10 நிமிட இயற்கை சிகிச்சை: மன அழுத்தத்தைப் போக்கி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழி!

பறவைகளின் ஒலியும் தாய் சி நடையும் தரும் வியக்கத்தக்க உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகள்.
Nature Therapy | இயற்கை சிகிச்சை
Nature Therapy | இயற்கை சிகிச்சை
Updated on

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வின் மூலம் மரங்கள் சூழ்ந்த இடம் மற்றும் பறவைகளின் ஒலி இவற்றை பத்து நிமிடம் அனுபவிப்பதன் மூலம்  மனோதத்துவ ரீதியாக நம் மனநிலையில் மேம்பாடு ஏற்படும் என்று அறியப்பட்டுள்ளது. இவை இரண்டும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகத் தெரிகிறது.  பறவைகள் சத்தமிடும் இடத்தில் இருந்து அதை அனுபவிப்பதால் சோர்வு குறைந்து, நேர்மறை உணர்வுகள் அதிகரித்து நமக்கு புத்துணர்ச்சி ஊட்டும்‌. 

இன்றைய நவீன உலகில் பச்சைபசேலென்ற இடங்களை அழித்து கட்டடங்களாக மாறுவது தடுக்க முடியாததாக உள்ளது. இச்சூழலில் ஆராய்ச்சியாளர்கள் இயற்கையான மரங்கள் சூழ்ந்த இடமும், பறவைகளின் ஒலியும் மக்களை இயற்கை சூழல் மூலம் மனநிலை நல்ல மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறது‌. இந்த சூழலை அனுபவித்தவர்கள் உணர்வுகள் ஆரோக்கியமாகவும் மனநிறைவையும் பெறுகிறார்கள். 

மரங்களும் பறவை சத்தமும் இணைந்து ஒரு நல்ல இயற்கை இணைப்பை தருகிறது. இன்றைய அவசர யுகத்தில் மனிதன் அதிக மன அழுத்தத்தாலும்  சோர்வாலும் பாதிக்கப்படுகிறான்‌. இதனால் மன    சோர்வடைகிறான். நாம் என்னதான் வேறு சில பழக்கங்களில் ஈடுபட்டாலும் இயற்கையோடு ஒன்றி அவற்றை ரசித்து அதனால் ஏற்படும் மகிழ்ச்சி வேறு எந்த விதத்தலூம் அடைய முடியாது. வேறு எந்த சாதனமும் தேவையில்லை. இயற்கையை நாடினால் போதும்‌.

Old man and Bird | இயற்கை சிகிச்சை
Old man and Bird | இயற்கை சிகிச்சைImg Credit: Gemini

நாம் வசிக்கும் சுற்றுச்சூழலை நன்கு பாதுகாத்து இயற்கையை நாடும் வண்ணம் ஒரு சூழலை ஏற்படுத்தினாலே போதும். நமக்கு அமைதி கிடைக்கும்‌. நகரங்களில் அதிவேக வளர்ச்சியால் இயற்கைகள் அழிக்கப்படுகின்றன. நாம் வசிக்கும் இடத்தில் மரங்களும் பறவைகள் சூழ்ந்த இடமும் இருந்தால் ஒவ்வொருவரின் மனநிலையை மேம்படுத்த எந்த மருத்துவமும் தேவையில்லை‌. இயற்கை சூழலை அதிகப்படுத்தி, இயற்கையான பறவைகளின் சத்தத்தையும் (இயற்கை சிகிச்சை) அதிகரிக்கப்படும் போது அந்த சூழலை அனுபவிப்பவர்கள் நல்ல மன ஆரோக்கியத்தோடு வாழ்வார்கள் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இதையயும் தெரிஞ்சுக்கோங்க இரத்த அழுத்தத்தையும் மூட்டுவலியையும் குறைக்கும் தாய் சி (Tai Chi) நடை

உடலை வருத்தாமல் அதிக சிரமமின்றி நம் மூச்சுகாகாற்றைச் சீரமைத்து செய்யும் ஒரு விழிப்புணர்வு நடைதான் Tai Chi நடை. இந்த பயிற்சியை மேற்கொள்வதால் மூட்டுவலிகுறைந்து உடல்நிலை சமச்சீரான நிலை பெறுகிறது.  

  • முதலில் நேராக நில்லுங்கள்

  • உடலை தளர்வாக வைக்கவும்

  • மூச்சை மெதுவாக்கி ஒருமுகப்படுத்தவும்.

Walking
Walking

செய்முறை:

முதலில் உங்கள் உடல் எடையை ஒரு காலில் முழுமையாக தாங்குங்கள்.

மற்றோரு காலை முன்னே வைக்கும் போது குதிகாலை மீது வாக் தரையில்  ஊற்றுங்கள்.

கால் முழுவதையும் தரையில் பதித்து எடையை முன் பாதத்திற்கு மாற்றுங்கள்.

உங்கள் மூழங்கைகளை முன்னால் நீட்டி மணிக்கட்டுகளை தளர்வாக்கி கைகளால் வட்டமிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
10,000 ஸ்டெப்ஸ் பொய்! ஆரோக்கியமாக வாழ உண்மையில் எத்தனை ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும்?
Nature Therapy | இயற்கை சிகிச்சை

தாய் சி என்பது உங்கள் கைகளை முன்னால் நீட்டுவது மட்டுமல்ல‌ ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு நோக்கம் உண்டு.

வெள்ளை கொக்கு இறக்கைகளை விரிக்கும் அசைவைச் செய்யுங்கள்‌ இரண்டு பாதங்களும் தரையில் இருக்க வேண்டும். உங்கள் கைகள் எதிர்மாறாக இருக்க வேண்டும்‌. உங்கள் சமநிலையை சோதிக்கும் போது நீங்கள் முன்னும் பின்னுமாய் நகர்வீர்கள். தாய் சி என்பது சீனமுறையாகும்‌.

சாதாரண நடையில் நாம் முன்னோக்கி நகர்கிறோம்‌ இதில் வேகம் இருக்கும். ஆனால் தாய் சி நடை மெதுவான நடனம் போல் இருக்கும்‌. நடக்கும் போது முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். மூச்சுக் காற்று சீராக இருக்கவேண்டும்‌.

இதன் மூலம் உடல் சமநிலை பெறுவதால் தடுமாற்றம் மற்றும் கீழே விழுவதை குறைக்கிறது‌.

ஒவ்வொரு அடியையும் கவனிப்தால் மூளை செயல்பாடு அதிகமாகிறது.

இது தசைகளை பலப்படுத்தி மூட்டு வலியைக் குறைக்கிறது‌.

மேற்கூறியவற்ற கவனித்து அவற்றை மேற்கொண்டால் நம் உடல் மன ஆரோக்கியம் மேம்படும

இதையும் படியுங்கள்:
மனித மூளையின் ரகசியங்கள்: 200 மில்லி செகண்டில் நடக்கும் விந்தை!
Nature Therapy | இயற்கை சிகிச்சை
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com