பதாதி முதல் வெள்ளம் வரை... பண்டையக் கால 19 வகை படைகள் பற்றி அறிவோமா?

Padaigal
Padaigal
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

பண்டையப் படைகளை பதாதி, சேனாமுகம், குமுதம், கணகம், வாகினி, பிரளயம், சமுத்திரம், சங்கம், அநீகம், அக்கோணி, ஏகம், கோடி, மாசங்கம், விந்தம், மாகுமுதம், பதுமம், நாடு, மாகடல், வெள்ளம் என்று மொத்தம் 19 பெயர்களில் பிரித்து அதனுள்ளே அடக்கம், அவற்றில் தேர், யானை, குதிரை, காலாள் எத்தனை இருக்க வேண்டும்? என்று ஒரு கணக்கும் வைத்திருந்தனர்.

1. பதாதி

பதாதி என்பது 1 தேர், 1 யானை, 3 குதிரை, 5 காலாட்களைக் கொண்ட மிகச்சிறிய படையாகும்.

2. சேனாமுகம்

சேனாமுகம் என்பது 3 பதாதிகளை உள்ளடக்கியது. அதாவது, 3 தேர், 3 யானை, 9 குதிரை, 15 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

3. குமுதம்

குமுதம் என்பது 3 சேனாமுகம் கொண்டது. அதாவது, 9 தேர், 9 யானை, 27 குதிரை, 45 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

4. கணகம்

கணகம் என்பது 3 குமுதம் கொண்டது. அதாவது, 27 தேர், 27 யானை, 81 குதிரை, 135 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

5. வாகினி

வாகினி என்பது 3 கணகம் கொண்டது. அதாவது, 81 தேர், 81 யானை, 243 குதிரை, 405 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

6. பிரளயம்

பிரளயம் என்பது 3 வாகினி கொண்டது. அதாவது, 243 தேர், 243 யானை, 729 குதிரை, 1215 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

7. சமுத்திரம்

சமுத்திரம் என்பது 3 பிரளயம் கொண்டது. அதாவது, 729 தேர், 729 யானை, 2187 குதிரை, 3645 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

8. சங்கம்

சங்கம் என்பது 3 சமுத்திரம் கொண்டது. அதாவது, 2187 தேர், 2187 யானை, 6561 குதிரை, 10935 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

9. அநீகம்

அநீகம் என்பது 3 சங்கம் கொண்டது. அதாவது, 6561 தேர், 6561 யானை, 19683 குதிரை, 32805 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

இதையும் படியுங்கள்:
ரெய்னா விளையாட நினைக்கும் ஐபிஎல் அணி இதுதான்... சென்னை அல்ல!
Padaigal

10. அக்கோணி

அக்கோணி என்பது அக்கோகிணி, அக்ரோணி, அக்குரோணி, அக்ஷௌனி என்றும் சொல்லப்படுகிறது. அக்கோணியானது 3 அநீகம் கொண்டது. அதாவது, 19683 தேர், 19683 யானை, 59049 குதிரை, 98415 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

11. ஏகம்

ஏகம் என்பது 8 அக்ரோணி கொண்டது. அதாவது, 157464 தேர், 157464 யானை, 472392 குதிரை, 787320 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

12. கோடி

கோடி என்பது 8 ஏகம் கொண்டது. அதாவது, 1259712 தேர், 1259712 யானை, 3779136 குதிரை, 6298560 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

13. மாசங்கம்

மாசங்கம் என்பது 8 கோடி கொண்டது. அதாவது, 10077696 தேர், 10077696 யானை, 30233088 குதிரை, 50388480 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

14. விந்தம்

விந்தம் என்பது 8 மாசங்கம் கொண்டது. அதாவது, 80621568 தேர், 80621568 யானை, 241864704 குதிரை, 403107840 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

15. மாகுமுதம்

மாகுமுதம் என்பது 8 விந்தம் கொண்டது. அதாவது, 5159780352 தேர், 5159780352 யானை, 15479341056 குதிரை, 3224862720 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

16. பதுமம்

பதுமம் என்பது 8 மாகுமுதம் கொண்டது. அதாவது, 644972544 தேர், 644972544 யானை, 1934917632 குதிரை, 25798901760 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

17. நாடு

நாடு என்பது 8 பதுமம் கொண்டது. அதாவது, 41278242816 தேர், 41278242816 யானை, 123834728448 குதிரை, 206391214080 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

18. மாகடல்

மாகடல் என்பது 8 நாடு கொண்டது. அதாவது, 330225942528 தேர், 330225942528 யானை, 990677827584 குதிரை, 1651129712640 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

19. வெள்ளம்

வெள்ளம் என்பது 8 மாகடல் கொண்டது. அதாவது, 2611807510224 தேர்,2611807510224 யானை, 7925422620672 குதிரை, 13209037701120 காலாட்களைக் கொண்டதொரு படையாகும்.

முனைவர் தமிழப்பன் என்பவர் எழுதிய ‘தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்’ நூலின் பின்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள அட்டவணைப் பகுதியில் பக்கம் 9 முதல் 11 வரை மேற்காணும் படைகள் குறித்த குறிப்புகள் பிங்கல நிகண்டுவில் இடம் பெற்றிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிம்பு கேட்டதும் 'சம்மதம்'னு சொன்ன சந்தானம்!
Padaigal
logo
Kalki Online
kalkionline.com