தன்னம்பிக்கை அதிகரிக்கும் வயது எது தெரியுமா? ஆய்வு சொல்லும் ஆச்சரியம்!

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
International Day of Older Persons
Elderly
Published on

யதாகிறதே என்று கவலைப்பட்டால்தான் மூளை அதை உணர்ந்து கொள்கிறது. எனவே, வயதாகிறதே என்று நினைக்காமல் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டே இருங்கள். ‘வயது ஒரு பொருட்டே அல்ல’ என்கிறார்கள் பென்சில்வேனியா மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். வயதைப் பற்றி கவலைப்படாமல் நேர்மறை எண்ணங்களுடன் வாழும் நபர்களுக்கு வயது ஒரு பொருட்டே அல்ல. அது அவர்களின் மூளை திறனை பாதிப்பதும் இல்லை என்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? உலகின் டாப் வல்லரசுகளை ஆள்பவர்களின் சராசரி வயது 65க்கும் மேல். பிரேசில் ஜனாதிபதி லூ இனாசியே லூலா டி சில்வா வயது 80, அமெரிக்க அதிபர் ரெனால்ட் டிரம்ப் வயது 79, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வயது 75, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வயது 73, சீன அதிபர் ஜி.ஜின்பிங் வயது 72, ஜெர்மன் ஜனாதிபதி பெரிடெரிக் மெர்ஸ் வயது 70, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷியா வயது 69, இங்கிலாந்து பிரதமர் கேயர் ஸ்டார்மர் வயது 63.

இதையும் படியுங்கள்:
அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல்: நிலவில் ஆம்ஸ்ட்ராங் படித்த முதல் வாக்கியம்!
International Day of Older Persons

வயது அதிகரிக்க அதிகரிக்க தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்கிறார்கள். வயதானவர்கள் தங்களது உடல் மற்றும் உடை பற்றி அதிகம் அக்கறை காட்ட மாட்டார்கள். காரணம், அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதே என்கிறார்கள், ‘ஏஜிங் பெட்டர்’ எனும் இங்கிலாந்து ஆய்வு குழுவினர். வயதாகும்போது இரண்டு தகவல்களுக்கு இடையே இருக்கும் தொடர்பைப் புரிந்து கொள்ளும் மூளையின் திறன் அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

வயதானவுடன் இரண்டு முக்கிய மூளை செயல்பாடுகள் மேம்படும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைகழக நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள். ஒன்று ஓரியண்டிங் (Orienting) எனப்படும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன். மற்றொன்று ‘எக்ஸிகியுட்டிவ் இன்ஹிபிஷன்’ (Executive inhibition) எனப்படும் கவனத்தை சிதறடிக்கும் அல்லது முரண்படும் எண்ணங்களைத் தடுக்கும் திறன். மேலும், ஒரு வார்த்தைக்கு இருக்கக்கூடிய வேறு பெயர்களை (Vocabulary) நினைவுபடுத்தும் ஆற்றல் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் மேம்படும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மாரடைப்பைத் தடுக்கும் மகத்தான சிசிக்சைகள்!
International Day of Older Persons

நமது மூளையின் நினைவாற்றலைப் போலவே, நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் நினைவாற்றல் உள்ளது. அந்த நினைவாற்றல் வயதானவர்கள் இடையே வலுவாக இருக்கும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இது நோய் கிருமிகளை திறமையாக கையாளும் திறனை உடலுக்கு வழங்கும். எனவே, சில நேரங்களில் நோய்களின் தாக்கம் குறையும் என்கிறார்கள் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது 70 வயதுக்கு மேல் சிறப்பாக செயல்படும் என்கிறார்கள். மேலும், சில அலர்ஜியையும் எதிர்க்கும் என்கிறார்கள்.

‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பது நமது முன்னோர்கள் வாக்கு. அதில் மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சி என்பது ‘U’ வடிவத்திலானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது, இளமைப் பருவத்தில் மகிழ்ச்சியாக நுழைகிறோம். 30 வயதுக்கு மேல் 60 வயது வரை ஏற்படும் நடுவயது நெருக்கடி காரணமாக மகிழ்ச்சி குறைகிறது. மீண்டும் 70 வயதைத் தொடும்போது மகிழ்ச்சியான எண்ணங்கள் அதிகமாகும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படியுங்கள்:
கோயில் கட்டி, கடவுளாக வணங்கப்படும் ஒரே சீன தத்துவ ஞானி!
International Day of Older Persons

80 வயதிற்கு மேற்பட்ட சில முதியவர்களுக்கு 20 முதல் 30 வயது இளைஞர்களைப் போல் ஞாபக சக்தி இருக்கும். இந்த அபார ஞாபக சக்தியை பெற்றவர்களை, ‘சூப்பர் ஏஜ்ஜர்’ என்கிறார்கள். இவர்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட ஸ்பெயின் மேட்ரிட் பிரைன் பல்கலைக்கழக நியூரோ சயின்ஸ் பிரிவு ஆராய்ச்சியாளர்கள். இந்த மாதிரியான முதியவர்கள் உணவிலோ, உடற்பயிற்சி முறையிலோ, தூக்க முறையிலோ எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் நார்மலாகத்தான் உள்ளது. ஆனால், அவர்களின் அழுத்தமான சமூக தொடர்புதான் இதற்கெல்லாம் காரணமாக விளங்குகிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

வயதான பின்னரும் ஆரோக்கியமாக இருக்க உணவு முறையில் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். முதிய வயதில் செரிமானம் மெதுவாகி, ஊட்டச்சத்து தேவை அதிகரிக்கிறது. வயிற்றின் அமிலம் மற்றும் நொதி அளவுகள் வயதாகும்போது குறைந்து, புரத உறிஞ்சுதலை பாதிக்கின்றன. கஞ்சி, மென்மையான மசாலாப் பொருட்கள் மற்றும் சூடான, சமைத்த உணவுகள் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் செரிமானத்தை எளிதாக்கி உறிஞ்சுதலை வலுவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
ரேபிஸ் தடுப்பூசி கண்டுபிடித்த பாஸ்டரின் மிரள வைக்கும் வாழ்க்கை!
International Day of Older Persons

40 வயதிற்குப் பிறகு தசை அடர்த்தி குறையத் தொடங்குகின்றன. ஆனால், 60 வயதுக்குப் பிறகுதான் அவை தெளிவாகத் தெரிகின்றன. சரியான புரதத்துடன் சீரான உடல் இயக்கம் இந்தப் போக்கைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். நீரிழிவு நோய் கண்டறியப்படாவிட்டாலும், வயதானவர்களுக்கு உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை அதிகரிப்பதைக் கவனிக்கலாம். ஆகவே, காய்கறிகள், குறைவான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவற்றை டயட்டில் சேர்ப்பதோடு உணவைத் தவிர்க்காமல் இருக்க வேண்டும்.

மூத்த வயதினர்களுக்கு என்று தனியான உணவு தேவையில்லை. நல்ல கவனிப்புடன் தயாரிக்கப்பட்ட பழக்கமான உணவுகளே போதும். எளிதில் ஜீரணமாகும், நன்கு சமைத்த, சூடான உணவுகளை உண்ணுங்கள். ஒவ்வொரு உணவிலும் புரதத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் டயட்டில் சமைத்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். நெய் போன்ற பாரம்பரிய கொழுப்புகளை சாப்பிடுங்கள். அவல், கஞ்சி மற்றும் சாஸ் போன்ற உணவுகளின் மூலம் உங்கள் குடலைப் பராமரியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com