1948 ஆஷஸ் சாதனை: 'தி இன்வின்சிபிள்ஸ்' மற்றும் டான் பிராட்மேனின் மறக்க முடியாத சகாப்தம்!

தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் சுவாரஸ்ய தகவல்கள்.
ஆஷஸ் சாதனை - Don Bradman
ஆஷஸ் சாதனை - Don Bradman
Updated on

1948 இல் இங்கிலாந்து மண்ணில் தோல்வியறியாமல் விளையாடிய ஆஸ்திரேலிய “தி இன்வின்சிபிள்ஸ்” அணியின் ஆஷஸ் சுற்றுப்பயண சாதனைகளை இந்த கட்டுரை விரிவாக பதிவு செய்கிறது. டான் ப்ராட்மன், ஆர்த்தர் மோரிஸ், டென்னிஸ் காம்ப்டன் ஆகியோரின் ரன் சாதனைகள், ஒவ்வொரு டெஸ்டின் முடிவுகள், பில் ஜான்ஸ்டன், ரே லிந்துவால் போன்ற பவுலர்களின் விக்கெட் வேட்டை அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒருவேளை இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய ரன் மிஷின் என்று அழைக்கப்பட்டடான் ப்ராட்மன் அந்த 1948 ஆம் வருடத்தின் அவரது கடைசி 5 டெஸ்டுக்கள் விளையடாமல் ஓய்வு பெற்று இருந்திருந்தால் அவரது டெஸ்ட் சராசரி ரன்கள் 100 க்கும் மேலே இருந்திருக்கும். ஆம். 47 டெஸ்டுக்கள் முடிவில் டான் ப்ராட்மனின் டெஸ்ட் சராசரி ரன்கள் 107.44 என்று ஜொலித்தது.

1948 இந்த குறிப்பிட்ட ஆஷஸ் தொடரில் டான் ப்ராட்மன் 5 டெஸ்டுக்களில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் களில் முதல் இடம் பிடிக்கவில்லை.

அந்த பெருமை ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஆர்த்தூர் மொரிஸ்க்கு சென்றது. இவர் எடுத்த ரன்கள் 696.

இரண்டாவது இடம் இங்கிலாந்து வீரர் டென்னிஸ் காம்ப்டன். ரன்கள் 562.

மூன்றாவது இடம் தான் ப்ராட்மனுக்கு கிட்டியது 508 ரன்கள்.

ப்ராட்மன் அவரது கடைசி டெஸ்டில் இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆன பொழுது அவருடன் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தவர் ஆர்த்தூர் மொரிஸ்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 500 ரன்கள், 8 மெய்டன் ஓவர்கள்: கிரிக்கெட் வரலாற்றின் டாப் 3 மர்மங்களும் சாதனைகளும்!
ஆஷஸ் சாதனை - Don Bradman

அந்த இன்னிங்சில் ஆர்த்தூர் மொரிஸ் எடுத்த ரன்கள் 196

மூன்று சதங்கள் (196, 182 & 105)

டென்னிஸ் காம்ப்டன் 2 சதங்கள் (184 & 145)

டான் ப்ராட்மன் 2 சதங்கள் (173 & 138)

இந்த குறிப்பிட்ட சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி ஆடிய மொத்த ஆட்டங்கள் 34 (5 டெஸ்டுக்கள் உட்பட).

வெற்றி பெற்றது 4 டெஸ்டுக்கள்.

1 டெஸ்ட் டிராவில் முடிந்தது.

34 ஆட்டங்களில் வெற்றி 25

9 டிராவில் முடிந்தன.

டான் பிராட்மேனின் கடைசி ஆட்டம் மற்றும் ஆஷஸ் சாதனை பின்னணி:

சுற்றுப் பயணம் முழுவதும் தோல்வியியே தழுவாத டான் ப்ராட்மன் தலைமையில் ஆன குழுவிற்கு " The Invincibles " என்று அழைக்கப்பட்டனர். ("வெல்ல முடியாதவர்கள்")

முதல் டெஸ்ட் ட்ரெண்ட் பிரிட்ஜ்

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது.

இங்கிலாந்து 165 & 441

ஆஸ்திரேலிய அணி 509 & 98- 2

இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ்

ஆஸ்திரேலிய அணி. 409 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

ஆஸ்திரேலிய அணி 350 & 460 - 7 டிக்ளர்

இங்கிலாந்து 215 & 186

மூன்றாவது டெஸ்ட் ஓல்ட் டிராபோர்ட்

டிராவில் முடிந்தது.

