்கம் முழுமையாகக் கெட்டால், ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது.