
நம் உடலில் மிகவும் முக்கியமான பாகமாக கருதப்படுவது இதயம் தான். அந்த இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மற்றும் உணவுமுறைகளை சரியாக கடைப்பிடித்தாலும், நாம் தினமும் யோகாசனம் செய்வது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து இதயத்தை பலப்படுத்த உதவுகிறது. நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவக்கூடிய 5 யோகாசனங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. தடாசனா
கால்கள் இரண்டையும் சேர்த்து கைகளை பக்க வாட்டில் வைக்கவும். பிறகு மூச்சை நன்கு இழுத்து விடவும். கைகளை தலைக்கு மேல் தூக்கி நேராக வைக்கவும். இருகைகளின் உள்ளங்கைகள் நேராக பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். 30 லிருந்து ஒரு நொடி வரை இப்படி இருக்கலாம். இந்த பயிற்சியால் இரத்த ஓட்டம் சீராகும். நுரையீரல் செயல்பாடு சீராகும்.
2. புஜங்காசனா
நாகப் பாம்பு மாதிரி போஸ். இது இதயத்தைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தும். இந்த யோகாமூலம் ஆக்சிஜன் அதிகம் உள்ளே செல்லும் இதயம் மற்றும் நுரையீரல் ஊக்கப்படுத்தப் படுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
எப்படிச் செய்வது
கீழே உங்கள் வயிறு கால்கள் படும் படியாக உடலை நீட்டி உங்கள் தோளுக்கு கீழ் கைகளை வைத்து தலையை மேலே தூக்கிய நிலையில் வைக்கவும். 15லிருந்து 20 நொடி இப்படி இருக்கலாம். இந்த யோகா இதயம் மற்றும் நுரையீரல் வலுப்படும். உடல் நெகிழ்வாகும். சோர்வையும், பதட்டத்தையும் போக்கும்.
3. சேது பந்தாசனா
பாலம் போன்ற நிலையில் இருப்பது. இது இதயத்தைச் மேம்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
எப்படிச் செய்வது
கீழே படுத்து கால்களை மடக்கி வைத்து உங்கள் இரு கைகளை நீட்டி உள்ளங்கைகள் தரையில் படுமாறு வைக்கவும். இந்த நிலையில் உங்கள் இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். உங்கள் தொடைகளும், கால்களும் parallel ஆக இருக்க வேண்டும். இந்நிலையில் 30 நொடிகள் இருக்கலாம். இதனால் உங்கள் மார்பு மற்றும் நுரையீரல் நன்கு விரியும். இது பதட்டம் சோர்வை குறைக்கும்.
4. அர்த மத் ஸ்யேந்திராசனா
இந்த ஆசனம் உடல் நச்சுக் கழிவுகளை நீக்கும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். இதயத்தை ஆரோக்கியமாக்கும்.
எப்படிச் செய்வது
கீழே உட்காரவும். உங்கள் வலது முட்டியை மடக்கி வலது காலை இடதுபக்க தொடைக்கு வெளியே வைக்கவும். இப்போது இடது முட்டியை மடக்கி இடது காலை வலது இடைக்கு அருகே வைக்கவும். உங்கள் வலது கையை உங்களுக்குப் பின்னால் வைக்கவும். மூச்சை நன்கு இழுத்து விடவும். 30 நொடி இப்படி இருக்கலாம். இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு இரத்த ஓட்டம் சீராகும். முதுகு வலி தீரும். நச்சுக்கள் நீங்கும்.
5. அதோ முக சவாசனா
இந்த யோகாசனம் கைகள், தோள்கள் மற்றும் கால்களுக்கு நல்ல வலு கொடுக்கும்.
எப்படிச் செய்வது
உங்கள் கைகள் தோளுக்கு கீழாகவும், முட்டிகள் இடுப்பிற்கு கீழாகவும் வைக்கும் நிலையில் இருங்கள். உங்கள் கைகளை விரித்து தரையில் வைக்கவும். உங்கள் இடுப்பை மேல் நோக்கி வைத்து உங்கள் கால்களை உறுதிப்படுத்தவும். உங்கள் உடல் V வடிவில் இருக்க வேண்டும். உங்கள் தலையை இரு கைகளுக்கிடையே வைக்கவும். இந்த யோகாசனம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இடுப்பிற்கு வலு தரும் சோர்வை போக்கி மன அமைதியைத் தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. ஆலோசனைக்கு சரியான தகுந்த பயிற்சியாளரை அணுகவும்)