Google CEO சுந்தர் பிச்சையின் சுறுசுறுப்புக்குக் காரணமான 3 உணவுகள்!

Google CEO சுந்தர் பிச்சை அவர்களின் காலை உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த இந்தத் தகவல் இளைஞர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
Google CEO Sundar Pichai
Google CEO Sundar Pichai
Updated on

உலக அளவில் சிறந்த தலைவர்களாக மதிக்கப்படும் சிலரை இன்றைய இளைஞர்கள் உதாரண புருஷர்களாக எண்ணி அவர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி முன்னேற முயற்சிக்கின்றனர். இதனைத் தவறென்று எவரும் கூறிவிட முடியாது. Google CEO சுந்தர் பிச்சை பிரேக்ஃபாஸ்டில் தவறாமல் சேர்த்துக் கொள்ளும் மூன்று வகையான உணவுகள் எவை என்பதை இப்பதிவில் காணலாம்.

ஓர் இந்தியப் பிரஜையாய்ப் பிறந்து வளர்ந்த இவர் காலையில் செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டே டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கொதிக்கும் தண்ணீரில் டீ இலைகளைப் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பிறகு அதில் பால், சர்க்கரை சேர்த்து தயாரிப்பதே டீ.

பிற்காலத்தில் அதனுடன் ஏலக்காய் பவுடர், இஞ்சி, மிளகுத் தூள், புதினா போன்ற ஸ்பைஸஸ் சேர்த்து இஞ்சி டீ, ஏலக்காய் டீ போன்ற தனித்துவமான பெயர்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டீயுடன் சுந்தர் பிச்சை எடுத்துக்கொள்ளும் மற்றொரு உணவு முட்டை ஆம்லெட்.

முட்டையுடன் உப்புத் தூள் மற்றும் பெப்பர் தூள் சேர்த்து நன்கு பீட் பண்ணிக்கணும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து பரவலாக எண்ணெய்யைத் தடவி, அதில் பீட் பண்ணி வைத்துள்ள முட்டைக் கரைசலை ஊற்றணும். அதன் மீது மெல்லிசா நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமானவுடன் மடித்தெடுத்துப் பரிமாறுவது பாரம்பரிய ஆம்லெட்.

நாளடைவில் வெங்காயத்தின் மீது தக்காளித் துண்டுகள், துருவிய சீஸ் மற்றும் துருவிய கேரட், லெட்டூஸ் மற்றும் ஆலிவ்ஸ் போன்ற காய்களையும் அடுக்கடுக்காக சேர்த்து, அதிக சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக ஆம்லெட்டை தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கூகுள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுந்தர் பிச்சை!
Google CEO Sundar Pichai

ஆம்லெட்டுடன் சேர்த்து டோஸ்ட் செய்த பிரட்டையும் எடுத்துக்கொள்கிறார் சுந்தர் பிச்சை. ஒயிட் பிரட், மில்க் பிரட், முழு தானிய பிரட், சோர்டக் (Sourdough) பிரட் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பிரட் டோஸ்டர் அல்லது சூடான தவ்வாவில் வைத்து பிரட் பொன்னிறமாகவும் க்ரன்ச்சியாகவும் ஆன பின் உட்கொள்ளலாம். டோஸ்ட் செய்த இரண்டு ஸ்லைஸ்களுக்கு நடுவில் பட்டர், ஜாம், மசித்த அவகாடோ பழம், சீஸ் ஸ்பிரெட், ஸ்பைஸி வெஜிடெபிள் மசாலா, முட்டை ஆம்லெட் போன்றவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்து உட்கொள்ளலாம்.

காலை உணவுடன் இந்த மூன்று வகை உணவுகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் அன்றைய புரோட்டீன் தேவையில் ஒரு பகுதி உடலுக்குக் கிடைத்துவிடும்.

logo
Kalki Online
kalkionline.com