பூப்பெய்திய பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்

10 Healthy foods
10 Healthy foods

ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். அதே சமயம் கார்போஹைட்ரேட் மற்றும் கெட்ட கொழுப்புகளால் உடல் பருமன் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். அந்த வகையில் பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய 10 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. கருப்பு உளுந்து:

கருப்பு உளுந்து
கருப்பு உளுந்து

தோல் நீக்காத கருப்பு உளுந்தில் வடை, களி , சத்துமாவு செய்து கொடுக்கலாம்; பொடித்தும் சாப்பிடலாம். கருப்பு உளுந்தை வறுத்து பொடியாக்கி அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம், திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கருப்பு உளுந்து உதவும்.

2. நல்லெண்ணெய்:

நல்லெண்ணெய்
நல்லெண்ணெய்நல்லெண்ணெய்

நல்ல கொழுப்பு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். இது நல்லெண்ணெயில் கிடைப்பதால் உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

3. நாட்டுக்கோழி முட்டை:

நாட்டுக்கோழி முட்டை
நாட்டுக்கோழி முட்டை

பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு கொழுப்பு மிகவும் அவசியம் என்பதால் தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டுக்கோழி முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.

4. கம்பு:

கம்பு
கம்பு

எலும்புகள் வலுப்பெற உதவும் கால்சியம் கம்பில் அதிகமாக இருப்பதால், வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடக் கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரின் சோகக் கதை பற்றி அறிவோமா?
10 Healthy foods

5. பொட்டுக்கடலை லட்டு:

பொட்டுக்கடலை லட்டு
பொட்டுக்கடலை லட்டு

பொட்டுக்கடலையை நாட்டு சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பொட்டுக்கடலை லட்டாகவோ அல்லது வெறும் பொட்டுக்கடலையாகவோ சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

6. அசைவ உணவுகள்:

அசைவ உணவுகள்
அசைவ உணவுகள்

மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவை ஆற்றலை வழங்கும் என்பதால் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. கீரை வகைகள்:

கீரை வகைகள்
கீரை வகைகள்

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் ரத்தப்போக்கால் சிலருக்கு ரத்த சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

8. பாகற்காய், சுண்டைக்காய்:

பாகற்காய், சுண்டைக்காய்
பாகற்காய், சுண்டைக்காய்

வயிற்றில் இருக்கும் நாக்குப்பூச்சி காரணமாக சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மேலும் மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

9. சத்து மாவு உருண்டை:

சத்து மாவு உருண்டை
சத்து மாவு உருண்டை

கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டை பூப்பெய்திய பெண்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும்.

10. கொண்டைக் கடலை:

கொண்டைக் கடலை
கொண்டைக் கடலை

கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலை சிறந்தது என்பதால் வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும் பிரச்னைகளுக்கு சத்தான உணவுகள் மாதவிடாயை சீராக்கும்.

மேற்கூறிய 10 உணவுகளையும் பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு கொடுத்து வர, எதிர்காலத்தில் ஏற்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
கழுத்து வலியால் அவதியா? வீட்டிலேயே நிவாரணம் காண எளிய வழிகள்!
10 Healthy foods

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com