World Hepatitis Day - ஜூலை 28: உலகக் கல்லீரல் அழற்சி நாள் - 'இது நடவடிக்கைக்கான நேரம்’!

World Hepatitis Day
World Hepatitis Day
Published on

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாளில் உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day) கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மக்களிடையே, கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நோயால் பாதிக்கப்பட்டோர் குழுக்களின் கூட்டு முயற்சியால், முதன் முதலில், 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாளன்று, பன்னாட்டு கல்லீரல் அழற்சி விழிப்புணர்வு நாள் தொடக்கக் கூட்டம் நடந்தது. எனினும், நோயால் பாதிக்கப்பட்டோரின் வெவ்வேறு குழுக்கள் இந்நாளை வெவ்வேறு நாட்களில் கடைப்பிடித்து வந்தனர்.

2010 ஆம் ஆண்டு, மே மாதம் நடந்த 63 வது உலக நல்வாழ்வு கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானத்தைத் தொடர்ந்து, உலகக் கல்லீரல் அழற்சி நாள் உலகளவில் முக்கியம் வாய்ந்ததானது. தேசிய, பன்னாட்டு அளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதை முதன்மை நோக்காகக் கொண்டதாக இந்நாள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஹெபடைடிஸ் பி நச்சுயிரியைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் பாருச் சாமியெல் பிளம்பெக் (Baruch Samuel Blumberg ) என்பவரை நினைவு கூரும் விதமாக, அவர் பிறந்த நாளான ஜூலை 28 ஆம் நாளுக்கு, உலகக் கல்லீரல் அழற்சி நாள் மாற்றப்பட்டது.

உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கடும் கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பேர் இந்நோயின் தாக்கத்தால் மரணமடைகின்றனர். கோவிட் 19 நோய்த் தொற்றுக்குப் பிறகு, கல்லீரல் அழற்சி நோய், உலகின் மிகக் கொடிய வைரஸாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புதிய கல்லீரல் நோய் அழற்சியால் பாதிக்கப்படுகின்றனர். 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கல்லீரல் அழற்சி நோயுடன் வாழ்கின்றனர்.

2030 ஆம் ஆண்டுக்குள் கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்கும் உலகளாவிய இலக்கை அடைய இன்னும் ஆறு ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், இதனை எட்ட முடியாமல் பின்னோக்கியேப் போய்க் கொண்டிருக்கிறோம்.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் பாதிப்பின் சரும அறிகுறிகள்... சாதாரணமா எடுத்துக்காதீங்க!
World Hepatitis Day

உலகளவில் கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்கள் கல்லீரல் அழற்சி பி Hepatitis B அல்லது கல்லீரல் அழற்சி சி Hepatitis C நோயுடன் வாழ்கின்றனர். சரியான கவனமும் சிகிச்சையும் அளிக்கப்படாத கல்லீரல் அழற்சி பி மற்றும் கல்லீரல் அழற்சி சி நோய்கள் முற்றி, கல்லீரல் இழை நார் வளர்ச்சி நோயாகி (சிர்ரோசிஸ்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு ஆளாகி உயிரிழக்க நேரிடுகிறது.

எயிட்சு நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்தே அனைவரும் அதிக கவனம் கொண்டுள்ள நிலையில், உண்மையில் எயிட்சின் பாதிப்பால் நேரும் மரணத்தை விட, வேகமாக, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் கல்லீரல் அழற்சி பி அல்லது கல்லீரல் அழற்சி சி நோய் பாதிப்பால் மரணமடைகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

தற்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உலகக் கல்லீரல் அழற்சி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இலவசமாக நோய் கண்டறிதல், பதாகை பரப்புரைகள், செயல் விளக்கங்கள், சொல்லாடல் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தடுப்பூசி முகாம்கள் போன்ற பல நிகழ்வுகள் இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு, உலக அளவிலான கல்லீரல் அழற்சி குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கல்லீரல் காலி... ஜாக்கிரதை!
World Hepatitis Day

கல்லீரல் அழற்சி இல்லாத உலகத்தை உணரவும், 2030 ஆம் ஆண்டுக்குள் இலக்குகளை அடையவும் சோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது. 

  • அதிகமான மக்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்த, சோதனை மற்றும் நோயறிதலுக்கான அணுகலை விரிவுபடுத்துதல்.

  •  தடுப்பூசி, பாதுகாப்பான தொற்று மற்றும் ஊசி நடைமுறைகள் மற்றும் கல்வி மூலம் ஹெபடைடிஸ் தடுக்க முதன்மை பராமரிப்புத் தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்துதல்.

  • சமூக அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு நெருக்கமான கவனிப்பைக் கொண்டுவர கல்லீரல் அழற்சிச் சிகிச்சையை பரவலாக்குதல்.

  • கல்லீரல் அழற்சி சிகிச்சையை ஏற்கனவே உள்ள சுகாதார சேவைகளுக்குள் ஒருங்கிணைத்தல், கல்லீரல் அழற்சிக்கான சிகிச்சையை முதன்மை பராமரிப்பு, எச்.ஐ.வி சேவைகள் மற்றும் தீங்கு குறைப்பு திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களுடன் எளிதில் அணுகக் கூடியதாக மாற்றி, சிறப்பான கவனிப்பை வழங்குதல்.

  • பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் குடிமக்களை ஈடுபடுத்துதல், கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முயற்சிகளினை ஆதரித்தல் 

என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இந்த அழற்சி நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளாக முன்னெடுத்துச் செயல்படுகின்றன. 

இதையும் படியுங்கள்:
கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு உதவும் அஸ்வகந்தா!
World Hepatitis Day

2024 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக, 'இது நடவடிக்கைக்கான நேரம்' என்பது தரப்பட்டிருக்கிறது. இத்தலைப்பில் இந்த ஆண்டுக்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் பல்வேறு உலக நாடுகளில் நடத்தப்பட இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் மது பழக்கத்தால், இந்நோயின் தாக்கத்தால் பலருக்கும் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், கல்லீரல் அழற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதாக இருக்கிறது. இந்த 2024 ஆம் ஆண்டுக்கான 'இது நடவடிக்கைக்கான நேரம்’ எனும் கருத்துருவில் பல்வேறு நிகழ்வுகளை நடத்திட வேண்டும். அதன் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி, இந்நோய் வராமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாக்கிட வேண்டும். மது அருந்தும் பழக்கத்திற்கு ஆட்படாமல் இளைஞர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும். அதற்கு மது விற்பனையைப் பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்த வேண்டும். படிப்படியாகக் குறைத்து, மது விலக்கு மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com