'நாகரிகக் கோமாளி' என்.எஸ்.கே.வின் சமூகப் புரட்சி ரகசியங்கள்!

நவம்பர் 29, கலைவாணர் என்.எஸ்.கே. பிறந்த தினம்
Kalaivanar NSK's birthday
N.S. Krishnan
புவனா நாகராஜன்

கடந்த 1980முதல் கல்கி ,மங்கையர்மலர், தினமலர்,வாரமலர், பெண்கள் மலர், சமையல் குறிப்புகள் தமிழ்நாடு இ பேப்பர் மேலும் சில பத்திாிகைகளில் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். தமிழ்நாடு இ பேப்பரில் 50க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறேன். எனது கணவரின் உந்துதல் மற்றும் கல்கி குழுமம், மங்கையர்மலர், தினமலர் கொடுத்த ஊக்கம் தொடா்கிறேன்.

Updated on: 

நகைச்சுவை உணர்வுகளை, சமுதாய சீா்திருத்தக் கருத்துகளை தனக்கே உரிய பாணியில் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் பரப்பியவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணனின் (என்.எஸ்.கிருஷ்ணன்) பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளோடு பயணிப்போம்.

எளிமையானவர், சிாித்த முகம், நல்ல உடல்வாகு, சீாிய சிந்தனை, சமூக சீா்திருத்தமே உயிா் மூச்சென தான் கொண்டு, தான் கொண்ட கொள்கையில் மாறாது பகுத்தறிவு சிந்தனைகளை தெருக்கூத்து பாடல்கள், உடல் மொழிக்கேற்ற முகபாவத்தை தன்னகத்தே கொண்ட பன்முக வித்தகர் இவர். காலத்தை வென்ற நாகரிக கோமாளி என்,எஸ்.கிருஷ்ணன் ஒரு சமுதாய சீா்திருத்த சிந்தனை சிற்பி என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
‘வலியச் சிறுத்தை’ எனப்படும் ஜாகுவார் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!
Kalaivanar NSK's birthday

சுயமரியாதை, சமுக நல்லிணக்கம், பகுத்தறிவு, மனிதாபிமானம் கொண்ட மக்கள் நேசனாக வாழ்ந்து உயரிய கருத்துகளை நகைச்சுவை உணர்வோடு, அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் பதியன் போட்ட பத்தரை மாற்றுத்தங்கம் என்றே இவரைப் பாராட்டலாம். சமூக சீா்திருத்தக் கருத்துகளால் அறிஞா் அண்ணாவுடன் நல்ல நட்பு, சினிமா மூலம் பல ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட மாமேதைதான் என்.எஸ்.கிருஷ்ணன்.

கலைத்துறையில் இவரது கருத்துகளுக்கும், நகைச்சுவைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொிய பொிய ஜாம்பவான்களின் திரைப்படங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவே இவரது நகைக்சுவைக் காட்சிகள் அத்திரைப்படத்தில் சோ்க்கப்பட்ட வரலாறும் உண்டு! ‘கலையைப் போற்றுவது, செய்யும் தொழிலைப் போற்றுவதாகும்’ என்ற கொள்கையைப் பரப்பிய பகலவனே அவர்தான்.

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆரோடு ஒரு பாடல் காட்சியில் அசாத்தியமான நடிப்பால் அனைவர் மனதையும் கட்டிப்போட்டவர் என்.எஸ்.கே. ‘ரயில் பெட்டிதான் ஜாதியை ஒழித்தது’ என்ற பாடலில்தான் எவ்வளவு அர்த்தம், சமுக சிந்தனைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டல்லவா! அதேபோல, ‘விஞ்ஞானத்தை வளா்க்கப் போறேண்டி’ பாடலில்தான் எத்தனை சமூக விஞ்ஞான முன்னேற்றம்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்!
Kalaivanar NSK's birthday

என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு சமூகப் போராளி. நல்ல சிந்தனைச் சிற்பி என்றே புகழலாம். அதேபோல, நடுத்தர வர்க்கத்தினர்களின் வாழ்க்கையில் நடக்கும் பொருளாதார நிலையை, யதாா்த்தங்களை விளக்கும் இவரது சீா்திருத்தக் கருத்துகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சமுதாய சீா்திருத்தக் கருத்துக்கள், மூடநம்பிக்கைகளை ஒழிக்க வல்ல தகவல்களை நகைச்சுவை எனும் உளி கொண்டு செதுக்கியவர். அவர் காலத்தால் அழியாத கலைப்பெட்டகம். அப்படிப்பட்ட புரட்சிக் கருத்துகள் கொண்ட நகைச்சுவையாளரை, சமுதாயம் முன்னேற பாடுபட்டவரை அவரது பிறந்த நாளில் நினைவு கூறுவோம்!

logo
Kalki Online
kalkionline.com