
2025-ஆம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாகும். விளையாட்டு என்பது ஆண்களின் கோட்டை என்கிற பிம்பத்தை உடைத்து, இந்தியச் சிங்கப்பெண்கள் உலக அரங்கில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர். விளையாட்டுத் துறையில் இன்றும் நிலவும் பாலினப் பாகுபாடுகளைக் கடந்து, தங்களின் அசாத்திய உழைப்பால் தேசத்தைப் பெருமைப்படுத்திய டாப் 10 வீராங்கனைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ஹரியானாவைச் சேர்ந்த இவர், எளிதாக எதிராளிகளைத் திணறடிப்பவர். 2022 காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றது இவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல். ராணுவத்தில் இணைந்து மற்ற பெண் குத்துச்சண்டை வீரர்களுக்குப் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. இவர், இந்திய ராணுவத்தின் முதல் பெண் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.
ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி, அர்ஜுனா விருது பெற்றவர். நாஞ்சிங்கில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையை வீழ்த்தி வெண்கலம் வென்றார். சீசன் இறுதிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய காம்பவுண்ட் வில்வித்தை வீராங்கனை இவரே. ஒன்பது உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களுடன் இந்தியாவின் மிகச்சிறந்த தடகள வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். காம்பவுண்ட் வில்வித்தையில் உலகின் 'நம்பர் 1' இடத்தை நெருங்கி வரும் இவர், மிகக் குறைந்த வயதிலேயே பல சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
தைவான் தடகள ஓபன் 2025-ல் 1500 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் இரட்டைத் தங்கம் வென்று சாதனை படைத்தார். இரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றும் இவர், ஹாக்கி வீராங்கனையாகத் தனது பயணத்தைத் தொடங்கி இன்று தடகளத்தில் முத்திரை பதித்து வருகிறார். இவர் பெற்றுள்ள இந்த இரட்டைத் தங்கம் ஆசிய தடகள அரங்கில் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.
போலந்தில் நடந்த சர்வதேசப் போட்டியில் 62.59 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். புவனேஸ்வரில் நடந்த போட்டிகளிலும் 60 மீட்டருக்கும் மேல் எறிந்து சாதனை படைத்தார். உத்தரப் பிரதேசத்தின் பகதூர்பூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், கரும்புகளை எறிந்து பயிற்சி செய்தவர் என்பது பலரும் அறியாத உண்மை. ஆசிய விளையாட்டில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவரே. பலமுறை தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து வருவது இவரது தொடர் உழைப்பிற்குச் சான்று. 60 மீட்டருக்கு மேல் சீராக எறியக்கூடிய உலகின் மிகச்சில வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
உலகின் சவாலான 'ரேலி டு மரோக்' (Rallye du Maroc) பந்தயத்தை வெற்றிகரமாக முடித்து, FIM உலக ரேலி சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2027 டக்கார் ரேலியில் இரு சக்கர வாகனத்தில் பங்கேற்கப் போகும் முதல் இந்தியப் பெண் இவர்தான். 2019-ல் மோட்டார் ஸ்போர்ட்ஸில் உலகப் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தவர். மிக மோசமான விபத்துகளைச் சந்தித்து, அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் பந்தயக் களத்தில் சாதிப்பது இவரது மன உறுதியைக் காட்டுகிறது.
தனது தம்பி பிரக்ஞானந்தாவுடன் இணைந்து உலகின் முதல் கிராண்ட்மாஸ்டர் உடன்பிறப்புகள் என்ற வரலாற்றைப் படைத்த வைஷாலி, 2025-ல் மீண்டும் FIDE கிராண்ட் ஸ்விஸ் பட்டத்தை வென்றார். சிறு வயது முதலே உலக அளவில் பல டைட்டில்களை வென்றவர் இவர். இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார். அமைதியான அணுகுமுறை மற்றும் ஆக்ரோஷமான ஆட்ட நுணுக்கங்கள் இவருக்குப் பல வெற்றிகளைத் தேடித்தருகின்றன.
தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு, புகழ்பெற்ற பெராரி (Ferrari) சர்வதேச சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள முதல் இந்தியப் பெண் இவரே. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர், ஆசிரியைப் பணியை விட்டுவிட்டுத் தனது கனவை நனவாக்கியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், தனது 30-களின் பிற்பகுதியில் ரேசிங் உலகிற்குள் நுழைந்து சாதித்து வருகிறார். கனவுகளைத் துரத்த வயது ஒரு தடையல்ல என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார்.
தீயணைப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் என்று கருதப்படும் இந்தப் போட்டிகளில், கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் 'Toughest Firefighter Alive' போன்ற பிரிவுகளில் இவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தீயணைப்புத் துறை என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்தைப் உடைத்தெறிந்துள்ளார் இந்த உத்தராகண்ட் வீராங்கனை. உத்தராகண்ட் காவல்துறையில் பணியாற்றும் இவர், பேரிடர் மீட்புப் பணிகளிலும் முன்னின்று செயல்படுபவர்.
2025 மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல இவரே அச்சாணி. ஒரே உலகக் கோப்பையில் 200 ரன்கள் மற்றும் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் இவர்தான். 2026 WPL ஏலத்தில் ₹3.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அதிக விலைக்குச் சென்ற வீராங்கனையாகவும் மாறினார். ஒரு ஆல்-ரவுண்டராக ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பவர். இக்கட்டான நேரங்களில் விக்கெட் எடுப்பதிலும், அதிரடியாக ரன் குவிப்பதிலும் வல்லவர்.
பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஃபுலா, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 44 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். ஒடிசாவின் ஒரு பழங்குடியினக் குடும்பத்தைச் சேர்ந்த ஃபுலா, பார்வைக் குறைபாட்டை ஒருபோதும் தடையாகக் கருதியதில்லை. நிதிப் பற்றாக்குறை இருந்தாலும், அதையும் தாண்டி விளையாட்டின் மீது கொண்ட காதலால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது வெற்றி, இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்குப் புதிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.