ஆஷஸ் சாதனை - Don Bradman
ஆஷஸ் சாதனை - Don BradmanAI Image

இங்கிலாந்து 363 & 174 - 3 டிக்ளர்

ஆஸ்திரேலிய அணி 221 & 92 - 1

நான்காவது டெஸ்ட்

லீட்ஸ்

ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது.

இங்கிலாந்து 496 & 365 - 8 டிக்ளர்

ஆஸ்திரேலிய அணி 458 & 404 - 3

ஐந்தாவது டெஸ்ட்

ஓவல்

ஆஸ்திரேலிய அணி 1 இன்னிங்ஸ் 149. ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இங்கிலாந்து 52 & 188

ஆஸ்திரேலிய அணி 389

பவுலிங்கில் சாதித்தவர்கள் ஆஸ்திரேலிய அணியில் பில் ஜான்ஸ்டன், ரே லிந்துவால் தலா 27 விக்கெட்டுக்கள்.

இங்கிலாந்து வீரர் அலெக் பெட்ஸர் 18

ப்ராட் மனின் கடைசி டெஸ்டில் அவரை 0 ரன்னுக்கு அவுட் ஆக்கிய இங்கிலாந்து லெக் ஸ்பின் பவுலர் எரிக் ஹாலிஸ் அந்த இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் எடுத்தார்.

தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 52.

துவக்க வீரர் லென் ஹட்டன் ஒருவர் மட்டும்தான் இரட்டை எண்ணிக்கை ரன்கள் எடுத்தார். 30 ரன்கள்.

ஆஸ்திரேலிய பவுலர் ரே லிந்துவால் மொத்தம் எடுத்த விக்கெட்டுக்கள் 9.

இந்த சுற்றுப் பயணத்தில் 17 ஆஸ்திரேலிய வீரர்கள் கப்பலில் பயணம் மேற்கொண்டனர்.

நடுவில் ஒரு நாள் கொழும்புவில் (31.03.1948) ஆட்டம் ஆடினார்கள்.

இதையும் படியுங்கள்:
லார்ட்ஸ் மைதானமும் இந்திய கிரிக்கெட்டும்: கபில்தேவ் முதல் ஹர்மன்பிரீத் வரை படைத்த காவிய சாதனைகள்!
ஆஷஸ் சாதனை - Don Bradman

முதல் தர ஆட்டங்களில் எஸ்ஸக்ஸ் அணிக்கு எதிராக ஒரே நாளில் 721 ரன்கள் குவித்து சாதித்த ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 451 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சொமெர்செட் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் 374 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

சஸக்ஸ் அணிக்கு எதிராக வெற்றி ஒரு இன்னிங்ஸ் 325 ரன்களில், சர்ரே அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் 296 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஒர்சஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ப்ராட்மன் இந்த சுற்றுப் பயணத்தில் 2428 ரன்கள் குவித்து 89.92 சராசரி ரன்கள் பதிவு செய்தார்.

17 ஆஸ்திரேலிய வீரர்களில் இன்று உயிருடன் இருப்பவர் ஒருவர் மட்டுமே.

அந்த சுற்றுப்பயணத்தில் இளம் வீரர் ஆக திகழ்ந்த இடது கை பேட்ஸ்மன், நீல் ஹார்வே. அவருக்கு தற்பொழுதிய வயது 97.

இங்கிலாந்து அணிக்காக அந்த 5 டெஸ்டுக்கள் தொடரில் பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கை 21 வீரர்கள். அவர்களில் யாரும் தற்பொழுது உயிருடன் இல்லை.

டான் ப்ராட்மன் சராசரி ரன்கள் டெஸ்ட் 99.94

முதல் தர கிரிக்கெட் 95.14

இவர் டெஸ்ட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றதும் கிங் ஜார்ஜ் VI அவர்களால் ஸர் பட்டம் வழங்கி கவுரிக்கப்பட்டார் 1949 ஆம் ஆண்டில்.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு: ஒரே ஸ்கோரில் இரண்டு முறை சுருண்ட தென் ஆப்பிரிக்கா!
ஆஷஸ் சாதனை - Don Bradman

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த தொடர்களில் ஒன்றான 1948 ஆஷஸ் தொடரின் அரிதான தகவல்களையும், டான் பிராட்மேனின் வரலாற்றுச் சிறப்புமிக்க புள்ளியியல் விவரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு உங்கள் விளையாட்டு அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com